பேச்சு:திருச்சூர் பூரம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

திரிசூர் என்று மலையாளத்தில் வழங்கப்பட்டாலும் தமிழில் திருச்சூர் என்றே வழங்கப்படுகிறது. எனவே பக்கத்தை திருச்சூர் பூரம் என மாற்றக் கோருகிறேன்.கட்டுரையின் பிற இடங்களிலும் மாற்றுவது நலம். --மணியன் 11:07, 19 ஏப்ரல் 2010 (UTC)

நன்றி திரு மணியன் அவர்களே. திரிசூர் என்பது திருச்சூர் என்று மாற்றப்படும் --செந்தில் ராஜேந்திரன் 13:38, 6 மே 2010 (UTC)[பதிலளி]

கூகுள் மொழிபெயர்ப்பு கருவி மூலம் மொழியாக்கம் செய்யப்பட்ட இந்தக் கட்டுரை உரைதிருத்தம் செய்யப்பட்டது. --செந்தில் ராஜ் 17:30, 19 மே 2010 (UTC)[பதிலளி]

இக்கட்டுரையை உரை திருத்தியது போதுமானதாக தெரியவில்லை :(. சில எடுத்துக்காட்டுகளை கீழே கொடுத்துள்ளேன். இவ்வாக்கியங்களுக்கான அர்த்தம் எனக்கு விளங்கவில்லை!

  • இந்துப் பஞ்சாங்கத்தில் 27 நட்சத்திரங்கள் இருக்கின்றன என்பதோடு ஒரு மில்லியன் அல்லது அதற்கு மேற்பட்ட கோயில்கள் கேரளாவில் இருக்கின்றன, இந்தக் கலவை நன்னிமித்தமான பல பண்டிகைகளுக்குள்ள பல்வேறு சாத்தியங்களை உருவாக்குகின்றன, ஒவ்வொரு கோயிலும் வேறுபட்ட நட்சத்திரங்களுக்கேற்ப வேறுபட்ட முக்கியத்துவத்தைக் கொண்டிருக்கின்றன.
  • இருப்பினும், பல வருடங்களுக்கும் மேலாக பூரம் நட்சத்திரம் அதனுடைய கோயில் திருவிழாக்களுடன் இணைந்து சிறப்பு வாய்ந்த முக்கியத்துவத்தைப் பெற்றிருக்கிறது, முக்கியமான காரணம் என்னவெனில் இது திரிச்சூருடன் இணைந்திருப்பதே ஆகும்.
  • திரிச்சூரில் பூரம் திருவிழாவின்போது மிகப்பெரிய கூட்டம் கூடுவதால் இவையெல்லாம் ஒன்றாகச் சேர்ந்து தற்போது வேறுபட்ட பொருளைக் கொண்டதாக இருக்கிறது.
  • திரிச்சூர் பூரம் இன்று சரியான விதத்தில் 'எல்லா பூரங்களின் பூரம்' என்றழைக்கப்படுகிறது
  • எல்லாப் பூரங்களும் பக்கத்து ஊர்கள் மற்றும் நகரங்களில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கையில் வேறு சில திருவிழாக்களையும் கொண்டாடும்படி கோரப்படுகின்றன
  • திரிச்சூர் நகரம் இதை நடத்துகிறது, பூரம் தினத்தின் அதிகாலை நேரத்தில் 36 மணி நேரங்களுக்கு இது நடைபெறுகிறது
  • பூரம் திருவிழாவின் முக்கிய அம்சங்களாக இந்த யானைகள் நெற்றிப்பட்டத்துடன் (அலங்கார தலையணி) அலங்கரிக்கப்பட்டிருப்பதும், கையால் போடப்பட்ட கோலங்களும், அலங்கார மணிகள் மற்றும் ஆபரணங்கள் ஆகியவையே.
  • இது தீவிரமான வாசிப்பில் தொடங்கி பின்னர் முறைப்படுத்தப்பட்ட ஆனால் தொடர்ச்சியான ஒத்திசைவில் ஒலிக்கிறது.
  • இந்தியா 5000 முதல் 10000 வருடங்கள் பழமையுள்ளதாகவும், பல சடங்குகள், இந்து பழக்கவழக்கங்கள் மற்றும் பண்டிகை தேதிகள் பல நூற்றாண்டு பின்னோக்கி செல்பவையா கருதப்படுகின்ற சமயத்தில் திரிச்சூர் பூரம் 200 அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டுகள் மட்டுமே பழமை வாய்ந்தது.

