சௌரசி கோயில்கள்

சௌரசி கோயில்கள் (Chaurasi Temple) இந்தியாவின் இமாச்சலப் பிரதேசத்தின் மேற்கில் உள்ள சம்பா மாவட்டத்தின் பார்மர் எனும் ஊரில், கிபி 7ம் நூற்றாண்டு காலத்திய 84 இந்துக் கோயில்களின் தொகுப்பாகும்.[1]
பெயர்க்காரணம்
[தொகு]சௌரசி எனும் இந்தி சொல்லிற்கு 84 என்று பொருள். எனவே இக்கோயில் வளாகத்தை 84 கோயில்கள் என உள்ளூர் மக்கள் அழைக்கின்றனர்.
புராண வரலாறு
[தொகு]84 சித்தர்கள் குருச்சேத்திரத்திலிருந்து சிவபெருமானை தரிசிக்க கையிலை மலைக்குச் செல்லும் வழியில், சம்பா மாவட்டத்தின் பார்மர் சமவெளியின் இயற்கை அழகில் மெய்மறந்து, அங்கேயே தங்கி தியானம் செய்யத் துவங்கினர்.[2] பின்னர் 84 சித்தர்களின் நினைவாக அவ்விடத்திலேயே 84 கோயில்கள் கட்டப்பட்டது.
அமைவிடம்
[தொகு]இமயமலையில் 20,000 அடி உயரத்தில், சம்பா சமவெளியின் சம்பா நகரத்திலிருந்து 65 கி.மீ. தொலைவில் சௌரசி கோயில்கள் உள்ளது.
கோயில்களின் அமைப்பு
[தொகு]பார்மர் சமவெளியில் அமைந்த சௌரசியா கோயில்களின் வளாகத்தின் மையத்தில் அமைந்த, அழகிய விமானத்துடன் கூடிய சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட மணிமகேஷ் கோயில், இலக்குமி கோயில் , பிள்ளையார் கோயில் மற்றும், நரசிங் கோயில்கள் புகழ் பெற்றவைகள் ஆகும். இங்கு பல கோயில்கள் மரத்தினால் கட்டப்பட்டுள்ளது.
இக்கோயிலைச் சுற்றிலும் 84 பெரிய மற்றும் சிறிய கோயில்கள் உள்ளது. பெரும்பாலன கோயில் கருவறைகளில் சிவலிங்கங்கள் உள்ளது. இக்கோயில் வளாகத்தில் கங்கைக் குளம் அமைந்துள்ளது. இக்கோயில்களில் சாமுண்டிக் கோயிலை இராஜா மாற வர்மன் கிபி 650ல் கட்டினார்.
முக்கியக் கோயில்கள்
[தொகு]- மணிமகேஷ் கோயில்
- நரசிங் கோயில்
- இலக்குமி கோயில்
- பிள்ளையார் கோயில்
- லட்சணா தேவி கோயில்[3]
- நரசிம்மர் கோயில்
- சாமுண்டிக் கோயில்
- முருகன் கோயில்
- அனுமான் கோயில்
- தருமர் கோயில்
- நந்திக் கோயில்
- கிருஷ்ணன் கோயில்
- மகாதேவர் கோயில்
- சீதள மாதா கோயில்
- சூரியலிங்கக் கோயில்
- குபேரலிங்கக் கோயில்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Chaurasi Temple
- ↑ "சௌரசி கோயில்கள்". Archived from the original on 2017-10-18. Retrieved 2017-11-04.
- ↑ Lakshana Devi Temple[தொடர்பிழந்த இணைப்பு]