குரு அமர் தாஸ்
குரு அமர் தாஸ் Guru Amar Das Ji ਗੁਰੂ ਅਮਰ ਦਾਸ | |
---|---|
![]() குரு அமர் தாஸ் - கோவிந்த்வால் | |
பிறப்பு | 5 May 1479 பசர்கே கில்லன் (Basarke Gillan), அம்ரித்சர், பஞ்சாப், ![]() |
இறப்பு | 1 September 1574 கோவிந்த்வால், பஞ்சாப், ![]() | (அகவை 95)
மற்ற பெயர்கள் | மூன்றாவது குரு |
செயற்பாட்டுக் காலம் | 1552–1574 |
அறியப்படுவது |
|
முன்னிருந்தவர் | குரு அங்கது தேவ் |
பின்வந்தவர் | குரு ராம் தாஸ் |
பெற்றோர் | தேஜ் பான் & மாதா லச்மி |
வாழ்க்கைத் துணை | மாதா மன்சா தேவி |
பிள்ளைகள் | பாய் மோகன், பாய் மொகரி, பீபீ டானி, மற்றும் பீபீ பானி |
குரு அமர் தாஸ் (Guru Amar Das) (குர்முகி: ਗੁਰੂ ਅਮਰ ਦਾਸ) (1479 மே 5 - 1574 செப்டம்பர் 1) என்பவர், முதல் முக்கிய 10 சீக்கிய குருக்களில் மூன்றாவது குருவாவார். ஒரு விவசாய குடும்பத்தில் பிறந்த இவருக்கு, 1552-ம் ஆண்டு மார்ச்சு 26-ஆம் நாள் சீக்கிய குரு பட்டம் வழங்கப்பட்டதாக அறியப்பட்டது.[1]
ஆரம்பகால வாழ்க்கை[தொகு]
விவசாயம் மற்றும் வியாபாரம் செய்யும் குடும்பத்தைச் சேர்ந்த அமர் தாசு, தந்தை 'தேஜ் பான்', தாய் 'மாதா லச்மி' என்பவர்களுக்கு மூத்த மகனாக பிறந்தவர். ஒரு கடைக்காரராக இருந்த அவரது குடும்பம், அமிர்தசரஸில் இருந்து 13 கி.மீ. தென்மேற்கே அமைந்துள்ள பசர்கே (Basarke) என்னும் ஒரு கிராமத்தில் வசித்து வந்தது.[2] 'மாதா மன்சா தேவி' என்பவரை திருமணம் செய்துகோண்ட குரு அமர் தாசுக்கு, நான்கு குழந்தைகள் முறையே முதல் இரண்டு ஆண் குழந்தைகளும்,(பாய் மோகன், பாய் மொகரி), அடுத்து (பீபீ டானி, மற்றும் பீபீ பானி)[3] என்ற இரண்டு இளைய பெண்குழந்தைகள் பிறந்தன. பின்பு, 1553-ம் ஆண்டு தனது தந்தை இறந்த பிறகு, அவரது குடும்ப தலைவர் ஆனார்.[4]
ஆன்மிகம்[தொகு]
மதப்பற்றுடையவராகவும், ஆன்மீகத்தில் அதீத ஈடுபாடு கொண்டவராகவும் இருந்த அவர், வைணவ முறையில் வழிபாடுகள் செய்பவராக இருந்துள்ளார். அவரது நாற்பத்திரண்டாவது வயது முதல், அவர் ஒவ்வொரு ஆண்டும் புனித யாத்திரை மேற்கொண்டு உத்தரகண்ட் மாநிலத்திலுள்ள முக்தி தரும் ஏழு இந்து புனித நகரங்களில் ஒன்றான அரித்துவார் சென்றுவருவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.[4]
யாத்திரை பாடம்[தொகு]
அமர் தாஸ், 1541-ம் ஆண்டில்,வழக்கம் போல் ஹரித்வார் யாத்திரை சென்று திரும்பிச் செல்லும் வழியில் ஒரு துறவியை சந்திக்க நேர்ந்தது, அவர் மிகவும் நட்புடன் பழகினார் மேலும் அவ்வேளையில், தனது உணவுகளை பகிர்ந்துண்டவர்கள் மதங்களைப்பற்றிய உரையாடலில் ஈடுபட்டனர். அவ்வுரையாடலின் போது, அத்துறவி ஒரு பிரம்மச்சாரியான பக்தர் என அறிந்துகொண்ட அமர் தாஸ், அவரிடம் தாங்களின் குரு யாரென்று கேட்டார்.[5] அக்கேள்விக்கு, அவர் எந்த குரு என்று பதிலளித்தார். பதிலை கேட்ட அமர் தாஸ் பல குழப்பங்களுக்கு ஆளானார். மேலும், அக்குருவின் துறவியான தாங்களுக்கு எனது உணவை பகிர்ந்து கொண்டமைக்கு வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன் என்றார் அமர் தாஸ். மேலும் அவர், அந்த குருவின் துறவியான உங்களுக்கு எனது உணவை கொடுத்து பாவம் செய்துவிட்டேன் அதற்காக நான் மீண்டும் ஹரித்வார் சென்று என் பாவத்தை போக்கவேண்டும் என்றார். அப்போது அத்துறவி இடைமறித்து ஒரு கருத்தை பிரதிபலித்தார், அதை கேட்ட அமர்தாஸ் நமக்கும் ஓர் குரு தேவையென்பதை உணர்ந்தார்.[4]
குரு தேடல்[தொகு]