இக்கட்டுரைகள் ஆறாம் வகுப்பு மாணவன் படித்தால் புரிந்துகொள்ள முடியமா? எந்த ஒரு வாக்கியமும் ஒரு விடயத்தை விளக்குவதாக இருக்கவேண்டும், மேலே சுட்டிக்காட்டியுள்ள வாக்கியங்கள் யாவும் பொருளற்றவை/மிகவும் குழப்பமாக உள்ளவை. தயவுசெய்து உரைதிருத்தத்தை சரிபார்க்கவும். பல கூகுள் மொழிபெயர்ப்பு கட்டுரைகளின் உரை திருத்தல் தரம் மிகவும் குறைந்துள்ளது. --கார்த்திக் 18:03, 19 மே 2010 (UTC)[பதிலளி]

உங்கள் கருத்துக்களுக்கு நன்றி. இச்சமயத்தில் நான் ஒரு சில விஷயங்களைப் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.

முதலில் மொழிபெயர்ப்பிற்கும், சொந்தமாக கட்டுரை உருவாக்குவதற்கும் இடையில் உள்ள வேறுபாட்டை புரிந்துகொள்ள வேண்டும். மொழிபெயர்ப்பதற்காக வழங்கப்படும் கூகுள் கருவியில் மொழிபெயர்ப்பாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளையும் புரிந்துகொள்ள வேண்டும். மொழிபெயர்ப்பிற்கென்று சில வரம்புகள் இருக்கின்றன, வழுக்குத் தரையில் நடனமாடுவது போன்றது என்பார்கள். அங்கே உங்களை கீழே விழாமல் காப்பாற்ற எந்த உதவியும் கிடையாது. ஆனால் நீங்கள் நடனமாட வேண்டும் அவ்வளவுதான். மொழிபெயர்ப்பவர் கொடுக்கப்பட்ட உரையில் உள்ள விஷயங்களுக்கேற்பவே மொழியாக்கம் செய்கிறார். அவர் ஆய்வாளரோ அல்லது ஆராய்ச்சியாளரோ அல்ல. தமிழ் விக்கிபீடியாவில் உள்ளபோன்று ஆங்கில விக்கிபீடியாவிலும் மொழிசார்ந்த பிரச்சினைகள் உண்டு. (சில கட்டுரைகள் ஆங்கில பேச்சுவழக்கிலேயே எழுதப்பட்டிருக்கும், அவற்றிற்கு ஆங்கில அகராதியில்கூட பொருள் இருக்காது, அதற்கும் மேலாக Preposition, Phrasal verbs மற்றும் Idioms ஆகியவை பயன்படுத்தப்படும் விதம், இவற்றை இவைதான் என்று கண்டுபிடிப்பதே பெரும் வேலை. அவை வேறு பிரச்சினைகள், விட்டுவிடலாம். இப்போது விவாதிக்க வேண்டியதில்லை). கூகுள் மொழிபெயர்ப்பு கருவியில் ஒரு வாக்கியம் ஒரு பெட்டிக்குள்ளாக திறக்கிறது. அந்த வாக்கியத்தை இரண்டு வாக்கியங்களாக பிரித்து எழுதும் சாத்தியம் இல்லை. அதுபோக அதில் உள்ள சில முக்கியமான வார்த்தைகளுக்கு (Such as Key Words) வெளிப்புற இணைப்பு கொடுக்க (External Links) வேண்டும். சிலபோது இந்த இணைப்புகள் தேவையில்லாத வார்த்தைகளோடும் சேர்ந்துகொள்ளும். அப்போது இணைப்பு கொடுக்க வேண்டிய தேவைக்காக அந்த வார்த்தையை விட்டுவிடுதல் இயலாது. இதுபோன்ற நிறைய பிரச்சினைகளை கூகுள் கருவியில் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது.

