உள்ளடக்கத்துக்குச் செல்

ஆறு அய்யப்பன் கோயில்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்துக் கடவுள் அய்யப்பனுக்கு கேரளத்தில் ஆறு கோவில்கள் உள்ளன.[1]

ஆரியங்காவு

[தொகு]

தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் இருந்து சுமார் 20 கிலோமீட்டர் தொலைவில், கேரள மாநிலத்தில் இந்த ஊர் அமைந்துள்ளது. இங்குள்ள கோவிலில் சௌராஷ்ட்ர குலதேவி புஷ்கலையுடன் அரசராக காட்சித் தருகிறார் அய்யப்பன்.

அச்சன்கோவில்

[தொகு]

செங்கோட்டையில் இருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் கேரள மாநிலத்தில் அடர்ந்த வனப்பகுதியில் இது அமைந்துள்ளது. பரசுராமரால் தோற்றுவிக்கப்பட்ட இந்த கோவிலின் விக்ரகம் மட்டுமே பழமை மாறாதது என்கிறார்கள். இங்கு வனராஜனாக, அமர்ந்த நிலையில் கையில் அமுதமும், கருப்பனின் காந்தமலை வாளும் ஏந்தி காட்சித் தருகிறார் அய்யப்பன். இவருக்கு இருபுறமும் பூர்ணா, புஷ்கலை தேவியர் மலர் தூவுவதுபோன்று காட்சி தருகின்றனர். இங்குள்ள அய்யப்பன் 'கல்யாண சாஸ்தா' என்று அழைக்கிறார்கள். இதனால், திருமணத்தடை உள்ளவர்கள் இங்கு அதிக அளவில் வந்து செல்வதை காண முடிகிறது.

குளத்துப்புழா

[தொகு]

செங்கோட்டையில் இருந்து 50 கிலோமீட்டர் தொலைவில் கேரளாவில் அமைந்துள்ளது இது. இங்கு அய்யப்பன் குழந்தையாக இருப்பதால் 'பால சாஸ்தா' என்று அழைக்கப்படுகிறார். இதனை உறுதிப்படுத்தும் வகையில், இக்கோவில் வாசலும் சிறு குழந்தைகள் நுழையும் அளவுக்கே கட்டப்பட்டு உள்ளது.

எருமேலி

[தொகு]

இங்கு அய்யப்பன், வேட்டை நிமித்தமாக கைகளில் வில், அம்பு ஆகியவற்றை ஏந்திய திருக்கோலத்தில் காட்சித் தருகிறார். எருமேலி கேரளமாநிலத்தில் உள்ளது.

பந்தளம்

[தொகு]

இங்கு தான் பந்தள மன்னன் ராஜசேகரப் பாண்டியனால் அய்யப்பன் சீரோடும், சிறப்போடும் வளர்க்கப்பட்டார். அந்த நாட்டு மன்னன் கட்டிய கோவில் இங்கு உள்ளது. இங்கு தான் சுவாமி அய்யப்பனுக்கு உரிய திரு ஆபரணங்கள் உள்ளன.

சபரிமலை

[தொகு]

கேரளாவில் உள்ள இங்கு தர்மசாஸ்தாவான அய்யப்பன் தம்மை நாடி வரும் பக்தர்களுக்கு யோக சின் முத்திரை தாங்கி, எல்லோருக்கும் கேட்டதை வாரி வழங்கும் வள்ளலாக காட்சித் தருகிறார்.

- சபரிமலைக்கு புனித யாத்திரை மேற்கொள்ளும் பக்தர்கள், அய்யப்பன் எழுந்தருளி அருள்பாலிக்கும் இந்த 6 கோவில்களுக்கும் சென்று வழிபட்டால் சிறப்பு பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆறு_அய்யப்பன்_கோயில்கள்&oldid=3826517" இலிருந்து மீள்விக்கப்பட்டது