தரங்கத்தி சரணாலயம்
தரங்கத்தி சரணாலயம் | |
---|---|
அமைவிடம் | சிம்லா, இமாச்சலப் பிரதேசம், இந்தியா |
ஆள்கூறுகள் | 31°23′30″N 77°48′11″E / 31.3917°N 77.803°E[1] |
பரப்பளவு | 167 km2 (64 sq mi) |
நிறுவப்பட்டது | 1962 |
தரங்கத்தி சரணாலயம் (Daranghati Sanctuary) என்பது இந்தியாவின் இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள ராம்பூர் புசாகர், சிம்லாவில் அமைந்துள்ளது. இது தொந்தரவுச் செய்யப்படாத வனப்பகுதிகளைக் கொண்டுள்ளது. மோனல், ட்ரகோபன், கோக்லாஸ் மற்றும் கலிஜ் ஆகிய பறவைகள் இங்குக் காணப்படுகின்றன. இங்குக் காணப்படும் சில பொதுவான விலங்குகள் கத்தூரி மான், கோரல் மற்றும் தார். டோப்டா மற்றும் சரஹான் ஆகிய இடங்களில் நியமிக்கப்பட்டுள்ள வன ஊழியர்கள் ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலை வழங்குகின்றனர்.[2]
நிர்வாக அனுமதி
[தொகு]இந்தியாவில் உள்ள வனவிலங்கு சட்டங்களின்படி, சரணாலயத்திற்குள் நுழைவதற்கு/ தங்குவதற்கு, மாநிலத்தின் தலைமை வனவிலங்கு காப்பாளர் அல்லது சம்பந்தப்பட்ட மாவட்ட வன அதிகாரியின் அனுமதி தேவை. தரங்கத்தி சரணாலயம் சரஹானில் அமர்ந்திருக்கும் மாவட்ட வன அதிகாரியினால் வனவிலங்குகள் நிர்வகிக்கப்படுகிறது.
அணுகல்
[தொகு]தேசிய நெடுஞ்சாலை 5-ல் சண்டிகரிலிருந்து சரணாலயத்தை நோக்கி ஒருவர் பயணிக்கும்போது, பாதையில் பல முக்கிய இடங்கள் வருகின்றன. இவற்றில் சண்டிகர்- சிம்லா (115 கிமீ); சிம்லா - நர்கண்டா (65 கிமீ); நர்கண்டா - ராம்பூர் (60 கிமீ); ராம்பூர் - மஷ்னூ (30 கிமீ, மாநில நெடுஞ்சாலை); மஷ்னூ - தரன் கிராமம் (10 கிமீ, இணைப்புச் சாலை) அமைந்துள்ளன.
பார்வை காலம்
[தொகு]இச்சரணாலயம் குளிர்காலத்தில் பனி விழுவதால், சரணாலயத்திற்கு வருகை தருவதற்குச் சிறந்த காலம் ஏப்ரல் முதல் சூன் வரை ஆகும்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Daranghati Sanctuary". protectedplanet.net.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "himachaltourism.gov.in". Archived from the original on 24 March 2010. பார்க்கப்பட்ட நாள் 16 July 2019.