வசந்தப் பட்டத் திருவிழா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வசந்தப் பட்டத் திருவிழா
அதிகாரப்பூர்வ பெயர்Basant Panchami
கடைபிடிப்போர்அனைத்து சமய நம்பிக்கை சார்ந்தோரும்
திருவழிபாட்டின் நிறம்மஞ்சள்
அனுசரிப்புகள்பட்டம் விடல். இனிப்புப் பண்டம் உண்ணல். மஞ்சள் பூக்களால் வீடுகளை அலங்கரித்தல்.
நாள்மகம் Shukla பஞ்சமி

வசந்தப் பட்டத் திருவிழா (Basant Kite Festival) ஒரு பருவகாலத் திருவிழா ஆகும்.[1]இது பஞ்சாப் பகுதியில் கொண்டாடப்படுகிறது. இது வசந்தத்தில் வருவதால் பஞ்சாப் மொழியில் வசந்த பஞ்சமி எனப்படுகிறது; (உருது: بسنت پنچمی; இந்தி: बसन्त पञ्चमी) ). பஞ்சாப் நாட்காட்டியின்படி மக மாத ஐந்தாம் நாளன்று (ஜனவரி கடைசியில் அல்லது பிப்ரவரி முற்பகுதியில்) இளவேனில் தொடங்கும்போது நடத்தப்படுகிறது. இது பாக்கித்தான மாநகரங்களான இலாகூரிலும் இராவல்பிண்டியிலும் கூட நடத்தப்படுகிறது. என்றாலும், பாக்கித்தனச் சட்டப்படி வேதிமக் கயிறு மாந்த வாழ்வுக்கு ஊறு விளைவிப்பதால் விழாவில் பட்டம் விடல் கடுமையாகத் தடுக்கப்பட்டுள்ளது.

இளவேனிற்காலம்[தொகு]

வட இந்தியாவிலும் பஞ்சாப் பகுதியிலும் வசந்த்த் திருவிழா பருவகாலப் பண்டிகையாக்க் கருதப்படுகிறது. எனவே எல்லா சமயத்தினரும் இதை பட்டம் விட்டு கொண்டாடுகிறனர்.[2] இது இளவேனிற்காலப் பருவத் தொடக்கத்தைக் குறிக்கிறது. இத்திருவிழா பின்வரும் மொழிய்யல் விளங்கும். ஆயி பசந்த்; பாலா உதந்த் (வருகுது இளவேனில்; மறையும் குளிரே!). [3]

வசந்தப் பட்டத் திருவிழா[தொகு]

பாக்கித்தானத் திருவிழா
வசந்தப் பட்டம்

[File:Dhotis in Delhi.jpg|thumb|left|மஞ்சள் வேட்டிகள்]] இந்தியாவின் பல பகுதிகளிலும் இது சமயஞ் சாராத பண்டிகையாகக் கொண்டாடப்படுகிறது.[2] என்றாலும் பஞ்சாப் பகுதியிலும் பாக்கித்தானப் பஞ்சாபிலும் இது மிகச் சிறப்பாகத்தைவகையில் கொண்டாடப்படுகிறது . மரபாக நெடுங்காலமாகவே பட்டம் விடுதல் வழக்கில் உள்ளது.[4]இதில் பல கண்காட்சிகளும் நட்த்தப்படுகின்றன.

வசந்தமும் பின்பனிக் காலமும்[தொகு]

இந்திய ஆண்டு ஆறு பருவங்களாகப் பிரிக்கப்படுகிறது. முதல் பருவம் இளவேனில் (வசந்த இரிது) ஆகும், இரண்டாம் பருவம் முதுவேனில் (கிறிசும இரிது) ஆகும். மூன்றாம் பருவம் 'கார்காலம் (வர்ழ்ச இரிது)' ஆகும். நான்காம் பருவம் கூதிர் அல்லது இலையுதிர்காலம் 'ஷரத் இரிது' ஆகும். ஐந்தாம் பருவம் முன்பனிக் காலம் ' (ஃஏமந்த இரிது)' ஆகும். கடைசி ஆறாம் பருவம் பின்பனிக் காலம் '(ஷிஷிர் இரிது)' ஆகும்.

வசந்த பஞ்சமி பின்பனிக் கால இறுதியில் வந்தாலும், இது இளவேனிலின் தொடக்கத்தில் வருவதாக்க் கருதப்படுகிறது. இது வசந்த காலத்தை வரவேற்க மக்களை ஆயத்தப் படுதுகிறது எனலாம். மாறாக மற்றொரு விளக்கமும் தரலாம். பண்டைய இந்தியாவில் இளவேனில் மகம்-பாகன் நடுவில் (ஜனவரி-பிப்ரவரி நடுவில்) வந்ததால், மரபாக இப்போதும் இது இக்கால இடைவெளியில் கொண்டாடப்படுகிறது.

மகி சூரிய மகத்தில் கொண்டாடப்பட, வசந்த்த் திருவிழா நிலா மகத்தில் கொண்டாடப்படும். இரண்டுமே பருவஞ்சார் திருவிழாக்களே. இவற்ரில் மகி முன்பும் வசந்த்த் திருவிழா பின்பும் கொண்டாடப்படுகின்றன.

கடுகுத் திருவிழா[தொகு]

கோதுமை வயலில் கடுகுப் பயிர்)

கடுகு செப்டம்பரில் இருந்து பிப்ரவரிக்குள் நடப்பட்டு, இப்பயிர் பூப்பூது காய்காய்த்து மர்ச்சில் இருந்து மே மத்த்துக்குள் அறுவடை செய்யப்படுகிறது. [5] Basant Panchami takes place towards the end of the flowering season and is therefore regarded as a festival related to mustard in the பஞ்சாப் பகுதி.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Chapter iii". Punjabrevenue.nic.in. 1930-04-01. Archived from the original on 2016-06-03. பார்க்கப்பட்ட நாள் 2014-02-17.
  2. 2.0 2.1 The Sikh World: An Encyclopedia Survey of Sikh Religion and Culture: Ramesh Chander Dogra and Urmila Dogra; பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-7476-443-7
  3. The Partitions of Memory: The Afterlife of the Division of India - Google Books. Books.google.co.uk. பார்க்கப்பட்ட நாள் 2014-02-17.
  4. Punjabiat: The Cultural Heritage and Ethos of the People of Punjab: Jasbir Singh Khurana
  5. Report of Rapeseed [1] பரணிடப்பட்டது 2013-06-07 at the வந்தவழி இயந்திரம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=வசந்தப்_பட்டத்_திருவிழா&oldid=3570463" இலிருந்து மீள்விக்கப்பட்டது