தேவிகுளம்
Appearance
தேவிகுளம் | |||
— கிராமம் — | |||
அமைவிடம் | 10°03′46″N 77°06′14″E / 10.062640°N 77.103990°E | ||
நாடு | இந்தியா | ||
மாநிலம் | கேரளம் | ||
மாவட்டம் | இடுக்கி | ||
ஆளுநர் | ஆரிப் முகமது கான் | ||
முதலமைச்சர் | பிணறாயி விஜயன்[1] | ||
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||
குறியீடுகள்
|
தேவிகுளம் கேரளத்தில் இடுக்கி மாவட்டத்திலுள்ள மூணார் நகரத்திற்கு தென்கிழக்கில் 9.8 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஒரு சிறிய மலைப்பிரதேசம் ஆகும். இங்கு 90% பேர் தமிழ் மொழி பேசுவோர் ஆவர. மலையாளம் பேசுவோர் மிக குறைவாகவே உள்ளனர் [2].
வரலாறு
[தொகு]இராமாயணத்தில் சீதா தேவியின் பெயரில் இருந்தே தேவிகுளம் என்ற பெயர் இந்த இடத்திற்கு சூட்டப்பட்டதாக ஐதீகம்.
ஒரு முறை இங்குள்ள குளத்தில் சீதா தேவி குளித்ததாக சொல்லப்படுகிறது. ஒரு காலத்தில் மிகவும் அழகான ஒரு குளமாக இருந்த அக்குளத்தை இப்பொழுது சீதா தேவி தடாகம் (குளம்) என அழைக்கிறார்கள்.
புவியியல்
[தொகு]கடல் மட்டத்திலிருந்து 1800 மீட்டர் உயரத்தில் தேவிகுளம் நிலைகொண்டுள்ளது.
சிறப்பு அம்சங்கள்
[தொகு]இயற்கை எழில் கொஞ்சும் பல இடங்களை நாம் தேவிகுளத்தில் காணலாம். அவற்றில் முக்கியமானவை[3]:
- பள்ளிவாசல் வெள்ளச்சாட்டம்
- தேயிலைத் தோட்டங்கள்
- சிகப்பும் நீளமும் கலந்த அரக்கு மரங்கள்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "கேரள முதலமைச்சராக பினராயி விஜயன் பதவியேற்பு". தி இந்து. 25 மே 2016. http://www.thehindu.com/news/national/kerala/live-pinarayi-vijayan-sworn-in-as-kerala-cm/article8645207.ece.
- ↑ "Devikulam". Hill Stations in India. Archived from the original on 2018-12-25. பார்க்கப்பட்ட நாள் 2006-10-15.
- ↑ "Devikulam- Kerala". Hill Resorts in India. Archived from the original on 2006-10-18. பார்க்கப்பட்ட நாள் 2006-10-15.