கின்னவுர் கயிலை மலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கின்னவுர் கயிலை
கல்பா கிராமத்திலிருந்து கின்னார் கயிலை மலை, இமாச்சல் பிரதேசம்
உயர்ந்த இடம்
உயரம்6,500 m (21,300 அடி)
புவியியல்
அமைவிடம்கின்னௌர்இமாச்சலப் பிரதேசம், இந்தியா
கல்பா கிராமத்தில் இருந்து Jorkanden (6473 மீ), இமாச்சல பிரதேசம், இந்தியா

கின்னவுர் கயிலை (Kinnaur Kailash) என்பது இந்தியாவின் இமாச்சலப் பிரதேசம் மாநிலத்தில் கின்னவுர் மாவட்டத்தில் உள்ள மலைச் சிகரம் ஆகும்.இது இந்து மற்றும் புத்த மதத்தினருக்குப் புனிதமானதாகக் கருதப்படுகிறது. இதன் உயரம் 6,500 மீட்டர்கள் ஆகும். இதுவும் திபெத்தின் கயிலை மலையும் ஒன்றல்ல. இது மலையேறுபவர்களுகு கடினமான பகுதியாகும். இமாச்சலப்பிரதேசத்தில் ஏறுவதற்குக் கடினமாக மலைச்சிகரங்களுள் இதுவும் ஒன்று.[1][2][3]

புராணம்[தொகு]

புராணங்களின் படி ,கடவுள் சிவன் தன்னை வணங்கித் தவமிருந்த அசுரன் ஒருவனுக்கு அவன் யார் தையில் கைவைத்தாலும் அவர்கள் சாம்பலாக வேண்டும் என அவன் கேட்ட வரத்தைக் கொடுத்தார். அதை பரீட்சித்துப் பார்க்க விரும்பிய அசுரன் சிவனின் தலையிலே கைவைக்க முயலுவார். அப்போது சிவன் இந்த மலையில் வந்து கடவுள் விஷ்ணுவின் உதவியைக் கோரினார். விஷ்ணு அந்த அசுரனைக் கொன்றழித்தார். இந்த அற்புதமான இடமானது ஒளி நிறைந்த ஒன்று. இதை அனைவராலும் உணரமுடியும்.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கின்னவுர்_கயிலை_மலை&oldid=3890125" இலிருந்து மீள்விக்கப்பட்டது