முத்தப்பன் கோயில்
பரசின்னி கடவு முத்தப்பன் கோயில் | |
---|---|
பரசின்னி கடவு கோயில் | |
அமைவிடம் | |
நாடு: | இந்தியா |
மாநிலம்: | கேரளம் |
மாவட்டம்: | கண்ணூர் மாவட்டம் |
ஆள்கூறுகள்: | 11°58′56.87″N 75°24′7.22″E / 11.9824639°N 75.4020056°E |
கோயில் தகவல்கள் | |
கட்டிடக்கலையும் பண்பாடும் | |
கட்டடக்கலை வடிவமைப்பு: | கேரள காவு கட்டடக்கலை |
வரலாறு | |
கோயில் அறக்கட்டளை: | மலபார் தேவணம்போர்டு[1] |
பரசின்னி கடவு முத்தப்பன் கோயில் (Parassinikadavu Muthappan temple) என்பது தென்னிந்தியாவின், கேரளத்தின், கண்ணூர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கோயில் ஆகும். இது அந்தூர் நகராட்சியின், பரசின்னிகடவு பகுதியில், வளபட்டணம் ஆற்றங்ரையில் அமைந்துள்ளது. இது தளிப்பறம்பாவிலிருந்து 16 கி.மீ. தொலைவிலும் கண்ணூரில் இருந்து 16 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது.[2] இக்கோயிலின் முதன்மை தெய்வம் முத்தப்பன் ஆவார். கோயிலில் தினமும் இருவர் திருவப்பன், வெள்ளாட்டம் என்னும் இரண்டு வேடங்களை அணிந்து, மாந்திரீக நடனமான தெயத்தை ஆடுகின்றனர். உள்ளூர் பாரம்பரியத்தின் படி, சிவபெருமானே இங்கு முத்தப்பனாக உள்ளார்.[3]
வெள்ளாட்டம் மற்றும் திருவப்பன் ஆகியவை வட மலபாரின் கவு எனபடும் கோயில்களில் ஆடப்படும் 'தெயம் கெட்டி-ஆடல்' என்ற ஆட்டத்தின் இரண்டு வகைகளின் பொதுவான பெயர்களாகும்.
முத்தப்பன் கதை
[தொகு]பொன்னு முத்தப்பன் குறித்த கதையின் ஒரு வடிவம் இங்கே விவரிக்கப்பட்டுள்ளது: எருவெஸ்ஸி கிராமத்தைச் சேர்ந்த மன்னனான அஞ்சரமண (அய்யங்கரா வழுன்னோர்) அவரது மனைவி பாடிகுட்டி அம்மா இணையருக்கு குழந்தைகள் இல்லை. சிவனின் தீவிர பக்தையான பாடிகுட்டி, ஆற்றில் குளிக்கும்போது மிதந்துவரும் ஒரு பூக் கூடையில் ஒரு குழந்தையை கண்டெடுக்கிறாள். பிள்ளையில்லா தங்களுக்கு சிவபெருமானின் அளித்த குழந்தையாக அதைக் கருதி கணவனும் மனைவியும் குழந்தையை அன்பாக வளர்த்தனர். குழந்தைப் பருவத்திலேயே பல குறும்புகளைச் செய்யத் தொடங்கியது. வளர்ந்த பிறகு உயர்வகுப்பினர் கடைப்பிடித்து வந்த வாழ்க்கை நெறிகள் எதையும் பொருட்படுத்தாமல், காட்டில் வேட்டையாடுதல் போன்றவற்றில் ஈடுபட்டுள்ளான். இது இவரது குடும்பத்தினருக்கு வேதனையளித்தது. மேலும் ஒரு நாடுவாழி குடும்பத்தினர் உண்ணக்கூடாத உணவான இறைச்சியை சாப்பிடத் தொடங்கினான். குடும்பத்தினரின் கட்டுப்பாடுகளை