தோடகர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

தோடகர் அல்லது தோடகாச்சாரியார் (Totakacharya) (IAST Toṭakācārya) கி. பி. எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த அத்வைத வேதாந்தி. இவரது இயற்பெயர் ஆனந்தகிரி. ஆதிசங்கரரைத் தனது குருவாகக் கொண்டவர். இந்தியாவின் வடக்கில் இமயமலையில் பத்ரிநாத் அருகே அதர்வண வேதத்திற்குரிய ஜோஷி மடத்தை நிறுவி அதன் முதல் மடாதியாக விளங்கியவர். இவர் தனது குரு, ஆதிசங்கரரின் பெருமைகள் குறித்து எட்டு சுலோகங்களில் பாடிய தோடகாஷ்டகம் எனும் நூல் சிறப்பு பெற்றது.[1][2]

ஆதிசங்கரருடன் சந்திப்பு[தொகு]

சங்கர விஜயம் எனும் நூலின்படி, ஒரு முறை ஆதிசங்கரர் சிருங்கேரியில் தங்கியிருந்த போது கிரி என்ற ஆனந்தகிரி என்ற சிறுவனை சந்தித்தார். அச்சிறுவனின் பலன் நோக்காத கடும் உழைப்பை அறிந்து, ஆனந்தகிரியைத் தனது சீடனாக ஏற்றார். ஆனந்தகிரி தனது குரு ஆதிசங்கரர் மீது அதிக பக்தி கொண்ட சீடர். கால நேரம் பாராது சங்கரருக்குத் தேவையான பணிவிடைகள் செய்ததால் சங்கரரின் பிரியமான சீடரானார். ஒரு முறை சங்கரர் தனது சீடர்களுக்கு அத்வைத வேதாந்த பாடங்களை உபதேசிக்க காலதாமதம் ஆவதைக் கண்ட மற்ற சீடர்கள், காலதாமதத்திற்குக் காரணம் கேட்க, துணிகளைத் துவைத்துக் கொண்டிருக்கும் ஆனந்தகிரி வந்த பிறகு வகுப்பைத் துவக்கலாம் என்றார்.

ஆனந்தகிரி பின்னர் தோடக எனும் சமஸ்கிருத செய்யுள் அமைப்பில் ஆதிசங்கரரின் வேதாந்த அறிவுத் திறன் குறித்து எட்டு பாடல்கள் பாடினார். அது முதல் ஆனந்தகிரி, தோடகாச்சாரி என்று அழைக்கப்பட்டார்.

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. http://aanmeegamsolkirathu.blogspot.in/2011/06/blog-post_12.html
  2. https://hindutemplefacts.wordpress.com/2012/03/05/%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-thodakaashtagam/
  • சிருங்கேரி மடாதிபதி வித்யாரண்யர் எழுதிய, சங்கர திக்விஜயம், வெளியீடு இராமகிருஷ்ண மடம்,Sankara-Digvijaya, translated by Swami Tapasyananda, Sri Ramakrishna Math, 2002, ISBN 81-7120-434-1. Purchase online www.sriramakrishnamath.org"https://ta.wikipedia.org/w/index.php?title=தோடகர்&oldid=2989077" இருந்து மீள்விக்கப்பட்டது