ரூப்நகர் மாவட்டம்
ரூப்நகர் மாவட்டம்
ਰੂਪਨਗਰ ਜ਼ਿਲ੍ਹਾ | |
---|---|
மாவட்டம் | |
பஞ்சாபில் ரூப்நகர் மாவட்ட அமைவிடம் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | பஞ்சாப் |
பெயர்ச்சூட்டு | மன்னர் ரூப் சென் |
தலைமையிடம் | ரூப்நகர் |
பரப்பளவு | |
• மொத்தம் | 1,440 km2 (560 sq mi) |
மக்கள்தொகை (2011)‡[›] | |
• மொத்தம் | 6,84,627 |
• அடர்த்தி | 480/km2 (1,200/sq mi) |
மொழிகள் | |
• அலுவல் மொழி | பஞ்சாபி |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
ஐஎசுஓ 3166 குறியீடு | IN-PB-RU |
எழுத்தறிவு | 82.19% |
இணையதளம் | rupnagar |
ரூப்நகர் மாவட்டம் (Rupnagar district) வடமேற்கு இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தின் 22 மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத் தலைமையிட நகரம் ரூப்நகர் ஆகும்.
சத்லஜ் ஆறு இம்மாவட்டத்தின் நங்கல், ரூப்நகர் மற்றும் அனந்தப்பூர் சாகிப் வருவாய் வட்டங்கள் வழியாக பாய்கிறது.
மாவட்ட எல்லைகள்
[தொகு]ரூப்நகர் மாவட்டத்தின் வடக்கில் இமாசலப் பிரதேசத்தின் உன்னாவ் மாவட்டம், மற்றும் வட கிழக்கில் பிலாஸ்பூர் மாவட்டம், கிழக்கில் சோலான் மாவட்டம், தென்கிழக்கில் மொகாலி மாவட்டம், தென்மேற்கில் பதேகர் சாகிப் மாவட்டம், மேற்கில் லூதியானா மாவட்டம் வடமேற்கில் ஹோசியார்பூர் மாவட்டம் மற்றும் சாகித் பகத்சிங் நகர் மாவட்டம் எல்லைகளாக உள்ளது.
மாவட்ட நிர்வாகம்
[தொகு]ரூப்நகர் மாவட்டம் ரூப்நகர், அனந்தப்பூர் சாகிப், சம்கௌர் சாகிப், நங்கல் என நான்கு வருவாய் வட்டங்களையும்; ரூப்நகர், சம்கௌர் சாகிப், அனந்தப்பூர் சாகிப், மொரிந்தா, கிராத்பூர் சாகிப், நங்கல் என ஆறு நகராட்சி மன்றங்களையும்; 617 கிராமங்களையும் கொண்டது.[1]
மக்கள் தொகையியல்
[தொகு]2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி இம்மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகை 683,349 ஆக உள்ளது.[2] கடந்த பத்தாண்டுகளில் (2001-2011) மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 8.67%. ஆக உயர்ந்துள்ளது. பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு 913 பெண்கள் வீதம் உள்ளனர். 1440 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாவட்டத்தின் மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 488 மக்கள் வாழ்கின்றனர். இம்மாவட்டத்தின் சராசரி படிப்பறிவு 83.3% ஆக உள்ளது.
மொழிகள்
[தொகு]பஞ்சாப் மாநிலத்தின் ஆட்சி மொழியான பஞ்சாபி மொழியுடன், இந்தி, உருது மற்றும் வட்டார மொழிகளும் இம்மாவட்டத்தில் பேசப்படுகிறது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-22. பார்க்கப்பட்ட நாள் 2016-04-19.
- ↑ "District Census 2011". Census2011.co.in. 2011. பார்க்கப்பட்ட நாள் 2011-09-30.