மொழிபெயர்ப்பாளர்கள் - குறிப்பாக தொழில்முறை மொழிபெயர்ப்பாளர்கள் - எல்லா விஷயத்தைப் பற்றியும் தெரிந்துகொண்டவர்களாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்க இயலாது. யாராலும் அப்படி இருக்க முடியாது என்றே நான் நினைக்கிறேன். அவர் கொடுக்கப்பட்ட மூலமொழியை மட்டுமே சரிபார்த்துவிட்டு மொழிபெயர்க்கிறார், புரியவில்லை என்றால் அதுசார்ந்த விஷயங்களை தேடி சரிபார்க்கிறார். அவர் அவ்வாறு செய்தாகவும் வேண்டும். ஆனால் எந்த அளவிற்கு என்றால் அவருக்கு தரப்பட்ட வாக்கியம் அல்லது பத்திகள் வேறு மூலாதாரங்களிலும் அதேபோன்றுதான் இருக்கிறதா என்ற அளவிற்குத்தான் அவரால் செல்ல முடியும். பல்வேறு மூலாதாரங்கள் பல்வேறு அபிப்பிராங்களைத் தந்தால் அவரால் மொழிபெயர்க்க இயலாது. மொழிபெயர்ப்பாளருக்கு இவற்றை உறுதிசெய்ய வேண்டிய தேவையில்லை என்றாலும் அவர் உதவி தேடிச் சென்ற ஆதாரம் மேலும் குழப்பக்கூடியதாக இருக்கும், விஷயத்தை புரிந்துகொள்ளவே முடியாது. ambiguousness என்ற விஷயத்தை சரிபார்த்து உறுதிப்படுத்திக்கொள்வது அவ்வளவு எளிதானதல்ல. விஷயத்தைப் பற்றி நன்கறிந்தவர்களால் மட்டுமே அது உறுதிப்படுத்தப்படக்கூடியதாக இருக்கும். சில விஷயங்களை விளக்க மொழி போதுமானதாக இருப்பதில்லை, ஏனென்றால் மொழியை மொழியால் விளக்குவதேகூட அவ்வளவு எளிதானதல்ல. ஆங்கில மூலத்தில் எழுதுபவருக்கு விஷயம் தெரிந்திருந்து மொழி கைவரவில்லை என்றாலும் பிரச்சினைதான், மொழி வசப்பட்டு விஷயம் அரைகுறையாக தெரிந்திருந்தாலும் பிரச்சினைதான். ஆனால் அது மொழிபெயர்ப்பாளருடையதாக மட்டுமே பார்க்கப்படுவதுதான் சோகம்.

