கே . ஓமனக்குட்டி அம்மா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கே.ஓமனக்குட்டி
K. Omanakutty
பிறப்பிடம்கேரளா, இந்தியா
இசை வடிவங்கள்கர்நாடக இசைக்கலைஞர், இந்திய பாரம்பரிய இசை
தொழில்(கள்)ஆசிரியர், பாடகர்

கே . ஓமனக்குட்டி அம்மா ( K. Omanakutty Amma) என்பவர் ஒரு, கல்வியாளர், இசை ஆசிரியர் மற்றும் கர்நாடக இசைக் கலைஞர்[1] ஆவார். இசைத்துறையில் ஆராய்ச்சி மற்றும் வெளியீடுகளால் இவர் நன்கு அறியப்படுகிறார். கதகளி இசையில் மேற்கொண்ட ஆராய்ச்சிகளால் இவருக்கு இத்துறையில் முனைவர் பட்டம் கிடைத்தது. தற்பொழுது இவர், கேரளப் பல்கலைக்கழகத்தில் இசைத்துறையின் துறைத் தலைவராகவும் பேராசியராகவும் பணிபுரிந்து வருகிறார். இதைத் தவிர இளம் இசைக் கலைஞர்களை ஊக்குவிக்கும் தனியார் அமைப்பான சங்கீத பாரதி அமைப்பின் தலைமைப் பொறுப்பாளாராகவும் பணிபுரிகிறார்.

இவருடைய மூத்த சகோதரர் எம்.சி.இராதாகிருட்டிணன் மலையாள திரைத்துறையில் ஒரு இசையமைப்பாளராகவும், இளைய சகோதரர் சிறீகுமார் ஒரு பின்னணிப் பாடகராகவும் இருக்கின்றனர். இவர்களைத் தவிர பி.அருந்ததி, கே.எசு.சித்ரா மற்றும் கே.எசு. ரேசுமி முதலியவர்களும் இவருடைய நெருங்கிய உறவினர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "A life in music". The HIndu. May 3, 2012. http://www.thehindu.com/features/friday-review/music/a-life-in-music/article3380329.ece. பார்த்த நாள்: 22 October 2013.