இராமதேவ சித்தர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இராமதேவர் புலத்தியரிடம் சீடராக இருந்தவர் என்றும், விஷ்ணு குலத்தில் தோன்றிய பிராமணர் என்றும் பின் வீரம் மிகுந்த தேவர் குலத் தோன்றலாகவும் விளங்கிவர் என்றும், கருவூர்த் தேவர் கூறியுள்ளார். இக்கருத்தை அவர் தம் பாடலில்,

மெய்ராம தேவர் ஆதி வேதப் பிராமணராம் பின்பு
உய்யவே மறவர்தேவர் உயர்குலச் சாதியப்பா

எனவுரைத்துள்ளார். இவர் மெக்காவுக்குச் சென்று இசுலாமுக்கு மதமாறி யாக்கோபு என்ற பெயருடன் தமிழகம் வந்தததாக சொல்லப்படுகிறது.[1]

அல்லாவைப் பற்றிய சித்தர் பாடல்[தொகு]

மூலம்: சித்தர்கள் இராச்சியம் யாகோபு சித்தரின் யாகோபு சுண்ணகாண்டம் என்னும் நூலின் கடவுள் வணக்கப் பாடல்.

"ஆனந்தமாய் நிறைந்த அல்லா பாதம்
அடுத்துநின்ற அடுத்துநின்ற சித்தநபிமார்கள்
பாதம்போற்றி தானந்த மகமதுவை தொழுது
போற்றி தாட்டிகமாய் சுண்ணமென்ற காண்டம்
தன்னை வானந்த மாகவே அறுநூறாக
வகயாகப் பாடினேன் வண்மையாகக்
கோனந்த மெய்ப்பொருளா மின்னூல்தன்னை
குறிப்பாகப் பாடினேன் கூர்ந்து பாரே" - யாக்கோபு என்ற இராமதேவர்

இவர் நாகப்பட்டினத்தைத் தாம் வாழ்விடமாகக் கொண்ட சித்தர்.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இராமதேவ_சித்தர்&oldid=2901146" இருந்து மீள்விக்கப்பட்டது