உள்ளடக்கத்துக்குச் செல்

பஞ்சாபி உடை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
லாகூரின் பஞ்சாபி உடை, 1890கள்

பஞ்சாபி உடை என்பது, பஞ்சாப் பகுதி மக்கள் மரபுவழியாக அணிகின்ற உடைகளைக் குறிக்கும். பழங்காலத்தில் பஞ்சாப் மக்கள் பருத்தி உடைகளையே அணிந்தனர். ஆண், பெண் இரு பாலாரும் அணிந்த மேலாடைகள் முழங்கால் வரை நீண்டிருந்தன. சால்வை ஒன்றை இடது தோளுக்கு மேலாகவும், வலது தோளுக்குக் கீழாகவும் சுற்றி அணிந்தனர். இன்னொரு பெரிய துணியை ஒரு தோளுக்கு மேல் போட்டு முழங்காலை நோக்கித் தொங்க விடுவர். இரு பாலாரும் இடுப்பில் வேட்டி அணிவர்.[1] தற்கால பஞ்சாபி உடை இந்த அம்சங்களைத் தக்கவைத்திருந்தாலும், அதன் நீண்ட வரலாற்றுக் காலத்தில் பல ஆடை வடிவங்கள் உருவாகியுள்ளன.

19ம் நூற்றாண்டிலும், 20ம் நூற்றாண்டின் தொடக்கப் பகுதியிலும், பஞ்சாப் பகுதியில் பருத்தித் தொழில் செழித்திருந்தது. லுங்கி, கெஸ், டாத்தாகி, மேலாடைகள், திரைச் சீலைகள், சுசி, துவாலைகள் போன்ற பல்வேறு விதமான துணிவகைகள் ஒசியார்ப்பூர், குர்தாசுப்பூர், பெசாவர், லாகூர், முல்த்தான், அம்ரித்சர், லூதியானா, ஜாங், சாப்பூர், சலந்தர், தில்லி, குர்காவோன், ரோத்தக், கர்னால், ரேவாரி, பானிப்பட் ஆகிய பகுதிகளில் உற்பத்தியாகின.[2] இந்தப் பருத்தித் தொழில் பஞ்சாபி உடைகளின் வளமைக்கு மேலும் வளம் சேர்த்தது. பஞ்சாப்பின் செழுமையான பண்பாடு அதன் உடைகளில் வெளிப்பட்டது.[3][4][5] வெவ்வேறு பண்டிகைகள், நிகழ்வுகள், விழாக்கள் என்பவற்றுக்கு ஏற்ப வெவ்வேறு வகையான உடைகள் அணியப்பட்டன.

வெவ்வேறு வகையான மரபுவழி உடைகளுடன், சிறப்பு வகை அணிகலன்களை அணிவதும் வழக்கம்.[6]

சுதான்

[தொகு]

பஞ்சாப் பகுதியின் சுதான் பஞ்சாப் மொழியில் சுதானா எனவும் வழங்குகிறது. இது பண்டைய சுவத்தானாவின் இக்கால வடிவம் ஆகும்.[7] சுவத்தானா என்பது அரைக்காலாலுறை போன்ரதொரு கீழாடை ஆகும். இது கி.மு 322-185 கால அளவில் மவுரிய அரசர்கள் காலத்திலும்; [8] குழ்சானப் பேரரசிலும் வட இந்திய ஆள்வகுப்பு மக்கள் அணிந்த ஆடையாகும்.[9] இது 4 ஆம், 5 ஆம் நூற்ராண்டுகளில் குப்தர் காலத்திலும் வழக்கில் இருந்தது.[10] அர்ழ்சர் காலத்திலும்கூட[11]இது 7 ஆம் நூற்றாண்டுவரை வழக்கில் இருந்த்து.

பஞ்சாபி சுதானா சுவத்தானா ஆடைவழி வந்ததாகும். இது கணுக்கால் மட்டம் வரை தளர்வாகவும் கணுக்கால் அளவில் இறுக்கமாகவும் அமைகிறது. இது இருபாலாரும் அணியுமுடையாகும். இது பெண்கள் அணியும்போது குர்த்தா அல்லது குர்த்தியுடன் அணிவர். இந்த ஆடை பஞ்சாபி காக்ரா உடையின் பகுதியாகவும் அமைகிறது. மற்ற வேறுபாடுகள் சோகா, (கயிற்றுப் புரிப் பின்னல்), கலந்த சுதான் ஆடைவகைகளாகும்.

