கித்தா நடனம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கித்தா நடனம்
Ready to perform punjabi cultural dance" Gidha" 2013-10-26 18-05.jpg
பஞ்சாபிக் கித்தா நடனக் கலைஞர்
வகைநாட்டுப்புற நடனம்
மூலம்பஞ்சாப் பகுதி

கித்தா நடனம் (Giddha, பஞ்சாபி: ਗਿੱਧਾ) என்பது இந்திய, பாக்கித்தான் நாடுகளின் பஞ்சாப் பகுதிப் பெண்கள் ஆடுகின்ற ஒரு பிரபலமான நாட்டுப்புற நடனம் ஆகும்.[1] பாரம்பரிய நடனமான வட்ட நடனத்திலிருந்து பிறந்த ஒருவகை நடனமாக இது கருதப்படுகிறது. இது பங்கரா நடனத்தைப் போலவே துடிப்புநிறைந்ததாகும். அதேநேரத்தில், பெண்மையின் நளினம், நேர்த்தி, நெகிழ்ச்சி ஆகிய கலைநுட்பங்களும் இந்நடனத்தில் ஆக்கப்பூர்வமாக வெளிக்கொணரப்படுகின்றன. வண்ணமயமான கித்தா நடன வடிவம், தற்பொழுது இந்தியநாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் படியெடுக்கப்பட்டு ஆடப்படுகிறது. முக்கியமாக, பண்டிகை நாள்களிலும் சமூக விழாக்களிலும் பெண்கள் கித்தா நடனத்தை ஆடுகின்றனர்[2]

கித்தா ஆடுமுன் மகளிரின் ஒயில்

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கித்தா_நடனம்&oldid=2090460" இருந்து மீள்விக்கப்பட்டது