ஐக்கிய நாடுகள் பொருளாதார மற்றும் சமூக சபை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஐக்கிய நாடுகள் பொருளாதார மற்றும் சமூக சபை
United Nations Economic and Social Council.jpg
ஐக்கிய நாடுகள் பொருளாதார மற்றும் சமூக சபை அரங்கம் ஐநா தலைமையகம், நியூயார்க்
வகைமுதன்மை அமைப்பு
சுருக்கப்பெயர்ECOSOC (எகோசொக்)
தலைமைஎகோசொக் தலைவர் (ஆறு மாதங்கள்)

As of 2010: ததூக் அமிடோன் அலி[1]

மலேசியா மலேசியா
நிலைசெயல்பாட்டில்
நிறுவப்பட்டது1945
இணையதளம்www.un.org/ecosoc

ஐக்கிய நாடுகள் பொருளாதார மற்றும் சமூக சபை (ECOSOC) ஐக்கிய நாடுகள் முறைமையின் ஆறு முதன்மை உறுப்புகளில் ஒன்றாகும். ஐநாவின் 14 சிறப்பு முகமைகள், செயலாக்க ஆணயங்கள் மற்றும் அதன் ஐந்து மண்டல அணையங்களின் பொருளாதார சமூக மற்றும் தொடர்பான விதயங்களை ஒருங்கிணைக்கும் பொறுப்புடைய அமைப்பாகும். இந்த சபையில் 54 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளனர். ஆண்டுக்கு ஒருமுறை. சூலையில், நான்கு வாரங்கள் கூடுகிறது. உலக பொருளாதார மற்றும் சமூக பிரச்சினைகளை விவாதித்து உறுப்பு நாடுகளுக்கும் ஐநா அமைப்பிலுள்ள முகமைகளுக்கும் ஓர் செயலாக்கத் திட்டத்தை வகுப்பது இதன் நோக்கமாகும்.[2] 1998 முதல் ஏப்ரல் மாதத்தில் உலக வங்கி மற்றும் ஐஎம்எஃப் .முக்கியக் குழுக்களின் தலைமையேற்கும் நிதி அமைச்சர்கள் இங்கு கூடுகிறார்கள்.

மேற்கோள்கள்[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]