ஐக்கிய நாடுகள் நைரோபி அலுவலகம்
ஐக்கிய நாடுகள் நைரோபி அலுவலகம் (United Nations Office at Nairobi, UNON) ஐநாவின் நான்கு முதன்மை அலுவலக வளாகங்களில் ஒன்றாகும். கென்யாவின் நைரோபியில் அமைந்துள்ள இவ்வளாகத்தில் பல்வேறு ஐநா அமைப்புகளும் முகமைகளும் அலுவலகங்களைக் கொண்டுள்ளன. இங்கு ஐக்கிய நாடுகள் சூழல் திட்டம், UN-HABITAT திட்டங்களின் தலைமையகம் அமைந்துள்ளன.
இந்த வளாகம் கரூரா வனத்தை அடுத்து ஐக்கிய நாடுகள் நிழற்சாலையில் நைரோபியின் அமெரிக்க தூதரகத்திற்கு எதிராக அமைந்துள்ளது.
2004ஆம் ஆண்டின் நவம்பரில் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு அவை தெற்கு மற்றும் மேற்கு சூடான் குறித்து விவாதிக்க மிக அரிதாக தனது அமர்வை இங்கு நடத்தியது.[1] இந்த அமர்வு அப்போதைய அமெரிக்கத் தூதர் ஜான் டான்போர்த்தின் வற்புறுத்தலால் நடந்தது[2]
பங்கேற்கும் முகமைகள்[தொகு]
நைரோபியை தலைமையகமாகக் கொண்டவை:
- ஐக்கிய நாடுகள் சூழல் திட்டம்
- ஐக்கிய நாடுகளின் குடிசார் அமைப்பு
- கிழக்கு ஆபிரிக்கா மாதிரி ஐக்கிய நாடுகள் மாநாடு
நைரோபியில் உள்ளவை:
- ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு
- பன்னாட்டு குடிமை வான்பயண நிறுவனம்
- பன்னாட்டு தொழிலாளர் அமைப்பு
- பன்னாட்டு கடல்சார் அமைப்பு
- பன்னாட்டு நாணய நிதியம்
- கூட்டு ஐக்கிய நாடுகள் எச்ஐவி/ எய்ட்சு திட்டம்
- ஐக்கிய நாடுகள் மண்டல மேம்பாட்டு மையம், ஆபிரிக்க அலுவலகம்
- ஐக்கிய நாடுகள் மகளிர் மேம்பாடு நிதியம்
- ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டம்
- ஐக்கிய நாடுகள் மருந்துக் கட்டுப்பாடு திட்டம்
- ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம்
- அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் ஆணையம்
- ஐக்கிய நாடுகள் தொழில் மேம்பாடு நிறுவனம்
- ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம்
- ஐக்கிய நாடுகள் பொது வான் சேவைகள்
- மனிதநேய விவகாரங்களுக்கான ஐக்கிய நாடுகளின் அலுவலகம்
- திட்டப்பணிகளுக்கான ஐக்கிய நாடுகள் அலுவலகம்
- சோமாலியாவிற்கான ஐக்கிய நாடுகள் அரசியல் அலுவலகம்
- ஐக்கிய நாடுகள் மக்கள்தொகை நிதியம்
- உலக வங்கி
- உலக உணவுத் திட்டம்
- உலக சுகாதார அமைப்பு
இதனையும் காண்க[தொகு]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ [1]
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2004-11-19 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. 2004-11-19 அன்று பார்க்கப்பட்டது.