சத்திய சாயி பாபா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிறீ சத்ய சாய் பாபா
Sri Sathya Sai Baba
பிறப்புநவம்பர் 23, 1926(1926-11-23)
புட்டபர்த்தி, ஆந்திரப் பிரதேசம்,  இந்தியா
இறப்புஏப்ரல் 24, 2011(2011-04-24) (அகவை 84)
புட்டபர்த்தி, ஆந்திரப் பிரதேசம்,  இந்தியா
இயற்பெயர்சத்தியநாராயண ராயூ
தத்துவம்அத்வைதம்
குருஎவருமில்லை
மேற்கோள்"அனைவரையும் நேசி அனைவருக்கும் சேவையாற்று"

சிறீ சத்ய சாயி பாபா (Sathya Sai Baba, தெலுங்கு: సత్య సాయిబాబా,: நவம்பர் 23, 1926- ஏப்ரல் 24, 2011[1]) தென்னிந்திய ஆன்மிக குரு. இவரது அடியார்களினால் இவர் "இறை அவதாரம்" எனப் போற்றப்படுகிறார்[2]. இவர் ஒரு சித்தரும் ஆவார்[3][4][5]. விபூதி தருவித்தல், மேலும் மோதிரங்கள், சங்கிலிகள், கடிகாரங்கள் போன்ற சிறிய பொருட்களை தருவித்தல் போன்ற இவரது செய்கைகளினால் இவர் மீது உலக நாடுகளில் பலத்த சர்ச்சைகள் கிளம்பியுள்ளன. இவை எளிய வித்தைகளே என பகுத்தறிவாளர்கள் நிரூபித்து உள்ளார்கள்.[6] ஆனாலும் இவற்றை இவரது பக்தர்கள் இறைவனின் அற்புதம் என கருதுகின்றனர்[7]. அவ்வாறு அவரது பக்தர்கள் நம்பக் காரணம், அறிவியல் அறிஞர்கள் பாபாவை முறைப்படி ஆய்வுசெய்து அவரின் அற்புதச் செயல்கள் பற்றிய முழு உண்மையை ஆய்வறிக்கையாக வெளியிட்டுள்ளனர். அவற்றுள் முக்கியமானது எர்லாண்டூர் ஹெரால்ட்சன் மற்றும் கார்லிஸ் ஓசிஸ் ஆகியோர் ஆய்ந்து வெளியிட்ட அறிக்கை ஆகும். அது அமெரிக்காவின் புகழ்பெற்ற ஆய்விதழான ‘ஜர்னல் ஆஃப் தி அமெரிக்கன் சொசைட்டி ஃபார் சைக்கிக்கிள் ரிசெர்ச் எனும் ஆய்விதழலில் வெளிவந்துள்ளது.[சான்று தேவை]

சத்திய சாயிபாபா தனது 14வது அகவையில் சீரடி சாயி பாபாவின் மறு அவதாரம் எனத் தன்னை அறிவித்துக் கொண்டார்[8].

சத்திய சாயிபாபா நிறுவனம் தனது சாயி அமைப்புகள் மூலம் இலவச மருத்துவ நிலையங்கள், பாடசாலைகள், உயர்கல்வி நிலையங்கள், கிராமங்களுக்கு குடிநீர்த் திட்டம் போன்ற பல சமூகநலத் திட்டங்களை இந்தியாவிலும் வேறு பல நாடுகளிலும் அறிமுகப்படுத்தி நடத்தி வருகிறது. இவரது ஏறத்தாழ 1350 சத்திய சாய் அமைப்புகள் 155 மையங்களில் உலகெங்கிலும் செயல்பட்டு வருகின்றது குறிப்பிடத்தக்கது[9][10]. இவரின் வழிநடப்பவர்கள் சுமார் 100 கோடி பேர் (2007இல்) எனக் கணக்கிடப்பட்டுள்ளது[11]. உலகெங்கிலும் 200 கோடி அடியார்கள் உள்ளனர் என்றும் கூறப்படுகின்றது.