சொந்தக் கட்டுரை உருவாக்குபவர்களுக்கு கட்டுப்பாடுகளும் வரம்புகளும் குறைவு. அவர்கள் விஷயத்தை தெரிந்துகொண்டவர்களாக இருப்பதால் மட்டுமே எழுத முனைகின்றனர். அவர்களால் மொழியை எவ்வளவு எளிதாக வேண்டுமானாலும் எழுத முடியும். மேலும் ஒரு வாக்கியம் ஒரு பொருளைத் தருவதாக இருக்க வேண்டும் என்பது அவ்வளவு பொருத்தமானது அல்ல. விக்கிப்பீடியா ஆங்கில கட்டுரை அமைப்பு பின்வருமாறு இருக்கிறது, அதாவது வழக்கமான கட்டுரைகளில் முழு கட்டுரையும் முடிந்தபின்னர் இறுதியாக சுருக்கப்பகுதி இருக்கும். ஆனால் விக்கிப்பீடியாவில் நேர்மாறாக இருக்கிறது முதல் பத்தியில் முழு கட்டுரையும் குறித்த சுருக்கப்பகுதி இடம்பெறுகிறது, இதனால் விக்கிப்பீடியாவில் முதல் பத்தியில் இருந்தே தெரியாத விஷயத்தை தெரிந்துகொள்ள முனைவது அவ்வளவு சரியானதல்ல. ஒரு தனி சொல் ஒரு விஷயத்தை விளக்காதது போன்றுதான் ஒரு தனி வாக்கியமும் ஒரு விஷயத்தை முற்றிலுமாக விளங்கச் செய்வதில்லை. அந்த வாக்கியத்தை குறிப்பாக விக்கிப்பீடியா மொழிபெயர்ப்பு கட்டுரையில் உள்ள வாக்கியத்தை புரிந்துகொள்ள முன்னும் பின்னுமான விஷயங்களைப் புரிந்துகொள்ள வேண்டும். இந்தக் கட்டுரையில் நீங்கள் குறிப்பிட்டுள்ளது போன்ற கருத்துக்கள் சரியானதல்ல என்று வாதிடவில்லை, மொழிபெயர்ப்பிற்கு எங்களுக்கு தரப்படும் நிபந்தனைகளையும் கட்டுப்பாடுகளையும் புரிந்துகொள்ள வேண்டும் என்றுதான் எதிர்பார்க்கிறேன். அதுபோக ஆறாம் வகுப்பு மாணவன் புரிந்துகொள்வதுபோன்றுதான் எல்லாவற்றையும் எழுத வேண்டும் என்பதும் சரியான கூற்றாக படவில்லை. கூகுள் மொழிபெயர்ப்பு கட்டுரைகள் மூலமாக தமிழ் விக்கிப்பீடியாவிற்கு நிறைய கட்டுரைகள் வருவது வரவேற்கப்பட வேண்டிய விஷயமே. நாம் குற்றம்சாட்டுவதை விட்டுவிட்டு முதலில் அடிப்படைக் குறைபாடுகளை களைய முயற்சிக்கலாம், உதாரணத்திற்கு கூகுள் கருவியில் செய்யவேண்டிய மாற்றங்கள் குறித்து விவாதிக்கலாம். மேலும் இப்போதுதான் மாற்றங்கள் செய்யப்பட தொடங்கியிருக்கின்றன. ஒரேடியாக குற்றம்சாட்டுவது ஆரோக்கியமான விஷயமல்ல. மொழிபெயர்ப்பாளர்கள் அனைவரும் அனுபவமில்லாதவர்களும் அல்ல. எல்லாவற்றிற்கும் மேலாக மொழிபெயர்ப்பாளர்களுக்கு இது தொழில் என்பதையும் அவர்களுடைய Survival பிரச்சினையும் இதில் இருக்கிறது என்பதை கவனத்தில் கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன். அவர்களுக்கு இருக்கும் நேரமும் குறைவானதே. கூகுள் கருவியில் ஒன்றைச் செய்யவேண்டும், தமிழ் விக்கிப்பீடியா கட்டுரையில் அது நீக்கப்பட வேண்டும் என்று கூகுள் மற்றும் விக்கி ஆகிய இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் கலந்தாலோசிக்காமல் மொழிபெயர்ப்பாளர் மீது திணிப்பது நியாயமற்றது.

நீங்கள் குறிப்பிட்டுள்ள வாக்கியங்களுக்கான ஆங்கில மூலத்தையும் தமிழ் மொழிபெயர்ப்பையும் கீழே கொடுத்துள்ளேன். அவற்றை எளிதாக்கி உங்கள் அபிப்பிராங்களைத் தெரிவியுங்கள். கூகுள் கருவி போன்ற கட்டுப்பாடு உங்களுக்கு இல்லை. உங்கள் எளிமைப்படுத்தலுக்கேற்ப நான் இந்தக் கட்டுரையை மறு உரைதிருத்தம் செய்கிறேன்.


இந்துப் பஞ்சாங்கத்தில் 27 நட்சத்திரங்கள் இருக்கின்றன என்பதோடு ஒரு மில்லியன் அல்லது அதற்கு மேற்பட்ட கோயில்கள் கேரளாவில் இருக்கின்றன, இந்தக் கலவை நன்னிமித்தமான பல பண்டிகைகளுக்குள்ள பல்வேறு சாத்தியங்களை உருவாக்குகின்றன, ஒவ்வொரு கோயிலும் வேறுபட்ட நட்சத்திரங்களுக்கேற்ப வேறுபட்ட முக்கியத்துவத்தைக் கொண்டிருக்கின்றன.

There 27 Nakshatras in the Hindu panchangam and a million or more temples in Kerala, and this combination creates numerous possibilities for auspicious occasions, with each temple having varying importance for the different stars.

