ஐக்கிய நாடுகளின் தன்னார்வலர்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஐக்கிய நாடுகளின் தன்னார்வலர்கள் இலச்சினை

ஐக்கிய நாடுகளின் தன்னார்வலர்கள் ஐக்கிய நாடுகளின் அமைப்பாகும் இது உலகாவிய தன்னார்வலர்களை ஐக்கிய நாடுகளின் பங்காளர்களுக்கு உதவும் வண்ணம் உருவாக்கப்பட்ட அமைப்பாகும். ஐக்கிய நாடுகளின் தன்னார்வலர் திட்டமானது ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டத்தினால் நிர்வாகிக்கப் படுகின்றது. இதன் தலைமை அலுவலகமானது பான், ஜேர்மனியில் அமைந்துள்ளதுடன் ஏனைய நாடுகளில் ஐக்கிய நாடுகள் விருத்தித் திட்டத் நாட்டு அலுவலகத்திற்கூடாக (country offices) செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றது.

ஐக்கிய நாடுகளின் தன்னார்வலர்கள் ஐக்கிய நாடுகள் பொதுச்சபையினால் 1970 இல் உருவாக்கப்பட்டதாகும். தன்னார்வலர்களை வளர்ச்சியடைந்த மற்றும் வளர்ச்சியடைந்துவரும் நாடுகளில் இருந்து சேர்த்துக்கொள்கின்றார்களெனினும் தற்போது 70% ஆனவர்கள் வளர்சியடைந்த நாடுகளையே சேர்ந்தவர்கள். ஐக்கிய நாடுகளின் தன்னார்வலர்கள் அடிக்கடி அடையாளம் காணப்பட்டு, நேர்காணப்பட்டு, ஐக்கிய நாடுகளுடன் கூட்டியங்கும் ஒரு அமைப்பால் திட்டங்கள் பற்றி விளக்கப்படும்.

1971 இல் இருந்து 30, 000 இற்கும் மேற்பட்ட ஐக்கிய நாடுகளின் தன்னார்வலர்கள் 140 நாடுகளில் பல்வேறுபட்ட திட்டங்களில் பயனபடுத்தப்பட்டனர்.

வெளியிணைப்புக்கள்[தொகு]