லூதியானா மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
லூதியானா
ਲੁਧਿਆਣਾ ਜ਼ਿਲ੍ਹਾ
மாவட்டம்
பஞ்சாபிய மாவட்டங்கள்
பஞ்சாப் மாநிலம், இந்தியா
Location of லூதியானா
நாடு இந்தியா
மாநிலம்பஞ்சாப்
தலைமையிடம்லூதியானா
பரப்பளவு
 • மொத்தம்3,578 km2 (1,381 sq mi)
மக்கள்தொகை (2011)‡[›]
 • மொத்தம்3,498,739
 • தரவரிசை22
 • அடர்த்தி978/km2 (2,530/sq mi)
மொழிகள்
 • அலுவல் மொழிபஞ்சாபி
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
தொலைபேசி குறியீட்டெண்0161
பாலின விகிதம்1000/873 /
எழுத்தறிவு82.50%
மக்களவைத் தொகுதி1
சட்டமன்ற தொகுதி14
இணையதளம்www.ludhiana.nic.in
^ ‡: மக்கள்தொகை வளர்ச்சி (2001–2011): 15%

லூதியானா மாவட்டம் (Ludhiana district) வடமேற்கு இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தின் 22 மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத் தலைமையிட நகரம் லூதியானா ஆகும். இம்மாவட்டம் பாட்டியாலா கோட்டத்தில் அமைந்துள்ளது.

பஞ்சாப் மாநிலத்தின் பெரிய நகரமான லூதியானா நகரம் மாவட்டத்தின் முக்கியத் தொழில் நகரமாக உள்ளது. இம்மாவட்டத்தில் பாயும் சத்லஜ் ஆறு மாவட்டத்தின் வேளாண் வளர்ச்சிக்கு ஆதாரமாக உள்ளது.

மாவட்ட எல்லைகள்[தொகு]

லூதியானா மாவட்டத்தின் வடக்கில் ஜலந்தர் மாவட்டம், வடகிழக்கில் சாகித் பகத் சிங் நகர் மாவட்டம்
ரூப்நகர் மாவட்டம், தென்கிழக்கில் பதேகாட் சாகிப் மாவட்டம், தெற்கே சங்கரூர் மாவட்டம், தென்மேற்கே பர்னாலா மாவட்டம் மற்றும் மேற்கில் மொகா மாவட்டம் எல்லைகளாக உள்ளது.

மாவட்ட நிர்வாகம்[தொகு]

இம்மாவட்டம் லூதியானா கிழக்கு, லூதியானா மேற்கு, ஜாக்ரோன், சம்ரலா, கன்னா, பாயல் மற்றும் ராய்கோட் என எழு வருவாய் வட்டங்களையும், பனிரெண்டு ஊராட்சி ஒன்றியங்களையும், ஒன்பது நகராட்சிகளையும் கொண்டது.

அரசியல்[தொகு]

இம்மாவட்டம் லூதியானா கிழக்கு, லூதியானா தெற்கு, லூதியானா மையம், லூதியானா மேற்கு, லூதியானா வடக்கு, கில் (தனி), தாகா, ஜாக்ரோன் (தனி). கன்னா, சம்ராலா, பாயல் (தனி), ராய்கோட் (தனி) என பதினான்கு சட்டமன்றத் தொகுதிகளயும்; லூதியானா மக்களைவைத் தொகுதியும் கொண்டுள்ளது.

மக்கள் தொகையியல்[தொகு]

2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி இம்மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகை 3,498,739 ஆக உள்ளது. கிராமப்புறங்களில் 40.84% மக்களும்; நகரப்புறங்களில் மக்களும் 59.16% வாழ்கின்றனர். கடந்த பத்தாண்டுகளில் (2001-2011) மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 15.36% ஆக உயர்ந்துள்ளது. மக்கள் தொகையில் 1,867,816 ஆண்களும் மற்றும் 1,630,923 பெண்களும் உள்ளனர். பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு 873 பெண்கள் வீதம் உள்ளனர். 3,578 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாவட்டத்தின் மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 978 மக்கள் வாழ்கின்றனர். இம்மாவட்டத்தின் சராசரி படிப்பறிவு 82.20 % ஆகவும், ஆண்களின் படிப்பறிவு 85.98 % ஆகவும், பெண்களின் படிப்பறிவு 77.88 % ஆகவும் உள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 384,114 ஆக உள்ளது. [1]

சமயம்[தொகு]

இம்மாவட்டத்தில் சீக்கிய சமய மக்கள் தொகை 1,863,408 (53.26 %) ஆகவும், இந்து சமயத்தவரின் மக்கள் தொகை 1,502,403 (42.94 %) ஆகவும், இசுலாமிய சமய மக்கள் தொகை 77,713 (2.22 %) ஆகவும், கிறித்தவ, சீக்கிய, பௌத்த, சமண சமய மக்கள் தொகை மிகக்குறைவாகவும் உள்ளது.

மொழிகள்[தொகு]

பஞ்சாப் மாநிலத்தின் ஆட்சி மொழியான பஞ்சாபி மொழியுடன், இந்தி, உருது மற்றும் வட்டார மொழிகளும் இம்மாவட்டத்தில் பேசப்படுகிறது. இம்மாவட்டம் பட்டியாலா வருவாய்க் கோட்டத்தில் அமைந்துள்ளது.

மழை பொழிவு[தொகு]

இம்மாவட்டத்தில் 70% மழை சூலை முதல் செப்டம்பர் மாதங்களில் பொழிகிறது.

தட்ப வெப்பம்[தொகு]

தட்பவெப்ப நிலைத் தகவல், லூத்யானா
மாதம் சன பிப் மார் ஏப் மே சூன் சூலை ஆக செப் அக் நவ திச ஆண்டு
உயர் சராசரி °C (°F) 18.9
(66)
20.6
(69)
25.6
(78)
34.4
(94)
38.3
(101)
39.4
(103)
34.4
(94)
32.8
(91)
33.3
(92)
31.7
(89)
26.1
(79)
20.6
(69)
29.68
(85.4)
தாழ் சராசரி °C (°F) 6.7
(44)
8.3
(47)
12.8
(55)
18.3
(65)
22.8
(73)
26.1
(79)
26.1
(79)
24.4
(76)
23.3
(74)
17.2
(63)
11.1
(52)
7.2
(45)
17.04
(62.7)
பொழிவு mm (inches) 20.3
(0.80)
38.1
(1.50)
30.5
(1.20)
20.3
(0.80)
20.3
(0.80)
61
(2.40)
228.6
(9.00)
188
(7.40)
86.4
(3.40)
5.1
(0.20)
12.7
(0.50)
20.3
(0.80)
731.5
(28.8)
ஆதாரம்: [2]

மேற்கோள்கள்[தொகு]

  1. Ludhiana District : Census 2011 data
  2. "Average Weather for Ludhiana - Temperature and Precipitation". The Weather Channel. பார்க்கப்பட்ட நாள் 25 February 2008.
"https://ta.wikipedia.org/w/index.php?title=லூதியானா_மாவட்டம்&oldid=3890818" இலிருந்து மீள்விக்கப்பட்டது