உள்ளடக்கத்துக்குச் செல்

குஃக்கா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குஃக்கா
பாம்புக்கடிக்கு எதிரானப் பாதுகாப்பு
முதன்மை வழிபாட்டு மையம்இராசத்தான், பஞ்சாப் பகுதி, உத்தரப் பிரதேசப் பகுதிகள் பகத் டெட்கா பழைய இராச்சியம்: தாத்ரெவா, இசார் & பட்டிண்டா
பெற்றோர்தந்தை: இராசா ஜேவர், அன்னை: இராணி பச்சல்

குஃக்கா (Gugga, அல்லது Gugga Pir, Gugga Jaharpir, Gugga Chohan, Gugga Rana, Gugga Vir மற்றும் பல பெயர்கள்) இராசத்தான், பஞ்சாப் பகுதிகளில் பாம்புக்கடிகளிலிருந்து பாதுகாப்புப் பெற வணங்கப்படும் நாட்டார் கடவுளாகும். இராசத்தானில் கோகாஜி என்றும் பஞ்சாப் பகுதி, அரியானா மற்றும் இமாச்சலப் பிரதேசப் பகுதிகளில் குஃக்கா ஜி என்றும் அறியப்படுகின்றார்.

வழிபாடு

[தொகு]

வட இந்தியாவில் இராசத்தான், பஞ்சாப் பகுதி, அரியானா, இமாச்சலப் பிரதேசம் மற்றும் உத்தரப் பிரதேசத்தின் வடமேற்கு மாவட்டங்களில் குஃக்காஜி பெரிதும் வணங்கப்படுகின்றார். குசராத்து, மத்தியப் பிரதேசம் மாநிலங்களிலும் இவரை வழிபடுவோரைக் காணலாம். இவர் பாதோன் மாதத்தில் குறிப்பாக ஒன்பதாம் நாள் வழிபடப்படுகின்றார். குஃக்கா பாம்புக்கடிகளிலிருந்து காப்பவராக கருதப்படுகின்றார். மாரிசு எனப்படும் கோயில்களில் வணங்கப்படுகின்றார். இந்தக் கோயில்கள் எந்த சமயத்து விதிமுறைகளையும் பின்பற்றுவதில்லை; எரும்புப் புற்றிலிருந்து சீக்கிய குருத்வாரா போன்றோ முசுலிம் பள்ளி போன்றோ அமைந்திருக்கும். குஃக்கவை வணங்கும்போது படையலுக்கு நூடில்சு வழங்குகின்றனர். இவற்றை பாம்புகள் வசிக்குமிடங்களிலும் விட்டுச் செல்கின்றனர்.[1]

சுவாரசியமாக, சிந்தி மக்களும் சிரவண மாதத்தில் நாக பஞ்சமி அன்று கோக்ரோ என்று விழா எடுக்கின்றனர். கோக்ரோவின் கதை கட்ச் மாவட்டத்தில் (குசராத்து) நடக்கின்றது. பெயர் ஒற்றுமை மட்டுமின்றி (கோக்ரோ, கோகாஜி) கோக்ரோவின் அன்னையின் பெயர் வச்சல்பாய் குஃக்காவின் அன்னை பெயரான இராணி பச்சலை ஒட்டி உள்ளது. [2]

இராசத்தானில் பிறப்பு

[தொகு]

குஃக்கா தற்கால இராசத்தானில் சுரு மாவட்டத்தில் தாத்ரேவாவில் வீரர்-அரசராகப் பிறந்தார். இவரது தந்தை தாத்ரேவாவின் அரசர் ஜேவர் ஆவார். தாய் பச்சல்தேவி.

உசாத்துணை

[தொகு]
  • Briggs, George Weston (1 January 2001). Gorakhnāth and the Kānphaṭa Yogīs. Motilal Banarsidass Publ. p. 192. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-208-0564-4. பார்க்கப்பட்ட நாள் 11 January 2011.

மேற்சான்றுகள்

[தொகு]
  1. Bhatti, H.S Folk Religion Change and Continuity Rawat Publications
  2. [1] Jhulelal.com
"https://ta.wikipedia.org/w/index.php?title=குஃக்கா&oldid=2089634" இலிருந்து மீள்விக்கப்பட்டது