சஞ்சீவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சஞ்சீவி (Sanjeevi) என்பது மூலிகைத் தாவரங்களை உடைய, மங்கலகரமான ஒரு மலை என வால்மீகி இராமாயணத்தில் கூறப் பட்டுள்ளது. இந்த மலை இந்துமத தொன்மத்தின்படி புனிதமானதாகக் கருதப்படுகிறது.[சான்று தேவை] இராமாயணக் கதையின்படி, இது இலங்கைப் போரில் மயக்கமடைந்த இராமர், இலட்சுமணன் ஆகியோரையும் படையினரையும் காக்க, துரோனகிரி என்ற இடத்தில் இருந்து  அனுமானால் கொண்டுவரப்பட்டதாகக் கூறப்பட்டுள்ள மலையாகும்.

கதை[தொகு]

இந்த மலைக்கும் இந்திய இதிகாசமான இராமாயணத்துக்கும் தொடர்பு உள்ளது. இராமாயணத்தில், "இராமன், இலக்குவன் ஆகியோருக்கும் இந்திரஜித்துக்கும் போர் நடைபெற்றபோது இந்திரஜித் செலுத்திய பிரம்மாஸ்திரத்திரம் தாக்கியதன் விளைவால் இராமன், இலக்குவன் மற்றும் படையினர் மயங்கி விழுந்து போயினர்; அவர்களைக் குணமாக்க சாம்பவானின் ஆலோசனையின் பேரில் இமயமலையில் உள்ள சஞ்சீவி மலையில் இருந்து மூலிகைகளைக் கொண்டுவர அனுமன் சென்றான்; ஆனால் அங்கு மூலிகைளை அடையாளம் காண இயலாமல், முழு மலையையும் கொண்டு வர அதனால் படையினர் குணமடைந்தனர்; அனுமான் போரின் இறுதிக்கட்டத்தில் மீண்டும் ஒருமுறை இதேபோல மலையைக் கொண்டு வந்தான்," என்று பலவாறாகக் கூறப் பட்டுள்ளது.

இடம்[தொகு]

இந்த சஞ்சீவி மலை உண்மையிலேயே தற்காலத் தமிழ்நாட்டின் இராஜபாளையம் நகரத்துக்கு அருகில் உள்ளதாகக் கருதப்படுகிறது. இந்த மலை அனுமனால் தூக்கி வரப்பட்டபோது அதில் இருந்து விழுந்த துண்டுகள்தாம் சிறுமலை ,சதுரகிரி மற்றும் உத்தமபாளையம் அருகே உ.அம்மாபட்டியின் மேற்க்கு புறம் உள்ள சாலமலை சஞ்சீவி மலைகளாக உருவானதாக ஒரு நம்பிக்கை உள்ளது.[1][2]

மேற்கோள்கள்[தொகு]

  1. கோ பிரின்ஸ். "ராமாயணத்தில் சொல்லப்பட்ட சஞ்சீவி மூலிகையை கண்டுபிடிக்க ரூ.25 கோடி நிதி!". கட்டுரை. நியூஸ் 7. 2016-09-06 அன்று மூலம் பரணிடப்பட்டது. 3 செப்டம்பர் 2016 அன்று பார்க்கப்பட்டது.
  2. "சதுரகிரி மலையில் இருந்த அதிசய மூலிகைகள்". தினமணி வலைப்பூ. 13 திசம்பர் 2013. 2013-12-15 அன்று மூலம் பரணிடப்பட்டது. 3 செப்டம்பர் 2016 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சஞ்சீவி&oldid=3577113" இருந்து மீள்விக்கப்பட்டது