வாழ்க்கைக் குறிப்பு[தொகு]

ஆந்திராவில் உள்ள புட்டபர்த்தி எனும் கிராமத்தில் பிறந்தார். அவர் தாயாரின் பெயர் ஈசுவரம்மா, தந்தை பெத்தவெங்கம ராயூ ரட்னாகரம். சத்திய சாயி இவர்களுக்கு 8-ஆவது குழந்தையாகப் பிறந்தார். ”சத்திய நாராயண விரதம்” இருந்து பிறந்ததால், இவருக்குச் சத்திய நாராயணன் எனப் பெயர் சூட்டினர்.

சமூக சேவைகள்[தொகு]

அருள்மிகு சத்திய சாயிபாபா மற்றும் அவரது பக்தர்கள் நூற்றுக்கணக்கான சமூகச்சேவை நிறுவனங்களை நடத்தி வருகிறார்கள்[சான்று தேவை]. கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், சமூகச் சேவை நிறுவனங்கள் எனப் பல வழிகளில் இச்சேவைகள் முன்னெடுக்கப்படுகின்றன. இந்தியா மட்டுமல்லாது, உலகின் பல பாகங்களிலும் இவை இயங்குகின்றன. விழுமிய சமூகம் (Sociocare), விழுமியக் கல்வி (விழுக்கல்வி, Educare), விழுமிய மருத்துவம் (Medicare), விழுமியக் குடிநீர் (aquacare) எனப் பல துறைகளில் அவரின் பணிகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. அவரது நிறுவனம், உலகம் முழுவதும் 136 நாடுகளில் மக்கள் பணியில் ஈடுபட்டுக்கொண்டுள்ளது.

விழுமியச் சமூக (Sociocare) நிறுவனம் உலகின் பல இடங்களில் மக்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொண்டிருக்கின்றது. சமீபத்தில் ஒரிசாவில் நடந்த வெள்ளத்தில் வீடுகள் இழந்தவர்களுக்குப் புதிய வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளன.[12].

விழுக் கல்விப் பாடத்திட்டத்தின் மூலம், சாயி நிறுவனம் உலகின் பல நாடுகளில் சமுதாயத்தின் அனைத்துப் பிரிவு மக்களும் பயன்பெறும் வகையில் பல கல்வி அமைப்புகளை ஏற்படுத்தியிருக்கின்றது. இவை அனைத்தும் மாணவர்களிடம் இருந்து எந்த விதமான கட்டணங்களும் பெறுவதில்லை.[13][14].

விழுமிய மருத்துவத்தினைத் தொண்டுப்பணியாக அருள்மிகு சத்தியசாயி நிறுவனம் உலகின் பல நாடுகளில், சமுதாயத்தின் அனைத்துப் பிரிவு மக்களும் பயன் பெறும் வகையில் பல இலவச மருத்துவ முகாம்களையும், பல இலவச மருத்துவமனைகளையும் நடத்திவருகின்றது.[15][16][17][18].புட்டபர்த்தியிலும் பெங்களூருவிலும் அருள்மிகு சத்தியசாயி உயர்சிறப்பு மருத்துவமனைகள் நிறுவப்பட்டுள்ளன.

தூய குடிநீர் வழங்கும் திட்டத்தின் கீழ் ஆந்திரவில் உள்ள அனந்தபூர் மற்றும் வடக்கு,கிழக்கு கோதாவரி மாவட்டங்களுக்கு சுத்தீகரிக்கப்பட்ட குடிநீரைச் ”அருள்மிகு சத்திய சாயி மைய அறக்கட்டளை” வழங்கி உள்ளது. அனந்தபூர் மாவட்ட குடிநீர்ப் பிரச்னை சுதந்திர காலத்திற்கு முற்பட்டது, எந்த அரசாலும் தீர்த்துவைக்க முடியாமல் இருந்தது. இதனை அருள்மிகு சத்திய சாயிபாபா அவர்கள், குறுகியகாலச் சாதனையாக அதாவது ஒரே வருடத்தில் எழுநூறு கிராமத்திற்கு நல்ல குடிநீர் கிடைக்கும்படியாக விரைவில் செய்து முடித்தார். உண்மையாகச் சொல்லப்போனால் இதுதான் அவரின் அதிசயம்மிக்க அற்புதம் எனலாம்.[19],[20],[21]

