உள்ளடக்கத்துக்குச் செல்

பாங்கரா (இசை)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பங்கரா (பஞ்சாபி: ਭੰਗੜਾ بھنگڑا; Bhangra; pə̀ŋgɽäː) என்பது பஞ்சாபி பண்பாட்டு பின்புலத்தில் தோற்றம் பெற்ற ஒரு ஆடல் வடிவத்தையும் அதனோடு இணைந்து இசைக்கப்படும் இசை வடிவத்தையும் குறிக்கின்றது. பங்கரா பஞ்சாப் நிலப்பகுதியின் விவசாயிகளின் கொண்டாட்ட நாட்டார் ஆடல் இசை வடிவமாக தோற்றம் பெற்றது. பஞ்சாபி மக்கள் மேற்கு நாடுகளுக்கு இந்த வடிவத்தை எடுத்து சென்று, இன்று உலககெங்கும் விரும்பிக் கேட்கப்படும் ஆடப்படும் வடிவமாக இருக்கின்றது. அதன் பஞ்சாபி நாட்டார் வடிவ தோற்றத்தில் இருந்து இன்று பல புதிய நடைகளையும் மொழிகளையும் இணைத்து பங்கரா வளர்ந்து நிற்கின்றது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பாங்கரா_(இசை)&oldid=2899279" இலிருந்து மீள்விக்கப்பட்டது