மஞ்சம்பட்டி பள்ளத்தாக்கு

ஆள்கூறுகள்: 10°18′30″N 77°17′00″E / 10.3083°N 77.2833°E / 10.3083; 77.2833
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மஞ்சம்பட்டி பள்ளத்தாக்கு

'மையப்பகுதி'
இந்திரா காந்தி தேசியப் பூங்கா

—  தேசியப் பூங்கா  —
style="background-color: #CDE5B2; line-height: 1.2;" | IUCN வகை II (தேசிய வனம்)
மஞ்சம்பட்டி பள்ளத்தாக்கு
இருப்பிடம்: மஞ்சம்பட்டி பள்ளத்தாக்கு

, தமிழ்நாடு , இந்தியா

அமைவிடம் 10°18′30″N 77°17′00″E / 10.3083°N 77.2833°E / 10.3083; 77.2833
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
நிர்வாகம்
மக்கள் தொகை

அடர்த்தி

401 (2002)

4/km2 (10/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு 110.905 சதுர கிலோமீட்டர்கள் (42.821 sq mi)
இணையதளம் www.forests.tn.nic.in/Aboutus.htm

மஞ்சம்பட்டி பள்ளத்தாக்கு தென்னிந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ள இந்திரா காந்தி வனவிலங்கு உய்வகம் மற்றும் தேசியப் பூங்காவின் கிழக்கு மூலையில் உள்ள ஓர் பாதுகாக்கப்பட்ட 110.9 ச.கி.மீ (42.8 ச.மை) பரப்பளவு கொண்ட வனப்பகுதியாகும். இது ஓர் அழகான சோலா மற்றும் மான்ட்டேன்(montane) வகை மரங்களடர்ந்த மழைக்காடுகளாகும். இதன் உயிரியற் பல்வகைமை அண்மைக்கால சட்ட ஒப்புமைஇல்லா மரம் வெட்டுதலாலும் பயிர் வளர்ர்த்தலாலும் அச்சுறுத்தப்பட்டுள்ளது.[3] p. 1,[4]

தேசியப் பூங்கா[தொகு]

இந்திரா காந்தி தேசியப் பூங்காவின் கிழக்குப் பகுதியில் மஞ்சம்பட்டி பள்ளத்தாக்கு
மஞ்சம்பட்டி பள்ளத்தாக்கு எல்லைகள் [3] p.180

மஞ்சம்பட்டி பள்ளத்தாக்கு இந்திரா காந்தி தேசியப் பூங்காவின் கிழக்குப் பகுதியில் உள்ளது.[5] இது உலக பாதுகாக்கப்பட்ட பகுதிகள் ஆணையத்தின் கீழ் Ib பகுப்பில் வகைப்படுத்தப்பட்டுள்ளது. இவ்வகை பற்றி:

a large area of unmodified or slightly modified land, retaining its natural character and influence, without permanent or significant habitation, which is protected and managed so as to preserve its natural condition.[6]

வனத்துறை இப்பள்ளத்தாக்கை மூன்று நிர்வாகப் பிரிவுகளாகப் பிரித்துள்ளது: தளிஞ்சி பகுதி 4290 ஹெக்டேர்,மஞ்சம்பட்டி பகுதி 3741.75 ஹெக்டேர் மற்றும் கீழநாவயல் பகுதி 3058.75 ஹெக்டேர். மொத்தம் 11,090.5 ஹெக்டேர் (= 110.905 ச.கி.மீ (42.82 ச.மை))

கிழக்கில் கொடைக்கானல் மற்றும் திண்டுக்கல் வனப்பகுதிகளின் மேற்கு எல்லைகளைத் தொட்டுக்கொண்டுள்ளது.இந்தக் காடுகள் புதிய கொடைக்கானல் வனவிலங்கு உய்வகமாகவும் திட்டமிடப்படுள்ள பழனி மலை தேசியப் பூங்காவின் பகுதியாகவும் அமையும். தெற்கிலும் மேற்கிலும் கேரளாவின் இடுக்கி மாவட்ட மூணாறு வனச்சரகம் மற்றும் சின்னார் வனவிலங்கு உய்வகங்ளை தொட்டுள்ளது. வடக்கில் அமராவதி ஆற்றின் வடக்கு நீர்பிடி பகுதியை அடுத்துள்ளது172.5050 ச.கி.மீ (66.6 ச.மை).[3] p. 2.

இந்திரா காந்தி வனவிலங்கு உய்வகம் மற்றும் தேசியப் பூங்காவும் கொடைக்கானல் மற்றும் திண்டுக்கல் வனச்சரகங்களும் இணைந்து ஆனமலை பாதுகாப்பு வலயமாக [7], இந்திய வனவிலங்கு ஆய்வகம் மற்றும் ஐக்கிய அமெரிக்க வனத்துறையின் இரண்டாண்டு இணைத்திட்டத்தில் [8] அறிவிக்கப்பட்டுள்ளது. மஞ்சம்பட்டி பள்ளத்தாக்கு கோவை வனத்துறை அலுவலக மேற்பார்வையில் உள்ளது.[9] உள்ளே நுழைய உரிமம் பெற வேண்டும்.