இருப்பினும், பல வருடங்களுக்கும் மேலாக பூரம் நட்சத்திரம் அதனுடைய கோயில் திருவிழாக்களுடன் இணைந்து சிறப்பு வாய்ந்த முக்கியத்துவத்தைப் பெற்றிருக்கிறது, முக்கியமான காரணம் என்னவெனில் இது திரிச்சூருடன் இணைந்திருப்பதே ஆகும்.

However, over the years, the pooram nakshatram has gained special significance in its association with temple festivals, mainly because of its association with Thrissur.

திரிச்சூரில் பூரம் திருவிழாவின்போது மிகப்பெரிய கூட்டம் கூடுவதால் இவையெல்லாம் ஒன்றாகச் சேர்ந்து தற்போது வேறுபட்ட பொருளைக் கொண்டதாக இருக்கிறது.

It has now taken on a different meaning all together, because of the huge congregation of people during the pooram festival in Thrissur.

இந்தியா 5000 முதல் 10000 வருடங்கள் பழமையுள்ளதாகவும், பல சடங்குகள், இந்து பழக்கவழக்கங்கள் மற்றும் பண்டிகை தேதிகள் பல நூற்றாண்டு பின்னோக்கி செல்பவையா கருதப்படுகின்ற சமயத்தில் திரிச்சூர் பூரம் 200 அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டுகள் மட்டுமே பழமை வாய்ந்தது.

While India is considered to be between 5000 to 10000 years old, and many rituals, Hindu customs and festivals date back centuries, the Thrissur pooram is only about 200 or more years old.

--செந்தில் ராஜ் 09:25, 20 மே 2010 (UTC)[பதிலளி]

செந்தில், விக்கி சமூகத்தின் கருத்துகள் உங்களைப் புண்படுத்தி இருந்தால் வருந்துகிறேன். உங்கள் கருத்து இத்திட்டத்தில் உள்ள சிக்கல்களை மிகத் தெளிவாக விளக்கும் விதமாக உள்ளது. மிகுந்த கட்டுப்பாடுகளுக்கு இடையே தான் நீங்கள் மொழிபெயர்க்கிறீர்கள் என்பதை அறிவோம். விக்கிப்பீடியாவின் அழைப்பில் பேரில் அல்லாமல் கூகுள் தன்னிச்சையாகவே இத்திட்டத்தைத் தொடங்கி நடத்தி வருகிறது. எனவே, என்ன பின்புலத்தில் நீங்கள் பங்களித்தாலும் வழமையான விக்கித் தரத்தில் கட்டுரை அமைய வேண்டும் என்றே விக்கி சமூகம் எதிர்பார்க்கும். மொழிபெயர்ப்புக் கருவி இல்லாமல் நேரடியாக மொழிபெயர்க்குமாறு கூகுளிடம் வேண்டிப் பார்த்து விட்டோம். ஆனால், கூகுள் அதற்கு உடன்படவில்லை. மொழிபெயர்ப்புத் தரம் குறித்த பிரச்சினைகளை மொழிபெயர்ப்பாளர்களுடன் நேரடியாகப் பேசித் தீர்க்க வேண்டும் என்பதே அதன் நிலைப்பாடு. மொழிபெயர்ப்பாளரைக் கேட்டால் கூகுளிடம் பேசச் சொல்கிறீர்கள். முட்டுச்சந்து :) நாங்கள் இவ்வளவு பொறுமையாக இத்திட்டத்தை அணுகுவதற்கு இத்திட்டத்தில் ஈடுபட்டுள்ள பலரின் பணி வாய்ப்பு போன்ற விசயங்களும் முக்கிய காரணம். நன்றி--ரவி 16:50, 20 மே 2010 (UTC)[பதிலளி]

