சோலன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சோலன்
सोलन
நகரம்
மேலிருந்து, இடமிருந்து வலம்: தோடா நடனம், சூலினி உற்சவம், சூலினி தேவி கோயில், யுங் டிருங் பௌத்த மடாலயம், தோலன், சோலன் நகரக் காட்சி
மேலிருந்து, இடமிருந்து வலம்: தோடா நடனம், சூலினி உற்சவம், சூலினி தேவி கோயில், யுங் டிருங் பௌத்த மடாலயம், தோலன், சோலன் நகரக் காட்சி
அடைபெயர்(கள்): இந்தியாவின் காளாண் நகரம்
சோலன் is located in Himachal Pradesh
சோலன்
சோலன்
இமாச்சலப் பிரதேசத்தில் சோலன் நகரத்தின் அமைவிடம்
சோலன் is located in இந்தியா
சோலன்
சோலன்
சோலன் (இந்தியா)
ஆள்கூறுகள்: 30°54′18″N 77°05′49″E / 30.905°N 77.097°E / 30.905; 77.097ஆள்கூறுகள்: 30°54′18″N 77°05′49″E / 30.905°N 77.097°E / 30.905; 77.097
நாடு இந்தியா
மாநிலம்இமாச்சலப் பிரதேசம்
மாவட்டம்சோலன் மாவட்டம்
ஏற்றம்1,502 m (4,928 ft)
மக்கள்தொகை (2011)
 • மொத்தம்39,256
 • தரவரிசை3
மொழிகள்
 • அலுவல் மொழிஇந்தி
 • வட்டார மொழிகள்பகாரி
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
அஞ்சல் சுட்டு எண்173212
தொலைபேசி குறியீடு எண்01792
வாகனப் பதிவுHP 14, HP 01S, HP 02S, HP 64, HP 59
சராசரி வெப்பம்18 °C (64 °F)
சராசரி கோடை வெப்பம்32 °C (90 °F)
சராசரி குளிர்கால வெப்பம்−2 °C (28 °F)
இணையதளம்hpsolan.gov.in
உலகின் மிக உயரத்தில், இமயமலை வழியாகச் செல்லும் கால்கா-சிம்லா தொடர்வண்டிப்பாதை

சோலன் (Solan) இந்தியாவின் இமாச்சலப் பிரதேசத்தின் சோலன் மாவட்டத் தலைமையிட நகரமும், நகராட்சியுமாகும். இமயமலையில் 1600 மீட்டர் உயரத்தில் அமைந்த இந்நகரம், மாநிலத் தலைநகரம் சிம்லாவின் தெற்கில் 46 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இந்நகரம், இந்தியாவின் சிறந்த மலைவாழிடமும், சுற்றுலாத் தலமும் ஆகும். [1]

முன்னாள் பிரித்தானிய இந்தியாவின் சுதேச சமஸ்தானமான பகத் இராச்சியத்தின் தலைநகரமாக சோலன் நகரம் விளங்கியது.[2]

வேளாண்மை[தொகு]

இந்நகரத்தில் காளான் வளர்ப்பு பெருமளவு நடைபெறுவதால், இந்நகரத்தை காளான் நகரம் என்றும் அழைப்பர், காளான் ஆய்வு இயக்குனரகம் சோலன் நகரத்தில் உள்ளது. இங்கு தக்காளி விளைச்சல் பெருமளவில் உள்ளது. மேலும் இந்நகரம் கோடைக் காலச் சுற்றுலாத் தலங்களில் ஒன்றாகும்.[3]

உலகப் பாரம்பரியக் களம்[தொகு]

சண்டிகர் மற்றும் சிம்லா இடையே மலைகள் வழியாகச் செல்லும் கல்கா-சிம்லா தேசிய நெடுஞ்சாலையில் சோலன் நகரம் உள்ளது. சோலன் நகரம் வழியாகச் செல்லும் கால்கா-சிம்லா தொடர்வண்டிப்பாதை உலகப் பாரம்பரியக் களங்களில் ஒன்றாக யுனெஸ்கோ அறிவித்துள்ளது.[4]

மக்கள்தொகை பரம்பல்[தொகு]

2011ம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 3343 ஹெக்டேர் பரப்பளவு கொண்ட சோலன் நகரத்தின் மொத்த மக்கள் தொகை 39,256 ஆகும். மொத்த மக்கள் தொகையில் ஆண்கள் 21,182, பெண்கள் 18,074 ஆக உள்ளனர். எழுத்தறிவு விகிதம் 93.02 % ஆக உள்ளது. இந்து சமய மக்கள் தொகை 93.05% ஆகவுள்ளது. இசுலாம், சீக்கியம், கிறித்தவம், பௌத்த சமயத்தவர்கள் 6.95% ஆக உள்ளனர். இங்கு இந்தி மொழி, ஆங்கிலம் மற்றும் பகாரி மொழிகள் பேசப்படுகிறது. சோலன் நகரம் 13 வார்டுகள் கொண்ட நகராட்சி கொண்டது.[5]

படக்காட்சிகள்[தொகு]

தட்பவெப்பம்[தொகு]

இமயமலையில் 1600 மீட்டர் உயரத்தில் அமைந்த சோலன் சமச்சீரான தட்பவெப்ப நிலை கொண்டது. கோடைக்காலத்தில் அதிகபட்சமாக 32 °C (90 °F) வெப்பமும், குளிர்காலத்தில் குறைந்தபட்சமாக −4 °C (25 °F) வெப்பநிலை உள்ளது. [6][7]

தட்பவெப்ப நிலைத் தகவல், சோலன்
மாதம் சன பிப் மார் ஏப் மே சூன் சூலை ஆக செப் அக் நவ திச ஆண்டு
உயர் சராசரி °C (°F) 13.2
(55.8)
15.3
(59.5)
19.8
(67.6)
25.1
(77.2)
29.3
(84.7)
29.5
(85.1)
25.2
(77.4)
24.2
(75.6)
24.5
(76.1)
22.9
(73.2)
19.6
(67.3)
15.8
(60.4)
22.03
(71.66)
தாழ் சராசரி °C (°F) 4.1
(39.4)
5.7
(42.3)
9.6
(49.3)
14.2
(57.6)
18.4
(65.1)
20
(68)
19
(66)
18.6
(65.5)
17.2
(63)
13.3
(55.9)
8.9
(48)
5.8
(42.4)
12.9
(55.22)
பொழிவு mm (inches) 87
(3.43)
67
(2.64)
73
(2.87)
27
(1.06)
40
(1.57)
120
(4.72)
393
(15.47)
325
(12.8)
186
(7.32)
52
(2.05)
12
(0.47)
29
(1.14)
1,411
(55.55)
ஆதாரம்: climate-data.org[8]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

Commons-logo-2.svg
விக்கிமீடியா பொதுவகத்தில்,
சோலன்
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சோலன்&oldid=3357942" இருந்து மீள்விக்கப்பட்டது