பஞ்சாபி சுபா இயக்கம் (Punjabi Suba movement) அல்லது பஞ்சாப் தனிமாநில இயக்கம் 1950களில் கிழக்கு பஞ்சாபிலிருந்து பஞ்சாபியர்-பெரும்பான்மையரான மாநிலத்தை ("சுபா") அமைக்கப்படுவதற்கான போராட்ட இயக்கம் ஆகும். அகாலி தளத்தால் முன்னெடுக்கப்பட்ட இந்தப் போராட்டத்தின் விளைவாக பஞ்சாபி மொழியினர் பெரும்பான்மையான பஞ்சாப் மாநிலமும், இந்தி மொழியினர் பெரும்பான்மையான அரியானா மாநிலமும் சண்டிகர்ஒன்றியப் பகுதியும் உருவாயின. சில மலைவாசி மொழியினர் பெரும்பான்மையாக இருந்த கிழக்குப் பஞ்சாபின் பகுதிகள் இமாச்சலப் பிரதேசத்துடன் இணைக்கப்பட்டுள்ளன.