தம்தமா சாகிபு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

தம்தமா சாகிபு (Damdama Sahib) எனும் இவ்வூர், வடமேற்கு இந்தியாவின் பஞ்சாப் மாகாணத்திலுள்ள பட்டிண்டா மாவட்டத்திலிருந்து 28- கிலோமீட்டர் தென்கிழக்கேயுள்ள பஞ்ச தக்து (Panj Takht) (பஞ்சாபி:பஞ்ச தக்து) (தமிழ்:ஐந்து இருக்கைகள்) என்னுமிடத்தில் (29° 59′ 13.2″ N, 75° 4′ 40.8″ E) சீக்கிய புனிதத்தலமாக அமைந்துள்ளது. தக்த் சிறீ தர்பார் சாகிபு தம்தமா சாகிபு (Takht Sri Darbar Sahib Damdama Sahib) என விரிவான பெயருடன் அறியப்படும் இது, பஞ்ச தக்து அல்லது 'சீக்கிய உலகின் அதிகாரத்தின் இருக்கை' எனப்படும் இருக்கைகளில் ஒன்றுதான் 'தக்து சிறீ தம்தமா சாகிபு' எனக்கூறப்படுகிறது. மற்ற நான்கு இருக்கைகளான, அகல் தக்து சாகிபு (Akal Takht), தக்து சிறீ கேசகர் சாகிபு (Takht Sri Keshgarh Sahib), தக்து சிறீ பாட்னா சாகிபு (Takht Sri Patna Sahib) மற்றும் தக்து சிறீ அசூர் சாகிபு (Hazur Sahib Nanded) போன்ற இருக்கைகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.[1]

பின்னணி[தொகு]

கி.பி 1705-ல் சீக்கிய சமய பத்து குருக்களில் பத்தாவது குருவான குரு கோவிந்த் சிங் என்பவர், சீக்கியர்களின் புனித நூலான குரு கிரந்த சாகிபு (ஆதி கிரந்தம்) எனும் நூலின் முழு பதிப்புகளையும் இவ்விடத்தில் தயாரித்ததாகவும் நம்பப்படுகிறது. மேலும், முகாலயர்களுடன் நடந்த போருக்குப் பின் இங்கு ஓய்வெடுத்ததாகவும் சொல்லப்படுகிறது.[2]

புனித காரணிகள்[தொகு]

இத்தலத்தின் வளாகத்தினுள் 10 குருத்வாராக்களும், மூன்று புனித நீர்த்தொட்டிகளும் உள்ளன. 1510-ல், சீக்கிய மதத்தின் நிறுவனரும், மற்றும் பத்து சீக்கிய குருக்களுள் முதல் குருவான குரு நானக் இங்கு வந்தபோது முதல் தொட்டி உருவாக்கப்பட்டது. 'குருசார் சரோவர்', 'அகால்ஸார் சரோவர்' என்ற இரண்டாவது மூன்றாவது தொட்டிகளில் நீர் அருந்துவது நோய்களைத் தீர்ப்பதாகச் தொன் நம்பிக்கையாக கருதப்படுகிறது..[3]

மற்ற நான்கு இருக்கைகளின் படிமங்கள் சில காட்சிக்காக[தொகு]

தக்து சிறீ கேசகர் சாகிபு அனந்த்பூர் சாகிபு
தக்து சிறீ பாட்னா சாகிபு பட்னா
தக்து சிறீ ஹழுர் சாகிபு நாந்தேடு

சான்றாதாரங்கள்[தொகு]

  1. "Takht Sri Damdama Sahib.". www.sikh-history.com (@ 2016). பார்த்த நாள் 2016-07-16.
  2. ww.sikhiwiki.org | Takhat Damdama Sahib | (ஆங்கிலம்) வலைக்காணல்: 16/07/2016
  3. "Damdama Sahib, Bathinda.". www.nativeplanet.com (@ 2016). பார்த்த நாள் 2016-07-16.

புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தம்தமா_சாகிபு&oldid=2100469" இருந்து மீள்விக்கப்பட்டது