கலடாப் காய்யியார் சரணாலயம்
கலடாப் காய்யியார் சரணாலயம் (Kalatop Khajjiar Sanctuary) இந்தியாவின் இமாச்சலப் பிரதேச மாநிலத்திலுள்ள சம்பா மாவட்டத்தில் கலடாப் மற்றும் காய்யியார் மலைவாழிடத்தில் அமைந்துள்ள ஒரு விலங்குகள் சரணாலயமாகும். இச்சரணாலயம் 30.69 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் விரிந்துள்ளது. சரணாலய பகுதியானது கலடாப், காய்யியார் ஆகிய இரு புறங்களிலிருந்தும் மலையேற்றத்துக்கு ஏற்றபடி அமைந்துள்ளது. டல்லவுசியிலிருந்து சுமார் 6 கி.மீ. தூரத்திலுள்ள இச்சரணாலயத்தில் அடர்த்தியான தேவதாரி மற்றும் பிர் காடுகள் 19.63 சதுர கிமீ பரப்பளவில் காணப்படுகின்றன. வால் நீண்ட வண்ணப்பறவைகள், செரோ வகை ஆட்டினங்கள், கருப்புக் கரடிகள் போன்றவை இங்குள்ள பொதுவான விலங்குகளாகும் [1]. ராவி ஆற்றின் பாதையோரம் அமைந்துள்ள இச்சரணாலயம் ஊசியிலைக் காடுகள் மற்றும் ஓக் மரங்களால் சூழப்பட்டுள்ளது.
- அட்சரேகை வரம்பு- 32°02´ முதல் 32°04´ வடக்கு
- தீர்க்கரேகை வரம்பு- 76°01´ முதல் 76°06´கிழக்கு
- அருகாமையில் உள்ள இரயில் பாதை- பதான் கோட் (86 கி.மீ).
- உயரம்- 1185 முதல் 2768 மீட்டர்
- வெப்பநிலை- 10 முதல் 35 °செல்சியசு
- ஆண்டு மழையளவு- 672.3 மி.மீ.
தாவரம், விலங்குகள்
[தொகு]நீலநிற பைன், தியோதர், ஓக் மரங்கள் நிறைந்த நன்கு வளர்ந்த காடுகள் இங்கு அடர்ந்திருக்கின்றன. கரடி, சிறுத்தை, இமாலய கருப்பு மார்டென்கள், மான்கள், அணில், செரோவ் வகை ஆடுகள், குள்ளநரி போன்ற பாலூட்டிகள் இச்சரணாயத்தில் வாழ்கின்றன.. கரும்பறவை எனப்படும் பறவைக் குடும்பத்தைச் சேர்ந்த பறவைகள் இங்குள்ளன. [2]. இவை தவிர 1. யுராசிய காடை 2. வெண்சிறகு கரும்பறவை 3. கருந்தலை காடை 4. செவ்வலகு குருவி 6. அமெரிக்க சாம்பல் தலை பறவை வகை போன்றவையும் இங்கு காணப்படுகின்றன.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "himachaltourism.gov.in". Archived from the original on 2010-03-24. பார்க்கப்பட்ட நாள் 2021-09-30.
- ↑ hpchamba.nic.in
புற இணைப்புகள்
[தொகு]- himachaltourism.nic.in பரணிடப்பட்டது 2007-01-15 at the வந்தவழி இயந்திரம்
- hptdc.gov.in பரணிடப்பட்டது 2019-03-15 at the வந்தவழி இயந்திரம்
- Kalatop Wildlife Sanctuary பரணிடப்பட்டது 2022-07-03 at the வந்தவழி இயந்திரம்