இமாச்சலப் பிரதேசம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(இமாச்சல் பிரதேசம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search
இமாச்சலப் பிரதேசம்
हिमाचल प्रदेश
—  மாநிலம்  —
இந்தியாவில் இமாச்சலப் பிரதேசத்தின் அமைவிடம்
அமைவிடம் 31°6′12″N 77°10′20″E / 31.10333°N 77.17222°E / 31.10333; 77.17222ஆள்கூறுகள்: 31°6′12″N 77°10′20″E / 31.10333°N 77.17222°E / 31.10333; 77.17222
நாடு  இந்தியா
மாநிலம் Himachal Pradesh
மாவட்டங்கள் 12
நிறுவப்பட்ட நாள் சனவரி 25, 1971
தலைநகரம் சிம்லா
மிகப்பெரிய நகரம் சிம்லா
ஆளுநர் ஆச்சார்யா தேவ்வரத்
முதலமைச்சர் ஜெய்ராம் தாகூர்
ஆளுநர் இராசேந்திர அர்லேகர் ஆச்சார்யா தேவ்வரத்[1] இராசேந்திர அர்லேகர்
முதலமைச்சர் ஜெய்ராம் தாகூர்[2][3]
சட்டமன்றம் (தொகுதிகள்) ஓரவை[4] (68 seats) ()
மக்களவைத் தொகுதி இமாச்சலப் பிரதேசம்
हिमाचल प्रदेश
மக்கள் தொகை 68,64,602 (21st) (2011)
ம. வ. சு (2005) Green Arrow Up Darker.svg 0.681 (medium) (8th)
கல்வியறிவு 83.78%% 
மொழிகள் இந்தி[5]
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு
இணையதளம் [http://himachal.nic.in himachal.nic.in]


இமாசலப் பிரதேசம் இந்தியாவில் உள்ள மாநிலங்களுள் ஒன்று. 1948 முதல் இந்தியாவின் ஒரு ஆட்சிப் பிரதேசமாக விளங்கி வந்த இமாசலப் பிரதேசம், இந்தியாவின் 18ஆவது மாநிலமாக 25 ஜனவரி 1971ல் அறிவிக்கப் பட்டது. இந்த மாநிலத்தின் தலைநகர் சிம்லா. குல்லு, மணாலி, தர்மசாலா ஆகியவை மற்ற பெரிய ஊர்கள். காங்கிரி, பஹாரி, பஞ்சாபி, ஹிந்தி, மண்டியாலி ஆகிய மொழிகள் இம்மாநிலத்தில் பேசப்படுகிறது. இந்து சமயம், புத்த சமயம், சீக்கியம் ஆகிய மதங்கள் பெரும்பான்மையாக பின்பற்றப் படுகிறது. தலாய் லாமாவும் மற்ற திபேத்திய அகதிகளும் இமாசலப் பிரதேசத்திலுள்ள தர்மசாலாவில் ராம்போசி வசிக்கின்றனர்.

புவியியல்[தொகு]

இமாசல பிரதேசம் இமய மலையில் அமைந்துள்ளதால் இம்மாநிலம் மலையும் மலை சார்ந்த பகுதிகளாகவுமே காணப்படுகிறது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ஹரியானா, உத்தரப் பிரதேசம், உத்தராஞ்சல் ஆகியவை இமாசலப் பிரதேசத்தின் அண்மையில் அமைந்த மாநிலங்கள். இமாசலப் பிரதேசத்தின் கிழக்கில் திபெத் உள்ளது. கக்கர், சட்லெஜ், பீஸ் ஆகியவை இங்கு பாயும் நதிகளாகும். இமாசலப் பிரதேசத்தின் மொத்த நிலப்பரப்பு 55658 சதுர கி.மீ.

மாவட்டங்கள்[தொகு]

இமாசலப் பிரதேசம் 12 மாவட்டங்களாக பிரிக்கப் பட்டுள்ளது. அவைகள்;

 1. உணா மாவட்டம்
 2. காங்ரா
 3. கினௌர்
 4. குல்லு
 5. சம்பா
 6. சிம்லா
 7. சிர்மௌர்
 8. சோலன்
 9. பிலாஸ்பூர்
 10. மண்டி
 11. லாஹௌஸ் & ஸ்பிதி
 12. ஹமீர்பூர்

முக்கிய நகரங்கள்[தொகு]

நஹான், நைனா தேவி, பிலாஸ்பூர், மணாலி, சிம்லா, டல்ஹவுசி, காங்கிரா மற்றும் தர்மசாலா ஆகும்.

மக்கள் தொகையியல்[தொகு]

2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி இமாசலப் பிரதேசம் மாநிலத்தின் மொத்த மக்கள் தொகை 6,864,602 ஆக உள்ளது. நகர்புறங்களில் 10.03% மக்களும், கிராமப்புறங்களில் 89.97% மக்களும் வாழ்கின்றனர். கடந்த பத்தாண்டுகளில் (2001-2011) மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 12.94% ஆக உயர்ந்துள்ளது. மக்கள் தொகையில் ஆண்களும் 3,481,873 மற்றும் 3,382,729 பெண்களும் உள்ளனர். பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு 972 பெண்கள் வீதம் உள்ளனர். 55,673 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாநிலத்தில் மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 123 மக்கள் வாழ்கின்றனர். இம்மாநிலத்தின் சராசரி படிப்பறிவு 82.80 % ஆகவும், ஆண்களின் படிப்பறிவு 89.53 % ஆகவும், பெண்களின் படிப்பறிவு 75.93 % ஆகவும் உள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 777,898 ஆக உள்ளது. [6]

சமயம்[தொகு]

இம்மாநிலத்தில் இந்து சமயத்தவரின் மக்கள் தொகை 6,532,765 (95.17%) ஆகவும் இசுலாமிய சமய மக்கள் தொகை 149,881 (2.18%) ஆகவும், சீக்கிய சமயத்தவரின் மக்கள் தொகை 79,896 (1.16%) ஆகவும் கிறித்தவ சமயத்தினரின் மக்கள் தொகை 12,646 (0.18%) ஆகவும், சீக்கிய சமய மக்கள் தொகை 79,896 ஆகவும் (1.16%), சமண சமய மக்கள் தொகை 1,805 (0.03%) ஆகவும், பௌத்த சமய மக்கள் தொகை 78,659 (1.15%) ஆகவும், பிற சமயத்து மக்கள் தொகை 856 (0.01%) ஆகவும் மற்றும் சமயம் குறிப்பிடாதவர்கள் மக்கள் தொகை 1,805 (0.03%) ஆகவும் உள்ளது.

மொழிகள்[தொகு]

இம்மாநிலத்தின் ஆட்சி மொழியான இந்தி மொழியுடன், திபெத்திய மொழி மற்றும் வட்டார மொழிகளும் பேசப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

 1. http://india.gov.in/govt/governor.php
 2. http://india.gov.in/govt/chiefminister.php
 3. முதலமைச்சர், இமாசலப்பிரதேசம்
 4. Himachal Pradesh Vidhan Sabha
 5. இமாச்சலப் பிரதேசம் 2008ஆம் ஆண்டு முதல் இந்தி மட்டுமே அதன் அலுவல் மொழியாக தேர்ந்தெடுத்துள்ளது.Hindi to be official language of H.P.
 6. http://www.census2011.co.in/census/state/himachal+pradesh.html

வெளி இணைப்பு[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=இமாச்சலப்_பிரதேசம்&oldid=3448259" இருந்து மீள்விக்கப்பட்டது