உள்ளடக்கத்துக்குச் செல்

வண்டல் மண்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வண்டல் மண் (Alluvial soil) மலையில் இருந்து ஓடிவரும் ஆறு மக்கின செடி, கொடி, தழைகளையும் பல தாதுப் பொருள்களையும் அடித்தவாறு வரும்போது இவை ஒன்றிணைந்து உருவாகிறது. எனவே இவை வேளாண்மைக்கு மிகவும் ஏற்றதாகவும் தழைச்சத்து, நார்ச்சத்து, கனிமங்கள் உடையதாகவும் உள்ளது. வெளிர் நிறம் உடைய மணற்பாங்கான மண் சுண்ணாம்பு மற்றும் களிமண் பாங்கான வண்டல் படிவுகள் அடர் நிறம் உடையது சிற்றோடைகள் மற்றும் ஆறுகள் படிய வைத்ததனால் உருவாகின்றன.

வேதியியல் பண்புகள்

[தொகு]

பொட்டாசியம் பாஸ்போரிக் அமிலம் சுண்ணாம்பு மற்றும் கார்பன் கலவைகள் அதிகமாக காணப்படுகின்றன நைட்ரஜன் குறைவாக உள்ளது.

மண்ணின் தன்மைகள்

[தொகு]

வண்டல் மண் மண்டி களிமண் போன்ற கலவைகளுடன் மண்ணடுக்கு காணப்படுகிறது.

இந்தியாவில் இதன் பரவல்

[தொகு]

கங்கை மற்றும் பிரம்மபுத்திரா ஆற்று பள்ளத்தாக்குகள், உத்தர பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், அரியானா, மேற்கு வங்கம் மற்றும் பீகார் மாநிலத்தில் உள்ள சமவெளிப் பகுதிகள்.

வளரும் பயிர்கள்

[தொகு]

நெல், கோதுமை, கரும்பு மற்றும் எண்ணெய் வித்துக்கள்.

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=வண்டல்_மண்&oldid=3390781" இலிருந்து மீள்விக்கப்பட்டது