ஹரிப்பாடு
ஹரிப்பாடு
நகரம்/நகராட்சி | |
---|---|
ஆலப்புழா | |
அடைபெயர்(கள்): ஷேத்ரகரி (கோவில் நகரம்) | |
ஆள்கூறுகள்: 9°18′0″N 76°28′0″E / 9.30000°N 76.46667°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | கேரளம் |
மாவட்டம் | ஆலப்புழா |
நிறுவப்பட்டது | 1921 |
அரசு | |
• வகை | நகராட்சி |
• நிர்வாகம் | ஹரிப்பாடு நகராட்சி |
• தலைவர் | கே. எம். ராஜு |
• சட்டமன்ற உறுப்பினர் | இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் ரமேஷ் சென்னிதலா |
பரப்பளவு | |
• மொத்தம் | 19.24 km2 (7.43 sq mi) |
மக்கள்தொகை | |
• மொத்தம் | 30,977 |
• அடர்த்தி | 1,600/km2 (4,200/sq mi) |
மொழிகள் | |
• அலுவல் | மலையாளம், ஆங்கிலம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (IST) |
அஞ்சல் குறியீட்டு எண் | 690514 |
தொலைபேசி இணைப்பு எண் | 0479 |
வாகனப் பதிவு | கேஎல்-29 |
நருகிலுள்ள நகரம் | ஆலப்புழா |
மக்களவை (இந்தியா) மக்களவை]] | ஆலப்புழா |
இணையதளம் | https://haripadmunicipality.lsgkerala.gov.in/en/ |
ஹரிப்பாடு (Haripad) என்பது ஆலப்புழா மாவட்டத்திலுள்ள ஒனட்டுகரை பகுதியில் உள்ள ஒரு நகராட்சி ஆகும் ஹரிப்பாட்டின் கிழக்கே பள்ளிப்பாடு, வீயபுரம் மற்றும் கார்த்திகப்பள்ளி மேற்கிலும், தெற்கில் சேப்பாடு[1]ஆகியவை எல்லையாக உள்ளன. இது கலை, கலைஞர்கள், பாம்பு படகுகளின் பூமி, இசை, நடனம் மற்றும் நாடகத்தின் பூமி என்று அழைக்கப்படுகிறது. இது சேக்த்ரநகரி (கோவில்களின் நகரம்) என்றும் பிரபலமாக அறியப்படுகிறது. ஹரிப்பாடு சுப்பிரமணிய சுவாமி கோயில் இவற்றில் முதன்மையானது.
வெளிநாட்டினரையும் கவரும் ஹரிப்பாட்டின் முக்கிய அம்சம் "பாய்ப்பாட் ஜலோத்சவம்". தற்போது வழிபடும் சுப்பிரமணியர் சிலை காந்தல்லூரில் இருந்து பாம்பு படகுகள் மற்றும் வல்ல சடையுடன் கொண்டு வரப்பட்டதாக நம்பப்படுகிறது.[2] ராஜீவ் காந்தி ஒருங்கிணைந்த சுழற்சி மின் நிலையம் (காயம்குளம், தேசிய அனல் மின் நிறுவனம்) ஹரிப்பாடு சட்டமன்றத் தொகுதியில் அமைந்துள்ளது.
ஹரிப்பாடு அதன் பெயரை அரிபாட் (அரி என்றால் அரிசி) அல்லது "ஹரிகீதபுரம்" என்பதிலிருந்து பெறப்பட்டது.[3] 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, ஊரின் மக்கள் தொகை 16,445 ஆகும்.[4]
குறிப்பிடத்தக்கவர்கள்
[தொகு]- சுவாமி நிர்மலானந்தா (1863–1938), இராமகிருஷ்ணரின் நேரடிச் சீடர் (1836–1886)[5]
- கேரள வர்மா வல்லிய கோயி தம்புரான் (1845–1914) மயூரசந்தேசம் எனும் நூலின் ஆசிரியர். தனது அன்பு மனைவிக்கு மயில்கள் மூலம் அனுப்பும் காதல் கடிதங்கள் அடங்கிய சந்தேஷ் காவியத்தை எழுதும் போது ஹரிப்பாடில் தங்கியிருந்தார்.[6]
- டி. கே. மாதவன் (1885–1930), சமூக சீர்திருத்தவாதி
- வெ. தட்சிணாமூர்த்தி (1919–2013), கருநாடக இசைக் கலைஞர்
- பத்மராஜன் (1945–1991), மலையாள திரைப்பட இயக்குனர் மற்றும் எழுத்தாளர்
- ரமேஷ் சென்னிதலா, இந்திய தேசிய காங்கிரசுவைச் சேர்ந்த கேரள அரசியல்வாதி
- ம. கோ. இராதாகிருட்டிணன் (1940–2010), கருநாடக இசைக் கலைஞர்
- கே . ஓமனக்குட்டி அம்மா (1943–), இசைக் கலைஞர்
- எம். ஜி. ஸ்ரீகுமார் (1957–), இசையமைப்பாளர், பாடகர், இசை இயக்குநர்
- ராஜேஸ் பிள்ளை (1974–2016), திரைப்பட இயக்குநர்
- ஏ. பி. உதயபானு (1915–1999), காங்கிரசு தலைவர், எழுத்தாளர்
- சிறீகுமாரன் தம்பி (1940–), எழுத்தாளர், பாடலாசிரியர்
- கே. மது (1953–), இயக்குநர்
- எரிக்காவு என். சுனில் (1977-), தேசிய விருது பெற்ற க் கலைஞர் எழுத்தாளர்
- மல்லிகா சுகுமாரன் (1954–), நடிகை
- மது முட்டம் (1951–), திரைக்கதை எழுத்தாளர்
- அசோகன் (1960–), நடிகர்
- நவ்யா நாயர் (1985-) திரை நடிகை
- சிபிசி வாரியர் (1932–2013), முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், இந்தியப் பொதுவுடமைக் கட்சி
- சந்தோஷ் சிவன் (1964–), ஒளிப்பதிவாளர்
- லோபமுத்ரா ஆர்., Pகவிஞர், மொழிபெயர்ப்பாளர், கேந்திர சாகித்ய அகாதமி யுவ புரஸ்கார் மற்றும் ஓ.வி.விஜயன் சாகித்ய விருது, துஞ்சன் சமாரக விருது வென்றவர்
- விஷ்ணு எச். வாரியர் (1987-), எழுத்தாளர்[7] and FIDE rated Chess Player,
- அருண் குமார் எஸ், கவிஞர்
சான்றுகள்
[தொகு]- ↑ "Location Map of Haripad". Haripad.in.
- ↑ "Haripad Overview". Blessings on the Net.
- ↑ "About Haripad". Haripad.in.
- ↑ "Veethi".
- ↑ "Swami Nirmalananda: His life and teachings" (PDF). vivekananda.net.
- ↑ "History of Haripad". Haripad.in.
- ↑ LexisNexis
வெளிஇணைப்புகள்
[தொகு]- About Karichalchundan
- snakeboat races – Snake boat races in Haripad
- Sociocultural History – History of Haripad
- Haripad – Haripad