சென்னை மக்களின் தாகத்தைத் தீர்க்கத் தமிழகம் மற்றும் ஆந்திர அரசுகளால் முயற்சி செய்யப்பட்ட, தோல்வியடைந்த தெலுங்கு கங்கைத் திட்டத்தினைச் சீர்செய்து சென்னை மக்களின் குடிநீர்ப் பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு வழங்கியது, அருள்மிகு சத்திய சாயி மைய அறக்கட்டளை.[22][23]

ஆன்மீகச் சேவை[தொகு]

அது தவிர, மக்களின் மனங்களில் இவ்வாறான மேன்மைமிக்க சேவை அல்லது தொண்டு எண்ணங்களை வளர்ப்பதற்காக அவரின் நிறுவனங்கள் பல ஆன்மிகச் செயல்பாடுகளில் ஈடுபடுகின்றன. அனைத்து மதக் கொண்டாட்டங்களையும் அதன் உட்கருத்தை உணர்ந்து கொண்டாடுவது, பஜனை எனப்படும் போற்றிசை, நகர சங்கீர்த்தனம்,மதங்களின் உண்மைத் தத்துவத்தைப் புரிந்து கொள்ள ஆன்மீக வாசகர் வட்டம் என்கின்ற ஆய்வுவட்டம் போன்ற பல திருச்செயல்கள் உலகெங்கும் நடைபெறுகின்றன [24][25].

தனது ஆன்மீகச் சேவைகளினிடையேயும் சமயசார்பற்ற முறையில் செயலாற்றி வந்தார்.[26] அயோத்தி சிக்கல், 1990-களில் தீவிரமாக இருந்தபோது, இந்துத்துவ அரசியல்வாதிகளின் ஆதரவு வேண்டுகோள்களை நிராகரித்து நடுநிலை காத்தார். பல கிறித்தவர்களையும், இசுலாமியரையும் தனது பற்றாளர்களாகக் கொண்டிருந்தவேளையிலும், தங்கள் சமயத்தையும் நம்பிக்கைகளையும் மாற்றிகொள்ள வேண்டியதில்லை என்றார்.[26] தன்னைப் பின்பற்றிய பல நாட்டுத் தலைவர்களிடத்தும் நடுநிலை காத்தார்.

வெளியீடுகள்[தொகு]

இவர் தன் கொள்கைகளை எழுதியும், பேசியும் பரப்பி வருகின்றார். அவருடைய பேச்சுக்கள் 'சத்ய சாய் ஸ்பீக்சு' என்று ஆங்கிலத்தில் கிட்டத்தட்ட 40 தொகுதிகள் வெளிவந்துள்ளன. மேலும், ஆன்மீகக் கருத்துக்களின் விளக்கமாகப் பலநூல்களை அவர் தொடர்ந்து மாத இதழான சனாதன சாரதி என்ற மாதப் பத்திரிகையில் எழுதிவருகின்றார். அவரின் சொற்பொழிவுகளும் தொடர்ந்து அவ்விதழில் வெளிவரும். இந்தச் சனாதன சாரதி மாத இதழானது, இந்திய மொழிகளில் தெலுங்கு, தமிழ், மலையாளம், இந்தி முதலிய பல மொழிகளில் வெளிவருகின்றது. உலகின் பெரும்பாலான மொழிகளிலும், சப்பானியம், உருசியம், செருமானியம், கிரேக்கம், போன்ற பல மேலைநாட்டு மொழிகளிலும் வெளிவந்துகொண்டுள்ளது. மெலும் அவர் அவ்வப்போது பேசிய பேச்சுக்கள், எழுதிய கட்டுரைகள் நூல் வடிவில் வெளிவந்துள்ளன. இந்தப் படைப்புக்கள், அருள்மிகு சத்தியசாயி நூல்கள் நல்ல தரமான தாளில், அழகிய அச்சில் மிகக் குறைந்தவிலையில் விற்கப்படுகின்றன.[27][28].[29]