துறவியின் உரையில், அவர் இருபத்தோரு ஆண்டுகளாக யாத்திரை மேற்கொண்டதை வீணென்று எண்ணினார். மற்றும் ஆன்மீக பயணத்தில் எதையும் சாதிக்க இயலவில்லை என வருந்தினார். மேலும், அமர்தாசுக்கு துறவி நைஜீரியாவின் ஒரு பெரிய குருவின் அடையாளமுத்திரையும், ஆலோசனையையும் வழங்கினார். அதனால் அமர்தாஸ் தனக்கொரு குரு தேவையென தேட ஆரம்பித்தார். அன்று தனது வீட்டை அடைந்த அமர் தாஸ், வருத்தமுடனும், ஆழ்ந்த சிந்தனையுடனும் காணப்பட்டார். அவர் கவலையுடனும், நிம்மதியற்ற நிலையிலும் அன்றிரவு உறக்கமின்றி உலாவிக்கொண்டிருந்தார். அன்றைய அதிகாலையில் அவரது மைத்துனர் மனைவியின் (பீபீ அம்ரோ)[6] பாடல் கேட்டது, அது இனிமையாகவும், எழுச்சியூட்டும்படியும் இருந்தன. அவர் கவனத்துடன் அப்பாடல் கேட்டு மற்றும் வார்த்தைகளின் அர்த்தத்தை பிரதிபலித்தார். அந்த பாடலை அம்ரோவின் தந்தை 'குரு அங்கது தேவ்' என்பவர், அம்ரித்சரிலிருந்து 25 கிமீ தொலைவில் உள்ள கதூர் சாகிப் எனும் சிற்றூரில் தங்கியிருந்தபோது கற்றுக் கொண்டதாக அறிந்துகொண்டார். அமர் தாஸ், அப்பாடலில் அவரது உண்மையான நிலை, மனம் மற்றும் ஆன்மீக ஆறுதல் அமைதி பெற்று ஒரு குரு தேவை என்று சுருக்கமாக உணர்ந்து கொண்டார்.[4]
பயிற்சிப் பருவம்[தொகு]
37-வயதான அமர்தாஸ், குரு அங்கது தேவ் (வயது 62) உடனான முதல் கூட்டத்தில் கலந்து கொண்டார். அக்குருவை கண்டதும் ஒருவிதமான பக்தி கலந்த காதலால் ஈர்க்கப்பட்ட அமர்தாஸ், கவனத்துடன் குரு அங்கத் அறிவுரைகளை கேட்டு தன்னுடைய ஆன்மீக வழிகாட்டியாக அவரை தேர்வு செய்கிறார். அவ்வேளையில் அவர் ஒரு தீவிரமான சாதனா (ஆன்மீக முயற்சியில்) ஈடுப்பட்டிருந்தார், பின்னர்; அமர் தாஸ் அதிகாலையில் எழுந்து தனது முதல் சேவையாக குருவுக்கு ஈடுபாட்டுடனும், தன்னார்வத்துடனும், குளியல் தண்ணீர் கொண்டுசேர்த்தார். பிறகு அவர் சபையில் இணைந்து கொண்ட அமர் தாஸ், இலவச சமையலறை வேலைகளை (கையினால் இயக்கும் வேலை) பொழுதின் பெரும்பகுதியை சமையலறையிலேயே கழித்தார். மேலும் பஞ்சாபி மற்றும் குர்பானி (இறைப்பாடல்கள்) பயின்றவர், சீக்கிய வழி வாழ்க்கை முறையைப் பின்பற்றினார்.[7]
இதற்கிடையில், பாய் ஜெத்தாவுக்கு (Bhai Jetha) பின் ஆட்சிக்கு வந்த குரு அமர்தாஸ் தனித்து விடப்பட்டதாக உணர்ந்தார். அவ்வேளையில் அவரது பாட்டி 1541-இல் லாகூர் பசர்கியில் (Basarkay) இருந்து அங்கு வநதார்.
சான்றாதாரங்கள்[தொகு]
- ↑ "The Third Master Guru Amar Das (1479 - 1574". www.sikhs.org (ஆங்கிலம்). © 2011. http://www.sikhs.org/guru3.htm. பார்த்த நாள்: 3 சூலை 2016.
- ↑ "history.com/sikhhist/gurus/nanak3.html www.sikh-history.com | Sri Guru Amardas ji (1552-1574) (ஆங்கிலம்) | வலைக்காணல்: யூலை 05 2016". http:///.
- ↑ "gurbani.co/tengurus/guru-amar-das-ji.php | The Third Guru - Guru Amar Das ji (1552 to 1574) (ஆங்கிலம்) | வலைக்காணல்: யூலை 05 2016". http://gurbani.co/tengurus/guru-amar-das-ji.php.
- ↑ 4.0 4.1 4.2 4.3 Life "Sri Guru Amardas: His Life". www.sikhmissionarysociety.org (ஆங்கிலம்). © 2004. http://www.sikhmissionarysociety.org/sms/smspublications/theteachingsofguruamardasji/chapter1/#His Life. பார்த்த நாள்: 3 சூலை 2016.
- ↑ subaction=showfull&id=1212888510&ucat=6 www.realsikhism.com | Sikh Gurus > Guru Amar Das Ji| வலைக்காணல்: யூலை 05 2016
- ↑ www.sikhiwiki.org | Guru Amar Das | Early Life (ஆங்கிலம்) | வலைக்காணல்: யூலை 05 2016
- ↑ "www.searchsikhism.com | Sri Guru Amardas Ji (ஆங்கிலம்) | வலைக்காணல்: யூலை 06 2016". http://www.searchsikhism.com/guru-amardas.