ஐக்கிய நாடுகள் வியன்னா அலுவலகம்
Jump to navigation
Jump to search

வியன்னா பன்னாட்டு மையம் என்றழைக்கப்படும் வியன்னா, ஆத்திரியாவில் உள்ள ஐக்கிய நாடுகளின் அலுவலகம்
ஐக்கிய நாடுகள் வியன்னா அலுவலகம் (United Nations Office in Vienna, UNOV) ஐக்கிய நாடுகள் அமைப்பின் பல்வேறு முகமைகள் ஒருங்கே அமைவிடம் கொண்டுள்ள நான்கு கட்டிட வளாகங்களில் ஒன்றாகும். இது ஆஸ்திரியாவின் தலைநகர் வியன்னாவில் வியன்னா பன்னாட்டு மையத்தில் அமைந்துள்ளது. சனவரி 1, 1980ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இந்த அலுவலக வளாகம் ஐநாவின் இத்தகைய அலுவலகங்களில் மூன்றாவது ஆகும்.
அங்கம் வகிக்கும் முகமைகள்[தொகு]
வியன்னாவைத் தலைநகராகக் கொண்டவை:
- பன்னாட்டு அணுசக்தி முகமையகம் (தனது நிலை குறித்த சிறப்பு ஒப்பந்தம் கொண்டுள்ளது)
- பன்னாட்டு பணச் சலவை தகவல் பிணையம்
- பன்னாட்டு போதைப்பொருள் கட்டுப்பாடு வாரியம்
- முழுமையான அணுகுண்டு சோதனைத் தடை உடன்பாடு அமைப்பிற்கான முன்னேற்பாடான ஆணையம்
- ஐக்கிய நாடுகள் பன்னாட்டு வணிகச் சட்டத்திற்கான ஆணையம்
- ஐக்கிய நாடுகள் தொழில் மேம்பாடு நிறுவனம்
- விண்வெளி விவகாரங்களுக்கான ஐக்கிய நாடுகள் அலுவலகம்
- ஐக்கிய நாடுகள் போதைமருந்துகள் மற்றும் குற்றங்கள் அலுவலகம்
வியன்னாவில் கிளைகளைக் கொண்டவை:
- டான்யூப் ஆறு பாதுகாப்பிற்கான பன்னாட்டு ஆணையம்
- அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் ஆணையம்
- ஐக்கிய நாடுகள் தகவல் சேவை
- திட்டப்பணிகளுக்கான ஐக்கிய நாடுகளின் அலுவலகம்
- ஐக்கிய நாடுகளின் உள் மேற்பார்வை சேவைகளின் புலனாய்வு கோட்டம்
- ஐக்கிய நாடுகளின் அஞ்சல் நிர்வாகம்
- அணுக் கதிர்வீச்சு தாக்கம் குறித்தான ஐக்கிய நாடுகள் அறிவியல் குழு
மேலும் பார்க்க[தொகு]
வெளியிணைப்புகள்[தொகு]
ஆள்கூறுகள்: 48°14′5″N 16°25′1″E / 48.23472°N 16.41694°E