நன்றி ரவி அவர்களே. புண்படுத்தியதாக நினைக்கவில்லை. விக்கி சமூகத்தினர் மொழிபெயர்ப்பு சூழ்நிலையை புரிந்துகொள்ளவில்லை என்பதே என் கருத்து. இனிவரும் கட்டுரைகளில் மறுதிருத்தம் செய்யவேண்டிய வேலை இல்லாதிருப்பதற்கான வாய்ப்பு குறைவானதென்றே நினைக்கிறேன். ஏறத்தாழ இந்த மொழிபெயர்ப்புத் திட்டம் நின்றுபோகும் சூழ்நிலைதான் நிலவுகிறது. குறிப்பாக கூகுள் கருவியில் நாங்கள் வெளிப்புற இணைப்பு கொடுத்து அதை விக்கியில் நீக்கவேண்டும் என்பது சாமானிய வேலை அல்ல. நாங்கள் இதுவரை செய்துள்ள திருத்தங்களின்படி பார்த்தால் அது முழுநேர வேலையாகவே இருக்கப்போவது தெளிவு. எங்களுக்கு கட்டுரைகள் தரும் நிறுவனங்களும் அதற்கான பொறுப்பை ஏற்பதாக தெரியவில்லை. அவர்களுக்கு லாபம் மட்டுமே குறியாக இருக்கிறது. நீங்கள் வேண்டுமானால் கூகுள் கருவியை மாற்றச்சொல்லாமல் இந்த இணைப்பு கொடுக்கும் வேலையை நீக்கச்செய்தாலே 90 சதவிகித பிரச்சினைகள் தீரும். ஏனென்றால் அதில் எந்தப் பயனும் இல்லாமல்தானே போகிறது. அது மொழிநடையில்கூட சிக்கல் ஏற்படுத்துகிறது. மொழிபெயர்ப்பாளர்கள் இந்த விஷயத்தில் செய்வதற்கு ஒன்றுமில்லை. நாங்கள் கடைநிலை ஊழியர்கள் போன்றவர்கள். மற்றபடி விக்கி சமூகத்தினரின் தரநிலைகளை ஏற்றுச் செய்வது எங்களுக்கு கடினமான வேலை ஒன்றும் கிடையாது. இதற்கு முன்பு மொழிபெயர்ப்பு பிரச்சினைகள் வந்தபோதெல்லாம் "இதற்கென்று தரநிலைகள் எதுவுமில்லை, ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு திருத்தத்தை தருவது சரியானதல்ல" என்று நான் இந்த நிறுவனங்களுடன் சண்டையிட்டிருக்கிறேன். அவர்கள் அதற்கு பதில் கூறாமல் கிளைண்ட் கேட்பதுபோல் செய்துகொடுங்கள் என்கிறார்கள். (Dynamic Host Configuration Protocol என்பதை இயங்குநிலை புரவன் உள்ளமைவு நெறிமுறை என்று மாற்றச்சொல்லியிருக்கிறார்கள். இப்படி நேரடியாக தமிழில் எழுதுவது எந்த அளவிற்கு சரியானது என்று எனக்கு தெரியவில்லை. இதில் புரவன் என்ற வார்த்தையை நான் இதற்கு முன்பு கேள்விப்பட்டதே இல்லை, புரவி என்றால் குதிரை என்பது மட்டுமே என் அறிவுக்கு எட்டியது). ஆனால் இந்த மொழிபெயர்ப்பு நின்றுபோனால் திருத்தங்கள் செய்யவும் யாரும் முன்வர மாட்டார்கள். திருத்தங்கள் சிக்கலானாலும் இதேபோன்ற பிரச்சினை ஏற்படும். எனக்குத் தெரிந்தவரை நிறைய பயன்மிக்க கட்டுரைகள் மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றன. அவற்றை விக்கியிலிருந்து நீக்குவதை இழப்பென்றே கருதுகிறேன். --செந்தில் ராஜ் 05:26, 21 மே 2010 (UTC)[பதிலளி]

