உத்தண்ட வேலாயுதசாமி கோயில், ஊதியூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உத்தண்ட வேலாயுதசாமி கோயில், ஊதியூர்
ஊதியூர் உத்தண்ட வேலாயுதசாமி திருக்கோவில்
உத்தண்ட வேலாயுதசாமி கோயில், ஊதியூர் is located in தமிழ் நாடு
உத்தண்ட வேலாயுதசாமி கோயில், ஊதியூர்
உத்தண்ட வேலாயுதசாமி கோயில், ஊதியூர்
திருப்பூர் மாவட்டம் ஊதியூரில் உள்ள கோவில்
ஆள்கூறுகள்:10°53′31″N 77°31′29″E / 10.892073°N 77.524649°E / 10.892073; 77.524649
பெயர்
பெயர்:உத்தண்ட வேலாயுதசாமி திருக்கோவில்
அமைவிடம்
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:திருப்பூர்
அமைவு:ஊதியூர்
சட்டமன்றத் தொகுதி:காங்கேயம் சட்டமன்ற தொகுதி
மக்களவைத் தொகுதி:ஈரோடு மக்களவைத் தொகுதி
ஏற்றம்:314 m (1,030 அடி)
கோயில் தகவல்கள்
மூலவர்:வேலாயுதசாமி (முருகன்)
தாயார்:வள்ளி, தெய்வானை
சிறப்பு திருவிழாக்கள்:தைப்பூசம், சூரசம்ஹாரம்
உற்சவர்:அருள்மிகு குரட்டுவாசல் விநாயகர், அருள்மிகு கன்னிமூலகணபதி, அருள்மிகு கொடிமர விநாயகர், அருள்மிகு விநாயகர், அருள்மிகு குழந்தைவேலாயுதசுவாமி, அருள்மிகு நவக்கிரக சந்நதி, அருள்மிகு இம்பன், அருள்மிகு கைலாசநாதர், அருள்மிகு சூரியன், அருள்மிகு தட்சிணாமூர்த்தி, அருள்மிகு சண்டிகேஸ்வரர், அருள்மிகு பைரவர்
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு:தென்னிந்திய/திராவிடக் கட்டிடக்கலை
கல்வெட்டுகள்:9 ஆம் நூற்றாண்டு தமிழ் சைவ கல்வெட்டுகள்
வரலாறு
கட்டப்பட்ட நாள்:9ஆம் நூற்றாண்டு கி.பி
அமைத்தவர்:கொங்கணர் சித்தர்
கோயில் அறக்கட்டளை:இணை ஆணையர், திருப்பூர், இந்து சமய அறநிலையத்துறை

அருள்மிகு உத்தண்டவேலாயுதசுவாமி திருக்கோயில் (Aruḷmigu utthaṇṭaVēlāyudhaSwāmi tirukkōvil)திருப்பூர் மாவட்டம், ஊதியூர் மலை மேல் அமைந்துள்ள 9 ஆம் நூற்றாண்டு அருணகிரிநாதரின் திருப்புகழ்ப் பெற்ற முருகன் கோவில் ஆகும். இது திருப்பூர் மாவட்டத்தில், முருகனது சிறப்புடைய கோவில்களில் ஒன்றாகும். இது தமிழ்நாட்டில், திருப்பூர் மாவட்டத்தில், காங்கயம் வட்டத்தில், ஊதியூரில் உள்ள பொன்னூதி மலையில் அமைந்துள்ளது. காங்கேயத்திலிருந்து 14 கிமீ தொலைவிலும், தாராபுரத்திலிருந்து 17 கிமீ தொலைவிலும், திருப்பூரிலிருந்து 38 கிமீ தொலைவிலும், ஈரோட்டில் இருந்து 60 கிமீ தொலைவிலும் மற்றும் கோயம்புத்தூரில் இருந்து 70 கிமீ தொலைவில் இக்கோவில் அமைந்துள்ளது.[1][2]

கோவில் விவரங்கள்[தொகு]

இந்த சைவ ஆலயம் காரண ஆகமம் மற்றும் சைவ சித்தாந்த தத்துவத்தை பின்பற்றுகிறது. இந்த கோவிலுக்கு 2 கால பூஜை நடத்தப்பட்டுள்ளது. இந்த கோவிலுக்கு 1500 ஏக்கர் நிலம் உள்ளது. இந்தக் கோயிலில் பங்குனி மாதத்தில் தினசரி விழாக்கள் மற்றும் ஆண்டு விழா நடைபெறுகின்றன.[3][4][5][5][6]