பயணியர் தகவல்[தொகு]

மஞ்சம்பட்டி பள்ளத்தாக்கு இந்திரா காந்தி தேசியப் பூங்காவின் மையப்பகுதியாக பாதுகாக்கப்பட்ட இடம். இங்கு சுற்றுலா,மலையேற்றம்,தங்கல் மற்றும் வருகை தடை செய்யப்பட்டுள்ளது. ஆயினும் ஆர்வமுள்ள ஆய்வாளர்களுக்கு உரிமம் பெற்று உள்ளே செல்ல வியலும்.

அமராவதி முதலைப் பண்ணையில் அறிவிப்பு

அமராவதி அணைப்பகுதியில் நன்கு பராமரிக்கப்படும் பூங்காவிலிருந்து அணையின் உயரத்தை அடைந்து வடக்கிலுள்ள தரைமட்ட நிலங்களையும் தெற்கில் உள்ள ஆனமலை மலைத்தொடரையும் ,மஞ்சம்பட்டி பள்ளத்தாக்கு மற்றும் பழனி மலைத்தொடர்களையும் காணலாம். இவ்விடத்தை மாவட்ட சுற்றுலா மையமாக மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. [10] இந்தப் பூங்காவும் அடுத்துள்ள முதலை வளர்ப்பு பண்ணையும் ஒவ்வொரு நாளும் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை திறந்திருக்கும். அனுமதிச்சீட்டு : ஆட்களுக்கு 50 பைசா மற்றும் 12 வயதிற்கு குறைந்த சிறுவர்களுக்கு 25 பைசா.

கோயம்புத்தூரிலிருந்து பொள்ளாச்சி,உடுமலைப்பேட்டை வழியே அமராவதிநகருக்கு 96 கிமீ (59.65 மை).

முதலைப் பண்ணையை அடுத்துள்ள வனத்துறை ஓய்வுவிடுதியில் நால்வர் தங்க வசதி உள்ளது. முன்பதிவு செய்தல் தேவையானது. இருவருக்கான ஒரு நாள் அறை வாடகை ரூ.150/-

சரக்குப்பட்டி கண்காணிப்பு கோபுரம் மற்றும் பாலப்பட்டி சிகரம், 1,357 meters (4,452 ft)

சரக்குப்பட்டி கண்காணிப்பு கோபுரத்திலிருந்து வனவிலங்குகளை காண முடியும். இங்கிருந்து பள்ளத்தாக்கின் அருமையான காட்சியைக் காணவியலும். இது மாநில நெடுஞ்சாலை SH-17க்கு 1/2 km கிழக்கிலும், சின்னார் ஆறு சோதனைச்சாவடியிலிருந்து 1/2 km வடக்கிலும் உள்ளது. இங்கு தங்க முன்பதிவு தேவை.

தொடர்பிற்கு:

  • Forest Range Officer, Amaravathy Range, Amaravathy nagar, Ph. No. 94434 96413
  • Wildlife Warden, Indira Gandhi Wildlife Sanctuary and National Park, 365/1 Meenkarai Road, Pollachi-1, Ph. No. 04259 225356, Email: IGWLSNPPOY@rediffmail.com

நிழற்பட தொகுப்பு[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. 3.0 3.1 3.2 திரு வி., கணேசன், IFS (2006-12-20), இந்திரா காந்தி வனவிலங்கு உய்வகம் மற்றும் தேசியப் பூங்கா, பொள்ளாச்சிக்கான 2007-2008 முதல் 2011-2012 வரையிலான மேலாண்மைத் திட்டம், தர்மபுரி, தமிழ்நாடு: தமிழ்நாடு வனத்துறை, pp. 1–267{{citation}}: CS1 maint: multiple names: authors list (link)
  4. தி இந்து, வனத்துறை அதிகாரிகள் தேடலில் கஞ்சா கைப்பற்றினர்; சூலை 03, 2004 Forest personnel conduct raid, seize ganja பரணிடப்பட்டது 2004-07-10 at the வந்தவழி இயந்திரம்
  5. Tamil Nadu Forest department, Indira Gandhi Wildlife SanctuaryIndira Gandhi Wildlife Sanctuary
  6. உலக பாதுகாக்கப்பட்ட பகுதிகள் ஆணையம்
  7. Mathur, Dr. P.K. & Tripathi, Dr. Anshuman, Management of Forests in India for Biological Diversity and Forest Productivity–A New Perspective: Phase-II, #26. 01.09.2004 To 31.03.2007, p.34 fig.3.2., (warning: large 2MB file)Management of Forests in India பரணிடப்பட்டது 2005-05-16 at the வந்தவழி இயந்திரம்
  8. U.S.D.A. Forest Service/Asia/archives/India, Sustainable Forestry Practices - Management of Forests in India for Biological Diversity and Forest ProductivitySustainable Forestry Practices
  9. Conservator of Forests, Coimbatore Circle, Trichy Road, Coimbatore. Wildlife Warden பரணிடப்பட்டது 2007-01-27 at the வந்தவழி இயந்திரம்
  10. coimbatore.com, Around Pollachi- Anamalai Wildlife Sanctuary