ஒரேயொரு மென்பொருள் வழு உங்கள் 90% உழைப்பை வீணாக்குகிறது என்றால் மிகவும் வருத்தமாக உள்ளது. கூகிள் நிறுவனத்தார் அந்த வழுவைத் தீர்த்து விடுவதாகத் தெரிவித்திருந்தனர். ஏதும் முன்னேற்றம் ஏற்பட்டதா தெரியவில்லை. அதுவரை விக்கித் தானுலவியைப் பயன்படுத்தி இவ்விணைப்புகளை எளிதில் நீக்க முடிகிறதா எனப் பார்க்க முடியுமா? -- சுந்தர் \பேச்சு 09:51, 21 மே 2010 (UTC)[பதிலளி]
திருத்தங்கள் செய்ய ஊக்கத்தொகை அளித்தல், ஒரே மாதிரியான திருத்தங்களைச் செய்ய மொழிபெயர்ப்பாளர் அல்லாத பணியாளர்களை நியமித்தல் போன்ற பரிந்துரைகளை ஏற்கனவே கூகுளுக்குத் தெரிவித்து இருந்தோம். இன்று மீண்டும் இதனை வலியுறுத்தி கூகுளுக்கும் மொழிபெயர்ப்பு நிறுவன ஒருங்கிணைப்பாளர்களுக்கும் எழுதி உள்ளோம். இதனைக் கருத்தில் கொண்டு உரையாடி வருவதாகவும் இது பற்றிய முடிவை விரைவில் தெரிவிப்பதாகவும் கூகுள் தெரிவித்துள்ளது.
இயங்குநிலை புரவன் உள்ளமைவு நெறிமுறை என்ற சொல்லை யார், எங்கு பரிந்துரைத்தார்கள் என்று தெரியவில்லை. புரவலர் என்ற சொல்லோடு தொடர்புப்படுத்தி புரவன் என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது.
சுந்தர், {{கூகுள் தமிழாக்கக் கட்டுரை}} என்ற வார்ப்புரு இட்ட கட்டுரைகளில் உள்ள சிகப்பு இணைப்புகளை மட்டும் நீக்கும் வண்ணம் ஏதாவது தானியங்கி நிரல் எழுத இயலுமா? கூகுள் கட்டுரைகளில் இணைப்பு|இணைப்பு விளக்கம் போன்ற குறிகள் இல்லாமல் எல்லாமே நேரடி இணைப்பாகவே உள்ளன. வார்ப்புரு, படிமங்களுக்கான சிகப்பு இணைப்புகள் நீக்கப்பட்டு விடக்கூடாது. மற்ற நுட்ப ஆர்வலர்களும் இது பற்றி உதவினால் நன்றாக இருக்கும். நன்றி--ரவி 10:14, 21 மே 2010 (UTC)[பதிலளி]
இயலும் ரவி. இதற்கான நிரல் எழுதுவது வெகு எளிது. இயக்குவதற்கு மட்டும் தொடர் இணைய வசதி கொண்ட கணினி இருந்தால் போதும். -- சுந்தர் \பேச்சு 10:18, 21 மே 2010 (UTC)[பதிலளி]
இங்குள்ள வசதியைக் கொண்டு திங்கட்கிழமை மாலைக்குள் என்னால் நிரல் எழுதித் தர முடியும். இனி இப்பணி நிமித்தம் மொழிபெயர்ப்பாளர்கள் தங்கள் நேரத்தை வீணாக்க வேண்டாம். நாம் எழுதும் நிரல் செயலியை இயக்குவதற்கு மட்டும் வசதி செய்து தந்தால் போதுமானது. (Toolserver கணக்கைப் பெற்றால் விக்கிமீடியா தருவிகளிலேயே ஓட்டி விடலாம். கணேசிடம் அதற்கான கணக்கு உள்ளது, நானும் விண்ணப்பித்துப் பார்க்கிறேன். பின்னாளில் உதவும்.) -- சுந்தர் \பேச்சு 10:26, 21 மே 2010 (UTC)[பதிலளி]

ஆரோக்கியமான விவாதம் நடந்துவருவது மகிழ்ச்சியளிக்கிறது. திரு. ரவி மற்றும் திரு. சுந்தர் ஆகியோருக்கு நன்றிகளும் வாழ்த்துக்களும். --செந்தில் ராஜ் 15:57, 21 மே 2010 (UTC)[பதிலளி]

கூகிள் நிறுவனத்தாரும் இச்சிக்கலைத் தீர்க்க முயலுவதாகத் தெரிகிறது. ஏற்கனவே ஏற்றப்பட்ட கட்டுரைகளில் இணைப்பை நீக்க நிரல் எழுதத் தொடங்குகிறேன். -- சுந்தர் \பேச்சு 06:54, 25 மே 2010 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:திருச்சூர்_பூரம்&oldid=3637211" இலிருந்து மீள்விக்கப்பட்டது