பட்டாலா
Appearance
பட்டாலா, (பஞ்சாபி: ਬਟਾਲਾ) என்னும் நகரம் இந்திய மாநிலமான பஞ்சாபின் குர்தாஸ்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. ஒரு லட்சத்துக்கும் அதிகமான மக்கள்தொகையை கொண்ட இந்திய நகரங்களில் இதுவும் ஒன்று.[1] மக்கள்தொகை அடிப்படையில் பஞ்சாபின் எட்டாவது பெரிய நகரமாகும். இங்கு 156,400 மக்கள் வசிக்கின்றனர் என்று 2011ஆம் ஆண்டு கணக்கெடுப்பு தெரிவிக்கிறது. இந்த நகரம் 1465ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. இங்கு இரும்பை உருக்கும் ஆலைகள் உள்ளன. இந்த நகரம் ஏறத்தாழ 9 சதுர கி.மீ பரப்பளவை கொண்டது.[2]
சுற்றுலா
[தொகு]குருநானக்குடன் தொடர்புடைய ஸ்ரீ கந்த சாகிப் குருத்வாரா இங்குள்ளது.[3]
அரசியல்
[தொகு]இந்த ஊர் பட்டாலா வட்டத்துக்கு உட்பட்டது. இது குர்தாஸ்பூர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.[4].
போக்குவரத்து
[தொகு]சான்றுகள்
[தொகு]- ↑ ஒரு லட்சத்துக்கும் அதிகமான மக்கள்தொகையை கொண்ட இந்திய நகரங்கள்
- ↑ "குர்தாஸ்பூர் மாவட்டத்தில் உள்ள நகரங்கள்". Archived from the original on 2016-03-03. பார்க்கப்பட்ட நாள் 2015-11-26.
- ↑ "குர்தாஸ்பூர் மாவட்டத்தில் சுற்றிப் பார்க்க வேண்டிய இடங்கள்". Archived from the original on 2016-01-24. பார்க்கப்பட்ட நாள் 2015-11-26.
- ↑ "மக்களவைத் தொகுதிகளும் சட்டமன்றத் தொகுதிகளும் (ஆங்கிலத்தில்) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2015-11-27.