பஞ்சாப் வேளாண்மை பல்கலைக்கழகம்
Appearance
PAU Seal | |
வகை | பொதுத்துறை |
---|---|
உருவாக்கம் | 1962 |
துணை வேந்தர் | பல்தேவ்சிங் தில்லோன் |
கல்வி பணியாளர் | 1250 |
அமைவிடம் | , , |
வளாகம் | நகர்ப்புறம் 1,510 ஏக்கர்கள் (6.1 km2) |
சேர்ப்பு | ஏசியூ, ஐசிஏஆர், யுஜிசி |
இணையதளம் | www.pau.edu |
பஞ்சாப் வேளாண்மை பல்கலைக்கழகம் (Punjab Agricultural University, PAU) இந்திய மாநிலம் பஞ்சாபில் லூதியானா நகரில் அமைந்துள்ள மாநில வேளாண்மைப் பல்கலைக்கழகமாகும்.[1] இது 1962இல் நாட்டின் இரண்டாவது மிகப் பழைய வேளாண்மைப் பல்கலைக்கழகமாக நிறுவப்பட்டது; பாந்த்நகரில் உள்ள கோவிந்த் பல்லவ் பாந்த் வேளாண்மை மற்றும் தொழினுட்ப பல்கலைக்கழகம் முதன்முதலாக நிறுவப்பட்ட வேளாண்மைக்கான பல்கலைக்கழகமாகும். வேளாண் கல்வியில் இந்தப் பல்கலைக்கழகத்திற்கு பன்னாட்டளவில் நற்பெயர் உள்ளது. 1960களில் இந்தியாவின் பசுமைப் புரட்சியை முன்நடத்தியப் பெருமையும் பஞ்சாப் வேளாண் பல்கலைக்கழகத்திற்கு உள்ளது.[2] 2005ஆம் ஆண்டில் இதிலிருந்து குரு அங்கத் தேவ் கால்நடை மற்றும் விலங்கியல் பல்கலைக்கழகம் உருவானது.