உள்ளடக்கத்துக்குச் செல்

முக்த்சர் சாகிப் மாவட்டம்

ஆள்கூறுகள்: 30°28′24″N 74°30′55″E / 30.47324°N 74.515412°E / 30.47324; 74.515412
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
முக்த்சர் சாகிப்
ਜ਼ਿਲ੍ਹਾ ਸ੍ਰੀ ਮੁਕਤਸਰ ਸਾਹਿਬ
மாவட்டம்
பாஞ்சாப் மாநிலத்தின் மாவட்டங்கள்
பாஞ்சாப் மாநிலத்தின் மாவட்டங்கள்
நாடு இந்தியா
மாநிலம்பஞ்சாப்
பிரதேசம்மால்வா
தலைமையிடம்ஸ்ரீ முக்த்சர் சாகிப்
வட்டங்கள்3
பரப்பளவு
 • மொத்தம்2,593 km2 (1,001 sq mi)
ஏற்றம்
184 m (604 ft)
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்9,01,896
 • அடர்த்தி348/km2 (900/sq mi)
மொழிகள்
 • அலுவல் மொழிபஞ்சாபி
 • பிரதேச மொழிபஞ்சாபி
 • பிறஉருது, இந்தி
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் சுட்டு எண்
152026
தொலைபேசி குறியீட்டெண்01633
வாகனப் பதிவுPB 30
பாலின விகிதம்1000/ 896 /
எழுத்தறிவு65.81 %
இணையதளம்www.muktsar.nic.in

முக்த்சர் சாகிப் மாவட்டம் (Muktsar Sahib district) வடமேற்கு இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தின் 22 மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத் தலைமையிட நகரம் ஸ்ரீ முக்த்சர் சாகிப் ஆகும்.[1]

வரலாறு

[தொகு]

இம்மாவட்டத்தின் தலைமையிடமான முக்த்சர் நகரத்தில் சீக்கியர்களின் பத்தாவது குருவான குருகோவிந்த சிங்கின் சீக்கிய கல்சா படைகளுக்கும், மொகலாயப் பேரரசன் அவுரங்கசீப் படைகளுக்கும் 1705-இல் பெரும் போர் நடைபெற்றது. இப்போரை முக்த்சர் போர் என வராலாற்றில் குறிபிடப்படுகிறது.[2]

மாவட்ட எல்லைகள்

[தொகு]

முக்த்சர் மாவட்டத்தின் தெற்கில் அரியானா மாநிலம்; வடக்கில் பரித்கோட் மாவட்டம், மேற்கில் பெரோஸ்பூர் மாவட்டம், கிழக்கில் பதிண்டா மாவட்டம் எல்லைகளாக உள்ளது.

மாவட்ட நிர்வாகம்

[தொகு]

இம்மாவட்டம் முக்த்சர், மலௌத், கித்தர்பாகா என மூன்று வருவாய் வட்டங்களையும், முக்த்சர், மாலௌட், லம்பி மற்றும் கோட் பாய் என நான்கு ஊராட்சி ஒன்றியங்களையும்; 234 கிராமங்களையும் கொண்டுள்ளது.[3]

அரசியல்

[தொகு]

முக்த்சர் மாவட்டத்தில் முக்த்சர், மாலௌட், கித்தர்பாகா மற்றும் லம்பி என மூன்று சட்டமன்றத் தொகுதிகள் உள்ளது.

மக்கள் தொகையியல்

[தொகு]

2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி இம்மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகை 901,896 ஆக உள்ளது. கிராமப்புறங்களில் 72.04% மக்களும்; நகரப்புறங்களில் மக்களும் 27.96% வாழ்கின்றனர். கடந்த பத்தாண்டுகளில் (2001-2011) மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 16.00% ஆக உயர்ந்துள்ளது. மக்கள் தொகையில் 475,622 ஆண்களும் மற்றும் 426,274 பெண்களும் உள்ளனர். ஆயிரம் ஆண்களுக்கு 896 பெண்கள் என்ற விகிதத்தில் பாலின விகிதம் உள்ளது. 2,593 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாவட்டத்தின் மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 348 மக்கள் வீதம் வாழ்கின்றனர். இம்மாவட்டத்தின் சராசரி படிப்பறிவு 65.81% ஆகவும், ஆண்களின் படிப்பறிவு 71.76% ஆகவும், பெண்களின் படிப்பறிவு 59.24% ஆகவும் உள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 104,419 ஆக உள்ளது. [4]

சமயம்

[தொகு]

இம்மாவட்டத்தில் சீக்கிய சமய மக்கள் தொகை 6,38,625 (70.81 %) ஆகவும், இந்து சமயத்தவரின் மக்கள் தொகை 254,920 (28.26 %) ஆகவும், இசுலாமிய சமய மக்கள் தொகை 4,333 (0.48 %) ஆகவும், கிறித்தவ, பௌத்த, சமண சமய மக்கள் தொகை மிகக் குறைவாக உள்ளது.

மொழிகள்

[தொகு]

பஞ்சாப் மாநிலத்தின் ஆட்சி மொழியான பஞ்சாபி மொழியுடன், இந்தி, உருது மற்றும் வட்டார மொழிகளும் இம்மாவட்டத்தில் பேசப்படுகிறது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Prabhjot Singh (31 January 2010). "Muktsar is now Sri Muktsar Sahib". The Tribune, Chandigarh. http://www.tribuneindia.com/2010/20100201/punjab.htm#4. பார்த்த நாள்: 23 January 2012. 
  2. "Sri Muktsar Sahib City". Archived from the original on 2016-04-10. பார்க்கப்பட்ட நாள் 2016-04-20.
  3. http://nripunjab.gov.in/muktsar-district.htm
  4. Muktsar District : Census 2011 data

வெளி இணைப்புகள்

[தொகு]