குற்றச்சாட்டுகள்[தொகு]

இவரின் 30 ஆண்டு காலச் சர்ச்சைகள் குறித்தான உண்மைகளைப் பிரித்தானிய வானொலிச் சேவையகம் பிபிசி தொகுத்து வெளியிட்டது[30]. இவர் மீது பல பாலியல் துஷ்பிரயோகக் குற்றச்சாட்டுக்களும்.[31], சூழ்ச்சி, வஞ்சகம், கொலைச்செயல், பொருளாதாரக் குற்றங்கள் இவரைச் சூழ்ந்தன. இக்குற்றச்சாட்டுகளை அருள்மிகு சத்தியசாயி பாபா மைய நிறுவனம் பலமுறைகள் மறுத்துள்ளது[32].

அமெரிக்கத் தூதரகம் இவர் மீதான பாலியல் குற்றச்சாட்டு உறுதிபடுத்தப்படாதது எனினும், அவர் மீது பாலியல் தொடர்பான குற்றச்சாட்டுகள் இருப்பதால் தன்னுடைய நாட்டினர் ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள சாய்பாபாவைச் சந்திப்பது குறித்து எச்சரிக்கை விடுத்தது [33].

1993 கொலை முயற்சி[தொகு]

சூன் 6,1993 அன்று சாய் பக்தர்களும் ஆசிரமவாசிகளுமான நான்கு இளைஞர்கள் புட்டபர்த்தியில் உள்ள சத்தியசாயி பாபாவின் இல்லத்தினுள் கத்திகளுடன் அத்துமீறி நுழைந்து கொலைசெய்ய முயன்றனர். சத்திய சாயிபாபா தப்பி குரல் எழுப்பினார். தொடர்ந்த எழுந்த கலவரத்தில் அவரது இரு பணியாளர்கள் -சமையற்காரரும் ஓட்டுநரும்- கொலையுண்டனர். அத்துமீறிய நால்வரும் காவலர்களால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்நிகழ்வைத் தொடர்ந்து சாயிபாபா இந்தியக் காவல்துறையால் விசாரிக்கப்படவில்லை.[34]

இறப்பு[தொகு]

84 வயதான சாயி பாபா உடல் நலக்குறைவு, மூச்சுத் திணறல் காரணமாக அருள்மிகு சத்தியசாயி மருத்துவ அறிவியல் கழக மருத்துவமனையில் 2011 மார்ச் 28ம் திகதி சேர்க்கப்பட்டுத் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார்.[35][36] இவரது உயிர் பிழைப்பிற்காகப் பக்தர்கள் பிரார்த்தனைகள் செய்து வந்தனர். இவரது உடல் நிலையில் பெரும் அளவில் முன்னேற்றம் எதுவும் ஏற்படவில்லை. அமெரிக்காவில் இருந்து வரவழைக்கப்பட்ட மருத்துவக் குழுவினர் 24 மணி நேரமும் பாபாவின் உடல் நிலையைக் கவனித்து வந்தனர். இந்நிலையில் 2011 ஏப்ரல் 24 ஞாயிற்றுக்கிழமை காலை இந்திய நேரம் 07:40 மணிக்கு அவரது உயிர் பிரிந்தது[37].

