உரவகொண்டா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
உரவகொண்டா
Uravakonda

ఉరవకొండ
கணக்கெடுப்பில் உள்ள ஊர்
நாடுஇந்தியா
மாநிலம்ஆந்திரப் பிரதேசம்
மாவட்டம்அனந்தபூர்
வட்டம் (தாலுகா)கள்உரவகொண்டா
ஏற்றம்459
மக்கள்தொகை (2011)
 • மொத்தம்35,565
மொழிகள்
 • அலுவல்பூர்வம்தெலுங்கு
நேர வலயம்இ.சீ.நே (ஒசநே+5:30)

உரவகொண்டா (Uravakonda) என்பது இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலத்திலுள்ள அனந்தபூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு கணக்கெடுப்பில் உள்ள ஊர் ஆகும். அனந்தபூர் வருவாய் வட்டத்தின் உரவகொண்டா மண்டலத்தில் இந்நகரம் அமைந்துள்ளது. மேலும் இந்நகரம் ஒரு நகரப்பகுதியின் திரட்சியாகவும் வளர்ந்துவருகிறது.[1]

புவியியல் அமைப்பு[தொகு]

14.95° வடக்கு 77.27° கிழக்கு என்ற அடையாள ஆள்கூறுகளில்[2] உரவகொண்டா கிராமம் பரவியுள்ளது. மேலும் கடல்மட்டத்தில் இருந்து சராசரியாக் 459 மீட்டர்கள் உயரத்தில் இந்நகரம் உள்ளது.

மக்கள் தொகையியல்[தொகு]

இந்திய நாட்டின் 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி [3]புக்கராயசமுத்திரத்தின் மக்கள் தொகை 41,865 ஆகும். மொத்த மக்கள் தொகையில் 51% பேர் ஆண்கள் மற்றும் 49% பேர் பெண்கள் ஆவர். உரவகொண்டா நகரத்தின் கல்வியறிவு சதவீதம் 61%. இது நாட்டின் தேசிய கல்வியறிவு சதவீதமான 59.5% என்பதைவிட அதிகமாகும். மொத்த மக்கள் தொகையில் ஆண்களில் 71 சதவீதத்தினர் கல்வியறிவு பெற்றவர்களாகவும் பெண்களில் 50 சதவீதம் பேர் கல்வியறிவு பெற்றவர்களாகவும் உள்ளனர். ஆறுவயதிற்குக் குறைவான சிறுவர்கள் 12% அளவில் உள்ளனர். உரவகொண்டாவுக்கு அருகில் குண்டக்கல் என்ற நகரம் இருக்கிறது.

சாலைப்போக்குவரத்து[தொகு]

52 கிலோமீட்டர் தொலைவிலுள்ள மாவட்டத் தலைநகர் அனந்தபூர் மற்றும் 55 கிலோமீட்டர் தொலைவிலுள்ள கர்நாடகாவைச் சேர்ந்த பெல்லாரி மற்றும் குண்டக்கல் ஆகிய நகரங்களுடன் உரவகொண்டா நன்றாக சாலைப் போக்குவரத்தால் இணைக்கப்பட்டுள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "District Census Handbook - Anantapur" (PDF). பார்த்த நாள் 7 November 2015.
  2. Falling Rain Genomics, Inc - Uravakonda
  3. "Census of India 2001: Data from the 2001 Census, including cities, villages and towns (Provisional)". Census Commission of India. மூல முகவரியிலிருந்து 2004-06-16 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2008-11-01.
"https://ta.wikipedia.org/w/index.php?title=உரவகொண்டா&oldid=2046769" இருந்து மீள்விக்கப்பட்டது