குர்த்தா

[தொகு]

குர்த்தாவும் அதன் பக்க வரிசாளரப் பிரிப்பும் கி.பி 11 ஆம் நூற்றாண்டில் இருந்தே வழக்கில் உள்ளது.[12]மகளிர் குர்த்தா வட இந்தியாவில் அணியப்படுகிறது . குர்த்தகா என்பது தோளில் இருந்து இடுப்புவரை கையாடை நீண்ட குறுஞ்சட்டை ஆகும். இதில் இடப்புறமும் வலப்புறமும் குஞ்சம் போன்ற விரிவுகள் அமைந்துள்ளன.[13]இதுவும் பஞ்சாபில் பெண்களும் ஆண்களும் அணியும் பக்கச் சாளர வரிப்பிரிப்புகள் உள்ள இக்கால பஞ்சபி குர்தா ஒத்ததே.[14] குர்த்தா ஜாமா உடை, அங்காரிகா உடை ஆகியவற்ரின் தாக்கம் உடையதாகும்.குர்த்தா சல்வாருடனோ சுதன் உடனோ தெக்மத்துடனோ உலுங்கியுடனோ தோத்தியுடனோ பஞ்சாபிக் காக்ராவுடனோ ஜீன்சுகளுடனோ அணியலாம்.

முல்தானி குர்த்தா

[தொகு]

முல்தானி குர்த்தா என்பது பஞ்சாபிலும் பாக்கித்தானிலும் அணியப்படும் முல்தானி வடிவமைப்புள்ள குர்த்தா ஆகும்.[15] இதில் வட்டர அசுரக் அச்சுவேலை கவினழகும் அமையலாம்.

பஞ்சாபி பூல்காரி குர்த்தா

[தொகு]
பூல்காரி பூவேலையுள்ள குர்த்தா பூல்காரி குர்த்தா எனப்படும்.[16]

பஞ்சாபி பந்தானி குர்த்தா

[தொகு]

சோலித்தான் பலையில் பந்தானி கழுத்துப்பட்ட சாய உருவேற்ரம் பெருவழக்கில் உள்ளது.[17] குர்த்தாவில் பந்தானி வேலைப்பாடுள்ள குர்த்தா பந்தானி குர்த்தா எனப்படும்.

முக்த்சாரி குர்த்தா

[தொகு]

மரபான பஞ்சாபி குர்த்தா தள்ர்வாக முழங்கால் பகுதி வரை நேராகப் பிரிவுற்று நீளும்.[18] [19] இக்கால பஞ்சாபி குர்த்தா இந்தியப் பஞ்சாபில் உள்ள முக்த்சாரில் தோன்றிய முக்த்சாரி குர்த்தா ஆகும். இக்கால பஞ்சாபி குர்த்தா ஒல்லி இறுக்கப் பொருத்தமைவுக்கும் துடியான பொருத்து வடிவமைவுக்கும் பெய்ர்போனதாகும். இளம்அரசியல்வாதிகளால் விரும்பி அணியப்படுவதாகும்.[20]

சாமா

[தொகு]

முதன்மைக் கட்டுரை:சாமா ஆடை சாமா முகலாயப் பேர்ரசு காலத்தில் பஞ்சாபில் ஆண்கள் அணிந்த ஆடையாகும். "சோரா சமா" என்ற சொல்தொடர் மணமகளுக்குத் தாய்மாமன் தரும் சீரைக் குறிக்கும்,[21] இப்போது மணமகள் சாமா அணிவதில்லை .பட்டைவரியமைந்த சாமாவார் எனும் வட்டரத் துப்பட்டா மேற்கவின் ஆக அணியப்படுகிறது.[22][23]

அங்கா/அங்கார்க்கா

[தொகு]

முதன்மைக் கட்டுரை:அங்கார்க்கா அங்கா ஆடை அங்கார்க்கா எனவும் வழங்கும்.[24][25] and peshwaj)[26] is similar to a loose coat and wadded with cotton.[27] இதை பெண்களும் ஆண்களும் அணிவர். ஆண்கள் அணியும் அங்கார்க்கா முழங்கால்வரை தளர்வானத் தூனிக் போல அமையும்.[28] and is fastened either to the right of the left.[29] An angarkha typically does not have front buttons.[30] Grooms traditionally wore the angarkha which has now been superseded by the achkan. The anga worn by women is a long robe.

சாம்பா அங்கார்க்கி

[தொகு]

இமாச்சலப்பிரதேச சாம்பா மாவட்ட அங்கார்க்கி என்பது இடுப்பளவில் இறுக்கம்மகத் தைத்த தார்சும் இடுப்புக்குக் கீழே பாவாடை போன்ற விரிவும் அமைந்த ஆடையாகும். அங்கார்க்கி இடுப்பில் வாரால் கட்டப்படும்.[32]

தலைப்பா

[தொகு]

பஞ்சபில் ஆண்கள் மரபாக தலைப்பா அணிவர். முன்பெல்லாம் 40 அடி நீளமுடைய பகவல்பூர் வகை பெரிய தலைப்பாக்களை அணிந்துள்ளனர்.[1] Now the turbans are shorter of various designs.

சாலூகா

[தொகு]

சாலூகா சிந்திலும் பஞ்சாபிலும் அணியப்படும் இறுக்கமான இடுப்பு மேலங்கி அல்லது மேலுறைச் சட்டை.[33]இது உத்தரப்பிரதேசத்திலும் அணியப்படுகிறது.

