சனாதன சாரதி
Appearance
சனாதன சாரதி (sanathana sarathi) என்னும் பத்திரிக்கை, உலகின் பல மொழிகளில் வெளிவரும் ஓர் ஆன்மீக மாத இதழாகும். இது ஏறத்தாழ 25 மொழிகளில் வெளிவருகின்றது. தென்னிந்தியாவின் ஆந்திர மாநிலம்|ஆந்திர மாநிலத்தில் உள்ள பிரசாந்தி நிலையத்தில் இருந்து இவ்விதழ் பல ஆண்டுகளாகத் தொடர்ந்து வெளிவந்துகொண்டுள்ளது. இதனை நிறுவியவர் சத்திய சாயி பாபா தன் கொள்கைகளைப் பரப்ப இவ்விதழ் சரியானதொரு கருவியாய் அவருக்கு விளங்கியது. அவர் இவ்விதழில் தொடர்ந்து எழுதிக்கொண்டுவந்தார்; இப்பொழுதும், அவரின் சொற்பொழிவுகள் பல தொடர்ந்து இவ்விதழில் வெளிவந்துகொண்டிருக்கின்றன. அதுமட்டுமல்லாமல், உலகின் 168 க்கும் மேலான நாடுகளில் நடமாடும் கோயில்களான மனிதர்க்குத் தொண்டுபுரிந்துவரும் அருள்மிகு சத்தியசாயி சேவா நிறுவனத்தின் தொண்டுப்பணிகள் பற்றிய செய்திகளும் வெளிவருவது இவ்விதழின் தனிச்சிறப்பு.