தளிப்பறம்பு ராஜராஜேஸ்வரர் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஸ்ரீ ராஜராஜேஸ்வரம்
தளிப்பரம்பு ராஜராஜேஸ்வரம் கோயில்
ராஜராஜேஸ்வரம் கோயில்
பெயர்
தேவநாகரி:राजराजेश्वरं क्षेत्र
தமிழ்:ராஜராஜேஸ்வரம் கோயில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:கேரளா
மாவட்டம்:கண்ணூர்
கோயில் தகவல்கள்
மூலவர்:சிவன்
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு:சோழர் கட்டிடக் கலை, பாரம்பரிய கேரள பாணி
கல்வெட்டுகள்:சோழர்
வரலாறு
கட்டப்பட்ட நாள்:தற்காலக் கோயில் ~1000 C.E
அமைத்தவர்:பரசுராமர், முதலாம் இராஜராஜ சோழன்
கோயில் அறக்கட்டளை:மலபார் தேவஸ்வம் (http://www.malabardevaswom.kerala.gov.in)

ராஜராஜேஸ்வர கோயில் (Rajarajeshwara Temple) இந்தியாவின் கேரளா மாநிலத்தில் கண்ணூர் மாவட்டத்தில் தளிபரம்பு எனும் இடத்தில் அமைந்துள்ளது. இக்கோவில் கேரளாவின் பிரசித்தி பெற்ற 108 சிவாலயங்களில் ஒன்றாகும். தென் இந்தியாவில் பிற கோயில்களில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு பக்தர்கள் இக்கோவிலில் வந்து பிரசன்னம் பார்ப்பது வழக்கம். பிரசன்னம், கோயிலின் வெளியே அமைந்துள்ள ஒரு பீடத்தில் வைத்து பார்க்கப்படும். இந்துக்கள் அல்லாதவர்கள் இக்கோயிலுக்குள் நுழையத் தடை விதிக்கப்பட்டுள்ளது.[1]

வரலாறு[தொகு]

ராஜராஜேஸ்வர கோயில்

இக்கோயிலானது 11 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் கட்டப்பட்டது. இக்கோயிலில் உள்ள சிவலிங்கம் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் பழமையானது.[2] ராமர் சீதையைக் காப்பாற்ற இலங்கைக்குச் சென்று போரில் வென்ற பின் இங்கே வந்து சிவனை வணங்கியதாகச் சொல்லப்படுகிறது. அதன் காரணமாய் இக்கோயிலின் நகஸ்கார மண்டமதினுள் இன்றும் யாரையும் அனுமதிப்பதில்லை. இக்கோயிலில் சிவனும் விஷ்ணுவும் சேர்ந்து ராஜராஜேஸ்வரராக இருக்கின்றனர். இக்கோயிலில் இருந்த ஏழு அடுக்கு கோபுரமானது திப்பு சுல்தானால் 18 ஆம் நூற்றாண்டில் இடிக்கப்பட்டது.[3] இடிக்கப்பட்ட கோபுரத்தின் சிதறல்கள் கிழக்கு வாசலில் கிடக்கின்றன. இக்கோபுரத்தை முன்னின்று இடித்தவரை பாம்பு கடித்து விட்டதால் அதன் பின் தொடர்ந்து இடிக்கவில்லை என்பது செய்தி. அதன் பின் இங்கே இருந்த நம்பூதிரிகள் திருவாங்கூர் பகுதிக்கு குடிபெயர்ந்துவிட்டனர்.

வழிபாடு[தொகு]

சாக்கைக் கூத்து

இக்கோயிலில் மற்ற சிவன் கோயிலைப் போல் வில்வ இலை வழிபாட்டிற்குப் பயன்படுத்தப்படுவதில்லை. அதற்குப் பதிலாக துளசி இலை பயன்படுத்தப்படுகிறது. காலை பூஜையும், மதிய பூஜையும் முடிந்த பின் கோயிலானது நண்பகல் 12 மணிக்கு அடைக்கப்படும். பின்னர் மாலை 5 மணிக்கு மீண்டும் கோயில் திறக்கப்பட்டு 6:30 மணிக்கு தீபாராதனை நடைபெறும். இரவு 8 மணிக்கு கோவிலானது அடைக்கப்படும். சிவராத்திரி விழா இங்கு சிறப்பாகக் கொண்டாடப்படும். இக்கோவிலில் கூடியாட்டம் மற்றும் சாக்கைக் கூத்து ஆகியவை நடக்கும்.

சச்சரவு[தொகு]

இக்கோயிலில் இந்துக்கள் அல்லாதோர் நுழைவதற்கான தடை இருந்த போதும், 2006 ஆம் ஆண்டு ஜூலை மாதம் கிறித்துவரான திரைப்பட நடிகை மீரா ஜாஸ்மின் இக்கோயிலினுள் நுழைந்தது பெரிய சர்ச்சையை உருவாக்கியது. பின்னர் அதற்கான பரிகார பூஜைக்கான தொகையை மீரா ஜாஸ்மின் கோயில் நிர்வாகத்திடம் ஒப்படைத்து தனது செயலுக்கு மன்னிப்பும் கோரினார்.[1]

மேலும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]