வெ. தட்சிணாமூர்த்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சங்கீத சரசுவதி
வெ. தட்சிணாமூர்த்தி
V. Dakshinamoorthy.jpg
பிறப்புவெங்கடேசுவரன் தட்சிணாமூர்த்தி
திசம்பர் 9, 1919(1919-12-09) [1]
ஆலப்புழா, கேரளம்
இறப்புஆகத்து 2, 2013(2013-08-02) (அகவை 93)
மைலாப்பூர், சென்னை
தமிழ்நாடு
தேசியம் இந்தியா
குடியுரிமை இந்தியா
பணிஇசையமைப்பாளர்
செயற்பாட்டுக்
காலம்
1950 - 2013
அறியப்படுவதுஇசையமைப்பாளர்
சமயம்இந்து
பெற்றோர்பார்வதி அம்மாள்,
வெங்கடேசுவர ஐயர்
விருதுகள்சிறந்த இசையமைப்பாளருக்கான கேரளா மாநில திரைப்பட விருது;
சுவர்ணமால்யா யேசுதாசு விருது;
கேரளா மாநிலத்தின் தானியல் வாழ்நாள் சாதனை விருது;
மகாத்மாகாந்தி பல்கலைக்கழகத்தின் கௌரவ முனைவர் பட்டம்

வெங்கடேசுவரன் தட்சிணாமூர்த்தி (மலையாளம்: വി ദക്ഷിണാമൂര്‍ത്തി; 9 டிசம்பர் 1919 - 2 ஆகஸ்ட் 2013) ஒரு கருநாடக இசைக்கலைஞரும் இசையமைப்பாளரும் ஆவார். இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் நூற்றுக்கணக்கான படங்களுக்கு இசை அமைத்துள்ளார்.[2][3]

திரைப்பட இசையமைப்பாளர்[தொகு]

1948ல் வெளிவந்த 'நல்லதங்காள்' திரைப்படத்தின் மூலம் திரைப்பட உலகில் இசையமைப்பாளராக அறிமுகமானார். இந்த திரைப்படம் தமிழிலும் அப்போது வெளியானது. "ஒரு ஊதாப்பூ கண் சிமிட்டுகிறது' என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை இசை உலகில் மிகவும் பிரபலமான தட்சிணாமூர்த்தி ஏராளமான தமிழ் படங்களுக்கும் இசையமைத்துள்ளார்.[3]

நல்லதங்காள், நந்தா என் நிலா, ஒரு கோவில் இரு தீபங்கள், ஜீவநாடி, ஜெகத்குரு ஆதி சங்கரர், அருமை மகள் அபிராமி, உலகம் சிரிக்கிறது, எழுதாத கதை போன்ற தமிழ்படங்களுக்கு இசை அமைத்தவர் தட்சிணாமூர்த்தி. இவர் இளையராஜா, பி.சுசீலா, யேசுதாஸ் ஆகியோரின் குரு ஆவார். இவர் மலையாளப்பட உலகில் 4 தலைமுறை படங்களுக்கு இசை அமைத்து வந்தார்.[4]

நான்கு தலைமுறை பாடகர்கள்[தொகு]

மலையாளத் திரைப்பட பாடகர் அகஸ்டின் ஜோசப், அவரது மகன் கே. ஜே. யேசுதாஸ், யேசுதாஸ் மகன் விஜய் யேசுதாஸ், மற்றும் விஜய் யேசுதாஸ் மகள் அமேயா ஆகியோர் தட்சிணாமூர்த்தியின் கீழ் பாடியுள்ளனர் [5]

இறப்பு[தொகு]

விருதுகள்[தொகு]

  • சிறந்த இசையமைப்பாளருக்கான கேரளா மாநில திரைப்பட விருது;
  • சுவர்ணமால்யா யேசுதாசு விருது;
  • கேரளா மாநிலத்தின் தானியல் வாழ்நாள் சாதனை விருது;
  • மகாத்மாகாந்தி பல்கலைக்கழகத்தின் கௌரவ முனைவர் பட்டம்

அடிக்குறிப்பு[தொகு]

  1. "സംഗീത രാജാങ്കണത്തിൽ - சுய சரிதம் -தட்சிணாமூர்த்தி (மொழி - மலையாளம்". மாத்ருபூமி புத்தகம். ;. http://www.mathrubhumi.com/books/article/memories/2552/#storycontent. பார்த்த நாள்: 2013 ஆகஸ்ட் 5. 
  2. "இளையராஜாவின் குரு வி தட்சிணாமூர்த்தி மரணம்". ஒன்இந்தியா - தமிழ். ;. http://tamil.oneindia.in/movies/news/2013/08/music-composer-dakshinamoorthy-passes-away-at-94-180443.html. பார்த்த நாள்: 2013 ஆகஸ்ட் 6. 
  3. 3.0 3.1 "பழம்பெரும் இசையமைப்பாளர் வி.தட்சிணாமூர்த்தி காலமானார்". தினமணி செய்தி தாள். 2013 ஆகஸ்ட் 3;. http://dinamani.com/cinema/2013/08/03/%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5/article1715678.ece. பார்த்த நாள்: 2013 ஆகஸ்ட் 6. 
  4. நக்கீரன் - வெள்ளிக்கிழமை, 2, ஆகஸ்ட் 2013
  5. "നാലു തലമുറയെ പാടിച്ച നാദർഷി - (மொழி - மலையாளம்)". மாத்ருபூமி செய்தி தாள். 2013 ஆகஸ்ட் 3;. http://www.mathrubhumi.com/specials/dakshinamoorthy/381247/index.html. பார்த்த நாள்: 2013 ஆகஸ்ட் 6. 

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வெ._தட்சிணாமூர்த்தி&oldid=2922808" இருந்து மீள்விக்கப்பட்டது