உள்ளடக்கத்துக்குச் செல்

புவாத பகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பஞ்சாபின் நிலப்பகுதிகளைக் காட்டும் படம்

புவாத (Poadh, Powadh, Puadh அல்லது Powadha) பகுதி இந்தியாவின் வடமேற்கே உள்ள |பஞ்சாபு-அரியானா மாநிலங்களில் உள்ள ஒரு நிலப்பகுதியாகும். இது சத்துலுச்சு ஆற்றுக்கும் கக்கார்-அக்குரா ஆற்றுக்கும் இடைப்பகுதியிலும், தெற்கேயும் தென்கிழக்கேயும் உள்ள அரியானா மாநிலத்தைச் சேர்ந்த அம்பாலா மாவட்டத்துக்கும், பஞ்சாபின் உரூப்பநகர் மாவட்டத்துக்கும் அருகே உள்ள ஓரிடம்.[1]

பஞ்சாபி மொழியின் ஒரு வட்டார மொழியாகக் கருதப்படும் புவாதி மொழியை இப்பகுதியில் பேசுகின்றார்கள். இந்த புவாத பகுதி சத்துலுச்சு ஆற்றுக்கு அருகேயுள்ள உரூப்பநகர் மாவட்டத்தையும் தாண்டி கக்கர் ஆற்றையும் தாண்டி கிழக்கே இமாச்சலப் பிரதேசத்தின் காலா ஆம்பு வரை பரவியுள்ளது. இது இமாச்சலப் பிரதேசத்தையும் அரியானாவையும் பிரிக்கும் எல்லைப்பகுதியாகும். இதே புவாத பகுதியைச் சேர்ந்தவைதாம் பட்டேகார் சாகிபு மாவட்டத்தின் பகுதிகள் சிலவும், இராசபுரா போன்ற பாட்டியாலா மாவட்டத்தின் சில பகுதிகளும், பஞ்சகுல, அம்பாலா, யமுனாநகர், சகரன்பூர், பேகாத்து ஆகியவையும். இங்கே பேசுகின்ற புவாதி மொழி பஞ்சாபின் பிறபகுதிகளிலும் அரியானாவிலும் பேசுகின்றார்கள்.[2]

அடிக்குறிப்புகளும் மேற்கோளும்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=புவாத_பகுதி&oldid=3429129" இலிருந்து மீள்விக்கப்பட்டது