மேற்கோள்கள்

[தொகு]
 1. 1.0 1.1 Mohinder Singh Randhawa. (1960) Punjab: Itihas, Kala, Sahit, te Sabiachar aad.Bhasha Vibhag, Punjab, Patiala.
 2. Parshad, Gopal (2007) Industrial development in Northern India: a study of Delhi, Punjab and Haryana, 1858-1918 [1]
 3. "Punjabi Dressing". Coloursofpunjab.com. Archived from the original on 2015-05-03. பார்க்கப்பட்ட நாள் 2015-05-17.
 4. "Baisakhi Dress,Bhangra Dress,Gidda Dress,Dress for Baisakhi Festival". Baisakhifestival.com. பார்க்கப்பட்ட நாள் 2015-05-17.
 5. "Baisakhi Dress | Baisakhi Costume | Bhangra Dress". Baisakhi Festival (in ஆங்கிலம்). Archived from the original on 2020-03-26. பார்க்கப்பட்ட நாள் 2020-03-27.
 6. "Traditional Dresses of Punjab | Traditional Punjabi Attire". Discoveredindia.com. Archived from the original on 2015-09-23. பார்க்கப்பட்ட நாள் 2015-05-17.
 7. Catherine Ella Blanshard Asher, Thomas R. Metcalf (1994) Perceptions of South Asia's visual past [2]
 8. Viishnu Asha (1993) Material Life of Northern India: Based on an Archaeological Study, 3rd Century B.C. to 1st Century B. [3]
 9. Archaeological Congress and Seminar Papers: Papers Presented at the 4th Annual Congress of the Indian Archaeological Society and the Seminars Held at Nagpur on the 10th, 11th, and 12th Nov. 1970, Volume 4, Part 1970 [4]
 10. Mohapatra, Ramesh Prasad (1992) Fashion Styles of Ancient India: A Study of Kalinga from Earliest Times to Sixteenth Century Ad [5]
 11. A. V. Narasimha Murthy, K. V. Ramesh (1987) Giridharaśrī: essays on Indology : Dr. G.S. Dikshit felicitation volume [6]
 12. Ghurye, Govind Sadashiv (1966) Indian Costume
 13. Yadava,Ganga Prasad (1982) Dhanapāla and His Times: A Socio-cultural Study Based Upon His Works [7]
 14. Sharma, Brij Narain (1966) Social life in Northern India, A.D. 600-1000 [8]
 15. Official Journal of the European Communities: Legislation, Volume 30, Issues 248-256 (1987) [9]
 16. Naik, Shailaja D. (1996( Traditional Embroideries of India
 17. Nasreen Askari, Liz Arthur, Paisley Museum and Art Galleries Merrell Holberton, (1999) Uncut cloth [10]
 18. Punjab District Gazetteers: Attock district, 1930. Printed 1932
 19. Asoke Kumar Bhattacharyya, Pradip Kumar Sengupta (1991) Foundations of Indian Musicology: Perspectives in the Philosophy of Art and Culture [11]
 20. Puneet Pal Singh Gill (04.01.2012) The Chandigarh Tribune Muktsari-style kurta pyjama a fad [12]
 21. Hershman, Paul (1981) Punjabi kinship and marriage
 22. Sir Watt, George (1903) Indian Art at Delhi 1903: Being the Official Catalogue of the Delhi Exhibition 1902-1903 [13]
 23. Baden Henry Baden-Powell (1872) Hand-book of the Manufactures and Arts of the Punjab [14]
 24. Rajaram Narayan Saletore (1974) Sex Life Under Indian Rulers
 25. Panjab University Research Bulletin: Arts, Volume 13, Issue 1 - Volume 14, Issue 1 (1982) [15]
 26. B. N. Goswamy, Kalyan Krishna, Tarla P. Dundh (1993) Indian Costumes in the Collection of the Calico Museum of Textiles, Volume 5 [16]
 27. Punjab District Gazetteers - District Attock Year Published 1930 BK-000211-0160 [17]
 28. Punjab District Gazetteers: Ibbetson series, 1883-1884]. [18]
 29. Punjab gazetteers, 1883, bound in 10 vols., without title-leaves
 30. Hankin, Nigel B. (2003) Hanklyn-janklin
 31. Gupta, Hari Ram (1991) History of the Sikhs: The Sikh lion of Lahore, Maharaja Ranjit Singh, 1799-1839 [19]
 32. Kamal Prashad Sharma, Surinder Mohan Sethi (1997) Costumes and Ornaments of Chamba [20]
 33. Govind Sadashiv Ghurye (1951) Indian costume: (bhāratīya vesabhūsā)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பஞ்சாபி_உடை&oldid=3561516" இலிருந்து மீள்விக்கப்பட்டது