தாங்க முடியாமல் இவன் வீட்டை விட்டு வெளியேற முடிவு செய்தான். இதை இவனது தாயார் தடுக்க முயன்றபோது, கோபமுற்ற இவன் தான் சிவனின் மறு உருவம் என்று பேரொளிமிக்க தனது உண்மையான உருவத்தைக் காட்டினான். இதையடுத்து அவள் தன் மகனை வணங்கி வழிவிட்டாள். இதன்பிறகு இவன் தன் குடும்பத்தை விட்டு, மலபாரில் உள்ள குன்னதூர்பாடி, புரளிமாலா, படவில், தில்லங்கேரி, கண்ணபுரம், பராசினிகடாவு மற்றும் வள்ளுவங்கடவு போன்ற பல்வேறு கிராமங்களை கடந்து சென்றான்.[4][5]
இவன் குன்னதூர்பாடி என்ற கிராமத்தை அடைந்தபோது, அங்கு சாந்தன் என்னும் பழங்குடியினன் பனை மரத்திலிருந்து கள் இறக்குவதைக் கண்டான். அவன் சென்றபிறகு இவன் மரத்தில் ஏறி கள்ளை எடுத்து குடித்தான். தினமும் இது தொடர்ந்தது.
மரத்தில் கள்ளின் அளவு குறைவதைக் கண்ட சாந்தன் ஒளிந்திருந்து கண்காணித்து வந்தான். அப்போது மரத்தில் இவன் ஏறி கள் குடிப்பதைக் கண்டு ஆத்திரபட்டு தன்னிடம் உள்ள அம்பை எய்தான். அம்பை எய்த அடுத்தகணம் சாந்தன் கல்லாக மாறிவிட்டான்.[5] மறுநாள் காலையில் அங்கு வந்த சந்தனின் மனைவி, தன் கணவனின் நிலையைக் கண்டு வருந்தி, சுற்றிலும் பார்த்தாள். அவளுக்கு, அங்கிருந்த பனைமரம் ஒன்றில் வயதான ஒருவர் அமர்ந்திருப்பது போன்று அவளுக்கு தெரிந்தது. உடனே அவள் அவரைப் பார்த்து, ‘முத்தப்பா, கல்லாய்க் கிடக்கும் என் கணவனைக் காப்பாற்ற இறங்கி வா’ என்று வேண்டினார். ( வட கேரளத்தின், வட்டார வழக்கில் ‘முத்தப்பன்’ என்றால் ‘தாத்தா’ என்று பொருள்) பனை மரத்திலிருந்து இவனும் கீழிறங்கி வந்தான். இவர் சாந்தனை, கல் உருவத்திலிருந்து விடுவித்துச் சுய உருவம் கொடுத்தான். இதனால் மகிழ்ச்சியடைந்த அந்தத் தம்பதியர், இவனை முத்தப்பன் என்றே அழைத்ததுடன், இவனுக்கு கோவிலை கட்டி வழிபடத் தொடங்கினர். குன்னத்தூர்படியில் அமைந்த இந்தக் கோயிலே முத்தப்பனின் முதல் கோயில் எனப்படுகிறது. சாந்தனுவும், அவனது மனைவியும் முத்தப்பனுக்கு, அவன் விரும்பிய கள், மீன், கருவாடு, இறைச்சி போன்றவைகளைப் படைத்து வழிபட்டு வந்தனர். இப்போதும் இதே வழிபாடு தொடர்கிறது.[6]
இந்நிலையில் குன்னத்தூர்படியிலிருந்து வேறிடத்தில் கோவில் கொள்ள விரும்பிய முத்தப்பன், ஒரு அம்பை எய்தினான். அது பரசினிக்கடவு என்ற தலத்தில் போய் விழுந்தது. அங்கும் முத்தப்பனுக்கு கோவில் அமைக்கப்பட்டது. இந்த ஆலயமே மிகவும் பிரசித்தி பெற்று திகழ்கிறது.