இறப்புக்குப் பிந்தைய நிகழ்வுகள்[தொகு]

இவர் இறந்த அன்று (ஏப்ரல் 24, 2011) பூட்டப்பட்ட இவரது தனியறையான யசுர் வேத மந்திரத்தில் என்ன உள்ளது என்பதையறியப் பலதரப்பினரும் ஆர்வம் காட்டிவந்தனர்.[38] இந்நிலையில் யசுர் வேத மந்திரம் சுமார் ஒன்றரை மாதங்கள் கழித்துச் சூன் 16, 2011 அன்று திறக்கப்பட்டது. அவ்வறையில் பெரும்பாலும் பணமும் நகையும் கணினிகளுமே இருந்தன. இவையனைத்தும் அவரது கல்வி அறக்கட்டளையில் பயிலும் மாணவர்களைக் கொண்டு தனியே கணக்கெடுத்துப் பிரிக்கப்பட்டு பாரத ஸ்டேட் வங்கியில் முதலீடு செய்யப்பட்டன.[39]

மேற்கோள்கள்[தொகு]

  1. பகவான் சத்ய சாய் பாபாவின் உயிர் பிரிந்தது, தினமலர், ஏப்ரல் 24, 2011
  2. Sai Baba turns 82, is still going strong பரணிடப்பட்டது 2010-08-25 at the வந்தவழி இயந்திரம், நவம்பர் 23, 2007
  3. Lochtefeld, James G. (2002). The Illustrated Encyclopedia of Hinduism (Vol. 2 N-Z). New York: Rosen. ISBN 0-8239-2287-1.(pg 583)
  4. Lochtefeld, James G. (2002). The Illustrated Encyclopedia of Hinduism (Vol. 1). Rosen. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-8239-3179-X.  See entry: "Godman".
  5. Hummel, Reinhart; Linda W. Duddy (translator) (1984). "Guru, Miracle Worker, Religious Founder: Sathya Sai Baba". Dialogcentret Article in Update IX 3, September 1985, originally published in German in Materialdienst der EZW, 47 Jahrgang, 1 February 1984. This muddled reference needs converting to cite journal.
  6. Sai Baba: God-man or con man?
  7. Urban, Hugh B. (2003). "Avatar for Our Age: Sathya Sai Baba and the Cultural Contradictions of Late Capitalism". Religion (எல்செவியர்) 33 (1): 82. http://www.elsevier.com/wps/find/journaldescription.cws_home/622940/description#description. பார்த்த நாள்: 2010-01-05. 
  8. Babb, Lawrence A. (1991). Redemptive Encounters: Three Modern Styles in the Hindu Tradition. Biography section available online – see google book search: University of California Press. பக். 164–166. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-520-07636-2. https://archive.org/details/redemptiveencoun0000babb. 
  9. "Sai Baba turns 84". Thestar.com.my. 2009-12-03. 2011-05-21 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2010-01-06 அன்று பார்க்கப்பட்டது.
  10. "The Sai Organization: Numbers to Sai Centers and Names of Countries". Sathyasai.org. 2010-01-06 அன்று பார்க்கப்பட்டது.
  11. Adherents பரணிடப்பட்டது 2020-01-12 at the வந்தவழி இயந்திரம் cites Chryssides, George. Exploring New Religions. London, UK: Cassells (1999) (10 million)
    *Brown, Mick (2000-10-28). "Divine Downfall". Daily Telegraph. http://www.telegraph.co.uk/health/main.jhtml?xml=/health/2000/10/28/tlbaba28.xml பரணிடப்பட்டது 2008-09-25 at the வந்தவழி இயந்திரம். Retrieved 2007-03-12
    *Edwards, Linda (2001). A Brief Guide to Beliefs: Ideas, Theologies, Mysteries, and Movements. Westminster John Knox Press. ISBN 0-664-22259-5.
  12. saibaba.ws/service/orissa_flood_relief
  13. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2014-12-18 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2021-08-16 அன்று பார்க்கப்பட்டது.
  14. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2010-02-17 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2010-01-15 அன்று பார்க்கப்பட்டது.
