ஹலிதா ஷமீம்
Appearance
ஹலிதா ஷமீம் | |
---|---|
பிறப்பு | செப்டம்பர் 12, தாராபுரம், திருப்பூர் மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா |
பணி | இயக்குநர் (திரைப்படம்) திரைக்கதை ஆசிரியர் திரைப்படத் தொகுப்பு |
செயற்பாட்டுக் காலம் | 2014–நடப்பு |
சொந்த ஊர் | தாராபுரம் |
ஹலிதா ஷமீம் (Halitha Shameem) தமிழ்த் திரைப்பட இயக்குநர்.[1] இவரது சொந்த ஊர் தாராபுரம். கொடைக்கானலில் பள்ளிப்படிப்பையும் எஸ். ஆர். எம். பல்கலைக்கழகத்தில் கல்லூரிப் படிப்பையும் முடித்தார். இவர் இயக்குநர்கள் புஷ்கர்-காயத்ரி, மிஷ்கின் ஆகியோரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர். 2014 இல் இவரது முதல் தமிழ்த் திரைப்படம் பூவரசம் பீப்பீ வெளியானது.[2] ஐந்தாண்டு இடைவெளிக்குப் பின்னர் 2019 இல் நான்கு கதைகள் கொண்ட சில்லுக்கருப்பட்டி தமிழ்த் திரைப்படத்தை இயக்கினார். இத்திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வணிக ரீதியாகவும் வெற்றிபெற்றது.[3]
இயக்கிய திரைப்படங்கள்
[தொகு]- பூவரசம் பீப்பீ (2014)
- சில்லுக்கருப்பட்டி (2019)
- ஏலே (2021)
- மின்மினி (2024)
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "All you want to know about #HalithaShameem". FilmiBeat (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 18 February 2020.
- ↑ "'I love doing films with big stars, but I love introducing new talents more' - Times of India". The Times of India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 18 February 2020.
- ↑ S, Srivatsan (27 December 2019). "'Sillu Karupatti' movie review: Life is like a box of chocolates". The Hindu (in Indian English). பார்க்கப்பட்ட நாள் 18 February 2020.