வரலாறு[தொகு]

இக்கோயில் ஒன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது. இந்த கோவில் கொங்கு வேளாளர் கவுண்டர் சமூகத்திற்கு மிகவும் சிறப்பு வாய்ந்தது. திருப்புகழ் பாடலில்(பாடல் 611, 612) மலையை ஊதிமலை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.[7]

கோயில் அமைப்பு[தொகு]

இக்கோயிலில் காளிக்குமாரசுவாமி சன்னதி உள்ளது. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.[8]

கோவில் சிறப்பு[தொகு]

மலைகளில் முருகனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட திராவிடக் கட்டடக்கலையில் கட்டப்பட்ட ஊரின் முக்கிய சிவாலயம் உத்தண்ட வேலாயுதசாமி கோவில் ஆகும். இது மாவட்டம் முழுவதும் ஆயிரக்கணக்கான மக்களை ஈர்க்கிறது. தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்ட கி.பி. 9-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த, தமிழில் நிறைய பழங்கால கல்வெட்டுகள் உள்ளன. இது தரையிலிருந்து 100 படிகள் மலைகளின் மேல் அமைந்துள்ளது. பழனி பாத யாத்திரை பக்தர்களுக்கு இது முக்கியமான இடம்.[9][10]

திருக்கோவில் நுழைவு வாசல் தென்புறம் அமைந்துள்ளது. கிழக்கில் ராஜகோபுரம் வாசலுடன் காணப்படுகிறது. கருவறையில், உத்தண்ட வேலாயுத சுவாமி, கிழக்கு நோக்கி ஐந்தடி உயரத்தில் காட்சி தருகின்றார். இவரின் கோலம் மேற்கு நோக்கிய பழனி ஆண்டவரைத் தரிசித்தவாறு அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. மூலவரை கொங்கண சித்தர் உருவாக்கியதாகத் தலவரலாறு கூறுகிறது. இவருக்குத் துணையாக விநாயகப் பெருமான் மற்றும் பைரவர் சன்னிதிகள் அமைந்துள்ளன.

இந்த ஆலயத்தில் பவுர்ணமி, சஷ்டி, பங்குனி உத்திர விழாக்கள் சிறப்பாக நடைபெறும். பவுர்ணமி நாட்களில் நள்ளிரவு வரை சுவாமி தரிசனம் செய்யலாம். இக்கோயில் பழனியில் உள்ள தெண்டாயுதபாணி கோயிலுக்கு நிகரான சக்தி பெற்றதாகும்.

திப்பு சுல்தான் மற்றும் கோவில்[தொகு]

18 ஆம் நூற்றாண்டில், திப்பு சுல்தான் மன்னன் வேலாயுத சுவாமி திருவுருவச்சிலையின் தலை, கை , கால்களில் வெட்டியதாகவும், இதனால் கோபமுற்ற சித்தர்கள் திப்புசுல்தானை நீ இந்த சிலையை எப்படி வெட்டினாயோ அதுபோலவே எத்தை முறை வெட்டினாயோ அத்தனை மாதங்களில் இறப்பாய் என சாபம் கொடுத்ததாகவும் அதுபோலவே திப்புசுல்தான் இறந்ததாகவும் கூறப்படுகிறது. இன்று இந்த கோயிலில் அந்த வெட்டுப்பட்ட சிலை உள்ளது.[11]

இந்த தலத்தில் பாடப்பெற்ற திருப்புகழ்[தொகு]

பாடல்[தொகு]

ஆதிமக மாயி யம்பை தேவிசிவ னார்ம கிழ்ந்த

     ஆவுடைய மாது தந்த ...... குமரேசா

ஆதரவ தாய்வ ருந்தி யாதியரு ணேச ரென்று

     ஆளுமுனை யேவ ணங்க ...... அருள்வாயே

பூதமது வான வைந்து பேதமிட வேய லைந்து

     பூரணசி வாக மங்க ...... ளறியாதே

பூணுமுலை மாதர் தங்கள் ஆசைவகை யேநி னைந்து

     போகமுற வேவி ரும்பு ...... மடியேனை

நீதயவ தாயி ரங்கி நேசவரு ளேபு ரிந்து

     நீதிநெறி யேவி ளங்க ...... வுபதேச

நேர்மைசிவ னார்தி கழ்ந்த காதிலுரை வேத மந்த்ர

     நீலமயி லேறி வந்த ...... வடிவேலா

ஓதுமறை யாக மஞ்சொல் யோகமது வேபு ரிந்து

     ஊழியுணர் வார்கள் தங்கள் ...... வினைதீர

ஊனுமுயி ராய்வ ளர்ந்து ஓசையுடன் வாழ்வு தந்த

     ஊதிமலை மீது கந்த ...... பெருமாளே.[12][13]

