ஐக்கிய நாடுகள் பொதுச் சபை பார்வையாளர்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ஐக்கிய நாடுகள் பொதுச்சபை பார்வையாளர்கள் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search

ஐக்கிய நாடுகள் பொதுச்சபை பார்வையாளர்கள் தற்போதைய ஐக்கிய நாடுகள் உறுப்பினர்களாக உள்ள 192 நாடுகளைத் தவிர்த்து வரவேற்கப்படும் பன்னாட்டு அமைப்புகளும் உறுப்பினரல்லா நாடுகளும் ஆவர். பார்வையாளர் தகுதியை ஐ.நா பொதுச்சபை தனது தீர்மானம் மூலமாக வழங்கும். நிரந்தர பார்வையாளருக்கான தகுதி குறித்து ஐ.நா பட்டயத்தில் குறிப்பிடப்படாவிடினும் வழமையை ஒட்டியே கடைபிடிக்கப்படுகிறது.[1]

ஐக்கிய நாடுகள் பொதுச் சபை கூட்டங்களில் பேசவும் செய்முறை தொடர்பான வாக்கெடுப்புகளில் கலந்துகொள்ளவும் தீர்மானங்களை கொணரவும் கையொப்பமிடவும் உரிமை கொண்டவர்கள்; ஆயினும் தனது தீர்மானங்களில் மற்றும் நிலையான கருத்துகளிலும் வாக்களிக்க இயலாது. மேலும் சில உரிமைகள் (காட்டாக, விவாதங்களில் பங்கேற்பு, வரைவுகளையும் திருத்தங்களையும் கொணர்தல், பதிலளித்தல், ஒழுங்குப் பிரச்சினைகளை எழுப்புதல், ஆவணங்களை சுற்றுக்கு விடல் போன்றவை) சில தேர்ந்த உறுப்பினர்களுக்கு மட்டுமே அளிக்கப்படுகின்றன. இதுவரை, ஐரோப்பிய ஒன்றியம் மட்டுமே இத்தகைய கூடுதல் உரிமைகளைக் கொண்டுள்ளது.</ref>[2]

நாட்டுப் பார்வையாளர்களுக்கும் நாடில்லா பார்வையாளர்களுக்கும் வேறுபாடுகள் உள்ளன. உறுப்பினரல்லா நாடுகள் ஒன்று அதற்கு மேற்பட்ட ஐ.நா சிறப்பு முகமைகளில் பங்கு பெற்றிருந்தால் நிரந்தர பார்வையாளராவதற்கு விண்ணப்பிக்க இயலும்.[1] நாடில்லா பார்வையாளர்கள் பன்னாட்டு அமைப்புகளும் இன்ன பிறவுமாகும்.

உறுப்பினரல்லா பார்வையாளர்கள் ஐக்கிய நாடுகள் பொதுச் சபை அரங்கத்தில் உறுப்பினர் நாடுகளுக்கு அடுத்தும் பிற பார்வையாளர்களுக்கு முன்பும் அமர்த்தப்படுவர்.[3]

உறுப்பினர்நிலை இல்லா, பார்வையாளர் நாடுகள்[தொகு]

ஐ.நா. அவையின் ஒழுங்குகளின்படி, உறுப்பினர் நிலை இல்லா, பார்வையாளர் நாடுகள் (Non-member observer states) இறையாண்மை கொண்ட நாடுகளாக ஏற்கப்படுகின்றன. அவை, தமது சொந்த முடிவுக்கு ஏற்ப, உரிய காலத்தில் ஐ.நா. உறுப்பினர் நிலை பெறுவதற்கு விண்ணப்பிக்கும் உரிமை பெறுகின்றன.

எடுத்துக்காட்டாக, சுவிட்சர்லாந்து நாடு 1948இலிருந்து 2002 வரை "பார்வையாளர்" நிலை கொண்டிருந்தது. 2002, செப்டம்பர் 10ஆம் நாள் முழுநிலை உறுப்பினராக ஏற்கப்பட்டது.

தற்சமயம் உறுப்பினர் நிலை இல்லா, பார்வையாளர் நாடுகளாக இரு நாடுகளே உள்ளன. அவை வத்திக்கான் நகர் மற்றும் பாலத்தீன நாடு ஆகும். வத்திக்கான் நாடு, "உறுப்பினர் நிலை இல்லா பார்வையாளர் நாடாக உள்ளது. ஐ.நா. பொது அவையின் அமர்வுகளிலும் செயல்பாடுகளிலும் பார்வையாளராகக் கலந்துகொள்ள நிலையான அழைப்புப் பெற்றுள்ளது. ஐ.நா. தலைமையகத்தில் நிலையான பார்வையாளர் தூதரகம் நிறுவிச் செயல்பட உரிமை கொண்டுள்ளது.[4]

உறுப்பினர் நிலை இல்லா நாடு பார்வையாளர் நிலை வழங்கப்பட்ட நாள்
 திரு ஆட்சிப்பீடம் (வத்திக்கான் நகர்-நாட்டின்மீது இறையாண்மை) ஏப்பிரல் 6, 1964: நிலையான பார்வையாளர் நிலை பெற்றது
July 1, 2004 (A/RES/58/314)[3]: வாக்கு அளிப்பது, மற்றும் வேட்பாளர்களை நிறுத்துவது தவிர மற்றெல்லாச் செயல்பாடுகளிலும் முழு உறுப்பினர் உரிமை பெற்றது
 பலத்தீன் (பாலத்தீன நாடு) நவம்பர் 29, 2012 (ஐ.நா. பொதுப்பேரவைத் தீர்மானம் 67/19 - A/RES/67/19): நிலையான பார்வையாளர் நிலை பெற்றது

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 United Nations - About Permenant Observers
  2. Phillips, Leigh (3 May 2011) [hhttp://euobserver.com/9/32262EU wins new powers at UN, transforming global body], EU Observer
  3. 3.0 3.1 ஐக்கிய நாடுகள் General Assembly Resolution 314 session 58 (retrieved 2010-09-21)
  4. UN site on Permanent Missions

வெளியிணைப்புகள்[தொகு]