முத்தப்பனின் பயணம் முழுவதும் எப்போதும் பின்தொடர்ந்த ஒரு நாயையும் இவனது கதை விவரிக்கிறது. எனவே, முத்தப்பன் கோவிலில், நாய்கள் தெய்வீகமாகக் கருதப்படுகின்றன, கோவில் நுழைவாயிலில் இருபுறமும் நாய் சிலைகள் உள்ளன.[4]
சடங்குகள் மற்றும் திருவிழாக்கள்
[தொகு]தங்கள் வேண்டுதல் நிறைற கோவிலுக்கு வரும் பக்தர்கள் முத்தப்பன் வழிபாட்டிற்காகத் தேங்காய், வெற்றிலை, பாக்கு, பச்சைப்பயறு, மீன், கருவாடு போன்றவற்றுடன் கள்ளையும் சேர்த்துத் தருகின்றனர். இங்கு தினமும் அதிகாலையிலும் மாலையிலும் தொய்யம் ஆட்டம் நடத்தப்படுகிறது. இக்கோவிலுக்கு வரும் பக்தர்கள், தெய்யம் ஆட்டமாடும் திருவப்பனையோ, முத்தப்பனையோ கண்டு தங்களது மனக்குறைகளைக் கூறித் தங்கள் துன்பங்கள் மறைந்திட உதவும்படி வேண்டுகின்றனர். ஆண்டில் 16 விருச்சிகத்தில் (இது திசம்பர் 1 அல்லது 2 ஆம் நாளை ஒட்டி வரும்) புத்தரி திருவப்பன திருவிழா நடக்கிறது. இது ஆண்டில் கோயிலில் நடக்கும் முதல் திருவப்பனமாகும் . இது இப்பகுதியின் அறுவடை பருவத்துடன் தொடர்புடையது. ஆண்டின் கடைசி திருவப்பன விழாவானது ஒவ்வொரு ஆண்டும் 30 கண்ணியில் உள்ளது நடத்தப்படுகிறது.[7]
மேலும் காண்க
[தொகு]படவரிசை
[தொகு]-
முத்தப்பன் தொயத்தில் விஷ்ணு
-
முத்தப்பன் தொயத்தில் விஷ்ணுவும் சிவனும்
-
கண்ணைக் கவரும் இடம்
-
தொட்டில்
-
நுழைவாயில்
-
பூங்காவின் உள்ளே
-
பராசினிக்கடற் பாலம்.
-
பராசினிக்கடவ் பாலத்திலிருந்து வலப்பட்டணம் ஆற்றின் ஒரு தோற்றம்.
-
முத்தப்பன் கோயில்
குறிப்புகள்
[தொகு]- ↑ "Temples under Malabar Devaswam Board, Division : Thalassery" (PDF). Malabar Devaswam Board. பார்க்கப்பட்ட நாள் 10 August 2013.
- ↑ "Official website of Kannur". Archived from the original on 26 February 2007. பார்க்கப்பட்ட நாள் 13 May 2010.
- ↑ "Muthappan festival". 24 January 2012. பார்க்கப்பட்ட நாள் 27 August 2012.
- ↑ 4.0 4.1 "About Muthappan". Railway Muthappan. Archived from the original on 23 பிப்ரவரி 2012. பார்க்கப்பட்ட நாள் 27 August 2012.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ 5.0 5.1 "Muthappan". Global Openness Community. பார்க்கப்பட்ட நாள் 25 August 2012.
- ↑ https://www.maalaimalar.com/devotional/devotionaltopnews/2017/08/09092218/1101279/muthappan-temple-kerala.vpf[தொடர்பிழந்த இணைப்பு] நினைத்ததை நிறைவேற்றும் பரசினிக்கடவு முத்தப்பன் கோவில், தினமலர் 2017 ஆகத்து 9
- ↑ "Rituals". Temple website. Archived from the original on 10 மே 2013. பார்க்கப்பட்ட நாள் 27 August 2012.