போகர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

போகர் பதினெண் சித்தர்களுள் ஒருவர் ஆவார். இவர் பிறப்பால் தமிழ் வண்ணார்.[சான்று தேவை] தமிழ்நாட்டில் பிறந்து பின்னர் சீனா சென்றவர் என்று சிலர் கூறுகின்றனர்.[யார்?] இவர் நவசித்தர்களுள் ஒருவரான காளங்கி நாதரின் சீடர் ஆவார். போகரின் சீடர் புலிப்பாணி ஆவார். சீனாவில் போகர் போ-யாங் என்று அறியப்படுகிறார். போகர் ஏழாயிரம், 700 யோகம், போகர் நிகண்டு மற்றும் 17000 சூத்திரம் ஆகிய நூல்கள் போகரால் இயற்றப்பட்டவை என்று கருதப்படுகின்றன.

பழநி முருகன் சிலை[தொகு]

பழநி முருகனின் மூலத்திருவுருவச் சிலை போகரால் செய்யப்பட்டது என்று நம்பப்படுகிறது. இச் சிலை நவபாடாணங்களைக் கொண்டு செய்யப்பட்ட நவபாடாணச் சிலை என்று கருதப்படுகிறது. இச்சிலை தற்போது சேதமடைந்து விட்டது. எனவே இச்சிலைக்கு அபிடேகம் நடைபெறுவதி‌ல்லை. நவ பாசான சிலை சேதமடைய காரணம் சிலையின் பாடாணம் மருத்துவக் குணமுள்ளதால், பூசை செய்பவர்கள் சிலையைச் சுரண்டி சித்த மருத்துவர்களுக்கும் பிறருக்கும் பணத்திற்கு விற்றதாக பரவலாகப் பேசப்படுகிறது.

போகர் நூல்கள்[தொகு]

போகர் நூல்கள் பல உள்ளன.அவற்றுள் சில நூல்களே அறியப்பட்டுள்ளன.

 • போகர் 12000
 • போகர் 7000 (சப்த காண்டம்)
 • ஜெனன சாகரம் 550
 • நிகண்டு 1700
 • வைத்தியம் 1000
 • சரக்குவைப்பு 800
 • செனன சாகரம் 550
 • கற்பம் 360
 • உபதேசம் 150
 • இரணவாகமம் 100
 • ஞானசாராம்சம் 100
 • கற்ப சூத்திரம் 54
 • வைத்திய சூத்திரம் 77
 • முப்பு சூத்திரம் 51
 • ஞான சூத்திரம் 37
 • அட்டாங்க யோகம் 24
 • பூசா விதி 20

'போகர் 7000: சப்தகாண்டம் ஒரு பார்வை' (ஆசிரியர்- எஸ்.சந்திரசேகர்) என்ற விளக்க நூலை லியோ புக்ஸ்-சென்னை, வெளியிட்டுள்ளது. இந்நூலில் மொத்தம் ஏழு காண்டங்களுக்கு சுருக்கமான பொருளுரை உள்ளது. இதன் விலை ரூ.120/- போகர் 7000 பாடல்கள் சப்தகாண்டம்

'போகர் ஜெனன சாகரம்' (ஆசிரியர்- எஸ்.சந்திரசேகர்) என்ற விளக்க நூலை கற்பகம் புத்தகாலயம், தி.நகர்,சென்னை, வெளியிட்டுள்ளது. இதன் விலை ரூ.60/-

'அதிசய சித்தர் போகர்' (ஆசிரியர்- எஸ்.சந்திரசேகர்) என்ற நூலை கற்பகம் புத்தகாலயம், தி.நகர்,சென்னை, வெளியிட்டுள்ளது. இதன் விலை ரூ.120/-

ஊடகங்களில்[தொகு]

விஜய் தொலைக்காட்சியில் ‌ஒளிபரப்பாகும் யாமிருக்க பயமேன் எனும் தொடர் போகர் மற்றொரு நவபாடாணச் சிலையை செய்ததாகவும் அச்சிலை மண்ணில் எங்கோ புதைந்திருப்பதாகவும் இரு குழுக்கள் அச்சிலையைத் தேடுகின்ற கதையை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டது.

உசாத்துணை[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=போகர்&oldid=2563902" இருந்து மீள்விக்கப்பட்டது