சொல் விளக்கம்
பாடல் வரிகள் பொருள்
ஆதிமக மாயி யம்பை முதன்மை பெற்ற மாபெரும் தாயாரும், அம்பாளும்
தேவி சிவனார்மகிழ்ந்த ஆவுடைய மாது தேவியும், சிவபிரான் மகிழ்கின்ற ஆவுடையாள்* என்ற பெயர் கொண்டவளுமான உமாதேவியார்
தந்த குமரேசா பெற்றருளிய குமாரக் கடவுளே
ஆதரவதாய் வருந்தி அன்புடன் மனம் கசிந்து உருகி
ஆதியருணேச ரென்று முழுமுதலாகிய செம்பொருள் ஈசனே என்று துதித்து
ஆளும் உனையே வணங்க அருள்வாயே ஆட்கொள்கின்ற உன்னை வணங்க அருள்வாய்.
பூதமதுவான ஐந்து பேதமிடவே அலைந்து ஐந்து பூதங்களின் மாறுபாட்டால் உண்டாகிய இந்த உடம்போடு எங்கெல்லாமோ

அலைந்து,

பூரண சிவாகமங்கள் அறியாதே நிறைவான சிவ ஆகமங்களைத் தெரிந்துகொள்ளாமல்
பூணுமுலை மாதர் தங்கள் நகைகள் அணிந்த மார்புடைய பெண்களின்
ஆசைவகை யேநி னைந்து விதவிதமான ஆசைகளையே நினைந்து
போகமுறவே விரும்பும் அடியேனை இன்பம் சுகிக்கவே விரும்பும் என்னை
நீதயவதாய் இரங்கி நீ மிக்க கருணை கொண்டு இரக்கப்பட்டு
நேசவருளே புரிந்து அன்போடு திருவருள் புரிந்து
நீதிநெறியே விளங்க சைவ நீதியும் சன்மார்க்க நெறியும் விளங்குமாறு
உபதேச நேர்மை எனக்கு உபதேசம் செய்த தன்மையானது,
சிவனார் திகழ்ந்த காதிலுரை சிவபிரானின் விளங்கும் காதில்உரைத்த
வேத மந்த்ர ஓம் என்னும் பிரணவ மந்திரப் பொருளே ஆகும்
நீலமயி லேறி வந்த அவ்வாறு எனக்கு உபதேசிக்க நீலமயிலில்ஏறி வந்தருளிய,
வடிவேலா கூர்மையான வேலாயுதத்தைக் கொண்ட கடவுளே
ஓதுமறை யாகமஞ்சொல் ஓதப்படும் வேதங்கள், ஆகமங்கள்ஆகியவை கூறும்
யோகமதுவே புரிந்து சிவயோகத்தையே செய்து
ஊழியுணர்வார்கள் தங்கள் விதியின் வழியை நன்கு உணரும்பெரியோர்களின்
வினைதீர வினைகள் தீருமாறு
ஊனும் உயிராய் வளர்ந்து அவர்களின் உடலோடும் உயிரோடும் கலந்து வளர்ந்து
ஓசையுடன் வாழ்வு தந்த கீர்த்தியுடன் சிவானுபவ வாழ்வைத் தந்த
ஊதிமலை மீது உகந்த பெருமாளே. ஊதிமலை மேல் உள்ளம் உவந்து வாழும் பெருமாளே

* ஆவுடையாள் என்றால் பசு ஏறும் பிராட்டி - திருப்பரங்குன்றத்தில் உள்ள பார்வதி தேவிக்கு ஆவுடை நாயகி எனப் பெயர் உண்டு.

