புட்டபர்த்தி
புட்டபர்த்தி | |
— நகரம் — | |
அமைவிடம் | 14°09′55″N 77°48′42″E / 14.1651671°N 77.811667°E |
நாடு | இந்தியா |
மாநிலம் | ஆந்திரா |
மாவட்டம் | அனந்தபூர் |
ஆளுநர் | |
முதலமைச்சர் | |
மக்களவைத் தொகுதி | புட்டபர்த்தி |
மக்கள் தொகை • அடர்த்தி |
9,000 • 3/km2 (8/sq mi) |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
பரப்பளவு | 2,625 சதுர கிலோமீட்டர்கள் (1,014 sq mi) |
புட்டபர்த்தி(Puttaparthi) தென்னிந்தியாவின் ஆந்திர மாநிலத்திலுள்ள அனந்தபூர் மாவட்டத்தில் அமைந்துள்ள நகரமாகும். ஆன்மீகஞானி சத்திய சாயி பாபாவின் இருப்பிடம் அமைந்துள்ள நகரம் இது. பாபாவின் பிரசாந்தி நிலையம் ஆசிரமம் இங்கு அமைந்துள்ளது. இதன் காரணமாக இந்நகரம் உள்ளூர் மக்களின் வணிக நகரமாக வளர்ச்சி பெற்றுள்ளது. ஆசிரமத்திற்கு வருபவர்கள் எண்ணிக்கை அதிகமிருப்பதால் இங்கு உணவு விடுதிகளும், தங்கும் விடுதிகளும் நிறைந்துள்ளன.
சாலைகள்
[தொகு]புட்டபர்த்தியில் இருந்து அனந்தபூரை 84 கிமீ தொலைவு சாலையும், இந்துப்பூரை 65 கிமீ சாலையும், ஐதராபாத்தை 472 கிமீ பயண சாலையும் மற்றும் பெங்களூரை 156 கிமீ சாலையும் இணைக்கின்றன.
இச்சாலைகளில் பயணிக்க ஆந்திர பிரேதச மாநில சாலைப் போக்குவரத்துக் கழகத்தால் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. கர்நாடக மாநில சாலைப் போக்குவரத்துக் கழகத்தால் இயக்கப்படும் பேருந்துகளும் பெங்களுரூவில் இருந்து செயல்படுகின்றன.
தொடருந்து நிலையம்
[தொகு]புட்டபர்த்தி தொடருந்து நிலையம் நவம்பர் 23, 2000, முதல் துவக்கப்பட்டு தற்பொழுது செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது. இதன் பெயர் 'ஸ்ரீசத்யசாயி பிரசாந்தி நிலையம்' (ஆங்கிலத்தில் 'எஸ் எஸ் ப்பி நிலையம்') என்பதாம். தொடருந்து நிலையத்திலிருந்து ஆசிரமத்திற்கு இடையேயுள்ள தொலைவு எட்டு கி.மீ ஆகும். இதன் அருகே உள்ள முக்கிய தொடர்வண்டி நிலையமான 'தர்மாவரம்' இங்கிருந்து 45 கிமீ தொலைவில் அமைந்துள்ளது.
வானூர்தி நிலையம்
[தொகு]புட்டபர்த்தி வானூர்தி நிலையத்திலிருந்து செல்லும் விமானங்கள், பெங்களூர் வழியாக மும்பை மற்றும் சென்னையை இணைப்பன. இவ்விமான நிலையம் ஆசிரமத்திலிருந்து நான்கு கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. விமான சேவைக்கு 'இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவன' வானூர்திகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. பெங்களுரூ பன்னாட்டு விமான நிலையம், 'தேவனஹல்லி' பகுதியில் இருக்கின்றது;அதாவது, ஆசிரமத்திலிருந்து 118 கிமீ தொலைவில் அமைந்துள்ளது.