விலங்குக் காட்சிச்சாலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
சன்டிடிகா விலங்குக் காட்சிச்சாலை, கலிபோர்னியா, மே 2007.

விலங்குகளை குறிப்பிட்ட எல்லைக்குள் அல்லது கூட்டுக்குள் அடைத்துவைத்து பொது மக்களின் காட்சிக்கு வைக்கும் இடமே விலங்குக் காட்சிச்சாலை ஆகும். விலங்குகளை அவற்றின் இயற்கை வாழ்நிலைகளில் அனைவரும் காண்பது கடினமானது, ஆபத்தானது. ஆனால் விலங்குக் காட்சிச்சாலை, உலகில் உள்ள பல்வேறு விலங்குகளை அனைவரும் காண வழிசெய்கிறது. விலங்குகளை அடைத்து வைத்து வணிகம் செய்வது அறமற்றது என சில வாதிடுகின்றனர். இதனால் சில விலங்குக் காட்சிச்சாலைகள் இயன்றவரை விலங்குகளின் இயற்கை சூழ்நிலையை பிரதி செய்து விலங்குகளை அங்கு உலாவவிட்டு பராமரிக்க முயலுகின்றன. விலங்குகள் வேகமாக அழிந்துவரும் இன்றைய நிலையில் விலங்குகள் பற்றிய அறிவைப் பெற, பகிர விலங்குக் காட்சிச்சாலைகள் உதவுகின்றன. விலங்குகளை இனப்பெருக்கம் செய்து பாதுகாக்கவும் விலங்குக் காட்சிச்சாலைகள் உதவுகின்றன.