ஊதிமலையில் உள்ள பிற கோவில்கள்[தொகு]

  • அருள்மிகு கொங்கணகிரி சித்தர் திருக்கோயில், ஊதியூர்[14]
  • அருள்மிகு உத்தண்டவேலாயுதசுவாமி திருக்கோயில், பொன்னூதி மலை, ஊதியூர்
  • அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில், ஊதியூர்
  • அருள்மிகு இடும்பகுமாரசுவாமி திருக்கோயில், பொன்னூதி மலை, ஊதியூர்
  • அருள்மிகு உச்சிவிநாயகர் திருக்கோயில், பொன்னூதி மலை, ஊதியூர்
  • அருள்மிகு கொங்கண சித்தர் திருக்கோயில் & தவபீடம், பொன்னூதி மலை, ஊதியூர்
  • அருள்மிகு அனுமந்தராயசுவாமி திருக்கோயில், பொன்னூதி மலை, ஊதியூர்
  • அருள்மிகு பிரகலநாயகி சமேத - கைலாசநாதர் ஆலயம், ஊதியூர்
  • செட்டி தம்பிரான் சித்தர் ஆலயம், பொன்னூதி மலை, ஊதியூர்

கோவில் திருவிழாக்கள்[தொகு]

ஊதியூர் திருவிழாக்களுக்கு பெயர்பெற்ற ஊராகும். இங்கு நடக்கும் குறிப்பிடத்தக்க திருவிழாக்கள்:

  1. தைப்பூசம்
  2. பங்குனி உத்திரம்
  3. சூரசம்ஹாரம் [15]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Government of Tamil Nadu – Hindu Religious & Charitable Endowments Department". hrce.tn.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2022-08-09.
  2. "Thirukkovil Details Form 2, CBE region". www.tamilvu.org. பார்க்கப்பட்ட நாள் 2022-08-11.
  3. "www.tamilvu.org Temples Coimbatore comm - Form1.html".
  4. "Uthanda Velayutha Swami Temple : Uthanda Velayutha Swami Uthanda Velayutha Swami Temple Details | Uthanda Velayutha Swami- Uthiyur | Tamilnadu Temple | உத்தண்ட வேலாயுத சுவாமி". temple.dinamalar.com. பார்க்கப்பட்ட நாள் 2022-08-09.
  5. 5.0 5.1 "அருள்மிகு உத்தண்ட வேலாயுத சுவாமி திருக்கோயில், ஊதியூர் – Aalayangal.com". koyil.siththan.org. பார்க்கப்பட்ட நாள் 2022-08-09.
  6. ValaiTamil. "அருள்மிகு உத்தண்ட வேலாயுத சுவாமி திருக்கோயில் | arulmigu uthanda velautha suvami thirukoyil". ValaiTamil. பார்க்கப்பட்ட நாள் 2022-08-09.
  7. "தல யாத்திரை - அருணகிரிநாதர் திருப்புகழ் - ஊதிமலை". www.templeyatra.com. பார்க்கப்பட்ட நாள் 2022-08-11.
  8. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  9. Lua error in Module:Citation/CS1/Utilities at line 206: Called with an undefined error condition: err_numeric_names.
  10. "Uthanda Velayutha Swami Temple : Uthanda Velayutha Swami Uthanda Velayutha Swami Temple Details | Uthanda Velayutha Swami- Uthiyur | Tamilnadu Temple | உத்தண்ட வேலாயுத சுவாமி". temple.dinamalar.com. பார்க்கப்பட்ட நாள் 2021-10-17.
  11. Admin (2019-02-04). "பெருமைமிகு ஊதியூர் கொங்கண சித்தர் கோவிலில் இந்துமுன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் வழிபாடு." இந்துமுன்னணி (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-02-11.
  12. "பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/977 - விக்கிமூலம்". ta.wikisource.org. pp. 977, 978, 999, 1000. பார்க்கப்பட்ட நாள் 2022-08-11.
  13. "திருப்புகழ் - ஆதிமக மாயி - Sri AruNagirinAthar's Thiruppugazh 611 AdhimagamAyi Udhimalai - Songs of Praises and Glory of Lord Murugan - Experience the Magic of Muruga". kaumaram.com. பார்க்கப்பட்ட நாள் 2022-12-10.
  14. "Uthanda Velayutha Swami Temple : Uthanda Velayutha Swami Uthanda Velayutha Swami Temple Details | Uthanda Velayutha Swami- Uthiyur | Tamilnadu Temple | உத்தண்ட வேலாயுத சுவாமி". temple.dinamalar.com. பார்க்கப்பட்ட நாள் 2022-08-11.
  15. விஜயதசமியன்று வன்னிகாசுர வதத்துடன் நிறைவுபெற்ற பழநி நவராத்திரி விழா! https://www.vikatan.com/news/spirituality/140208-vijayadashami-festival-at-palani-murugan-temple.html

வெளி இணைப்புகள்[தொகு]