  15. http://www.sathyasai.org/saihealth/content.htm
  16. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2009-09-16 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2010-01-15 அன்று பார்க்கப்பட்டது.
  17. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2011-04-30 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2010-01-15 அன்று பார்க்கப்பட்டது.
  18. [1]
  19. media.radiosai.org/Journals/Vol.../cover_story_godavari.htm
  20. http://www.youtube.com/watch?v=p41hJWvBRu4
  21. http://www.srisathyasai.org.in/Pages/...Projects/Anantapur.htm[தொடர்பிழந்த இணைப்பு]
  22. http://www.srisathyasai.org.in/Pages/Service_Projects/Chennai.htm பரணிடப்பட்டது 2017-04-14 at the வந்தவழி இயந்திரம் -
  23. http://www.indianexpress.com/news/heart-for-an-atheist-gold-ring-for-believer/21444/
  24. http://www.saidelhi.org/
  25. http://www.srisathyasai.org.in/
  26. 26.0 26.1 "Spiritualism never came in the way of his secular beliefs". 2011-04-29 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2011-04-25 அன்று பார்க்கப்பட்டது.
  27. http://www.sssbpt.org/pages/trust/sanathanasarathi1.htm
  28. http://www.sssbpt.info/
  29. "Religion Obituaries; Satya Sai Baba". The Telegraph. 2011-04-24. http://www.telegraph.co.uk/news/obituaries/religion-obituaries/8471342/Sathya-Sai-Baba.html. பார்த்த நாள்: 2011-04-25. 
  30. http://inioru.com/?p=11193, video link, presented by BBC
  31. "Revered Hindu guru Sathya Sai Baba dies at age 86 - Yahoo". 2011-04-25 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. 2011-04-25 அன்று பார்க்கப்பட்டது.
  32. Sathya Sai Baba: A Pro-Site exposing critic’s smear campaigns against Bhagavan Sri Sathya Sai Baba
  33. அமெரிக்க தூதரகச் செய்தி குறிப்பு
  34. "Religion Obituaries; Satya Sai Baba". The Telegraph. 2011-04-24. http://www.telegraph.co.uk/news/obituaries/religion-obituaries/8471342/Sathya-Sai-Baba.html. பார்த்த நாள்: 2011-04-25. 
  35. "Sai Baba in stable condition: Hospital". இந்துஸ்தான் டைம்ஸ். 2011-04-05. Archived from the original on 2011-05-09. https://web.archive.org/web/20110509014742/http://www.hindustantimes.com/Sai-Baba-in-stable-condition-Hospital/Article1-681433.aspx. பார்த்த நாள்: 2011-04-24. 
  36. "Baba's health condition 'stable'". டைம்ஸ் ஆஃப் இந்தியா. 2011-04-06. http://timesofindia.indiatimes.com/city/hyderabad/Babas-health-condition-stable/articleshow/7880002.cms. பார்த்த நாள்: 2011-04-24. 
  37. "Spiritual leader Sathya Sai Baba passes away". டைம்ஸ் ஆஃப் இந்தியா. 2011-04-24. http://timesofindia.indiatimes.com/india/Spiritual-leader-Sathya-Sai-Baba-passes-away/articleshow/8070443.cms. பார்த்த நாள்: 2011-04-24. 
  38. http://thatstamil.oneindia.in/news/2011/06/01/what-secret-sai-baba-personal-chamber-aid0091.html[தொடர்பிழந்த இணைப்பு] தட்ஸ்தமிழ்
  39. http://thatstamil.oneindia.in/news/2011/06/17/sathya-sai-baba-personal-chamber-opened-aid0091.html[தொடர்பிழந்த இணைப்பு] தட்ஸ்தமிழ்

வெளி இணைப்புக்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சத்திய_சாயி_பாபா&oldid=3671137" இருந்து மீள்விக்கப்பட்டது