உள்ளடக்கத்துக்குச் செல்

பாலியல் முறைகேடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பாலியல் முறைகேடு (Sexual abuse) என்பது பாலியல் துன்புறுத்தல் என்றும் அழைக்கப்படுகிறது. இம் முறைகேடு ஒருவரின் தவறான பாலியல் நடத்தையை மற்றவர்களின் மீது செயல்படுத்துவதாகும்.[1] இம்முறைகேடு, வற்புறுத்தலாலும், மற்றவரைப் சாதகமாக்கியும் செயல்படுத்துவதாகும். பாலியல் முறைகேடு விரைவாகவும் குறுகிய காலத்தில் நடைபெறுகிறது. பாலியியல் முறைகேடு செய்பவர் அல்லது துன்புறுத்துபவர் எனவும், குற்றவாளி எனவும் அடையாளப் படுத்தப்படுகிறது.[2] பாலியல் முறைகேடு என்னும் சொல் குழந்தை அல்லது வயது வந்த இளம் பருவத்தினரிடம் பாலியல் சம்பந்தப்பட்ட தூண்டுதலையும், நடத்தையையும் குறிக்கும். ஒரு குழந்தை அல்லது பாலுறவுச் சம்மத வயது குறைவான நபர்களைப் பயன்படுத்துவது, குழந்தைகளுடனான பாலுறவு எனப்படும். இது சட்டரீதியாக கற்பழிப்பு எனக் குறிப்பிடப்படுகிறது.

முறைகேடுகள்[தொகு]

கணவர்கள்[தொகு]

திருமண பாலியல் முறைகேடு என்பது வீட்டில் நடக்கும் வன்முறையின் ஒரு வடிவமாகும். ஒரு பெண்ணின் கணவர் அல்லது முன்னாள் கணவரால் தேவையற்ற பாலியல் தொல்லைகள் அல்லது கட்டாய பாலியல் அச்சுறுத்தல்களை உள்ளடக்கியதாகும். இவ் முறைகேடு அதிகார வரம்பைப் பொறுத்து பாலியல் பலாத்காரமாகவோ அல்லது தாக்குதலாகவோ இருக்கலாம்.[3]

குழந்தைகள்[தொகு]

சிறுவர் பாலியல் முறைகேடு என்பது, சிறுவர் வன்முறையின் ஒரு வடிவமாகும்.[4][5] வயதுவந்தோர் அல்லது வயதான இளம் பருவத்தினர் பாலியல் திருப்திக்காக ஒரு குழந்தையை வன்முறைக்கு உட்படுத்துவதாகும். இதில் நேரடி பாலியல் தொடர்புக்கு வயதுவந்தோர் அல்லது வயதானவர்கள் தங்கள் சொந்த பாலியல் ஆசைகளைப் பூர்த்தி செய்யும் நோக்கத்துடன் செயல்படுவதாகும். இதில் குழந்தையை மிரட்டுவது, திருமணம் செய்வது அல்லது அழுத்தம் கொடுப்பது போன்ற நோக்கத்துடன் செயல்படுவதாகும். மேலும், குழந்தைகளின் பிறப்புறுப்புகள், பெண் குழந்தைகளின் முலைக்காம்புகள் போன்றவைகளை, முறைகேடான செயல்களில் பயன்படுத்துவது போன்றவையாகும். குழந்தைக்கு ஆபாசக் காட்சிகளைக் காண்பித்தல், அல்லது குழந்தையைப் பயன்படுத்தி சிறுவர் ஆபாசங்களைத் தயாரித்தல் போன்ற செயல்களும், இக்கொடுமைகளாகும்.[4][6][7]

ஒரு குடும்ப உறுப்பினரால் பாலியல் முறைகேடு என்பது ஒரு வகையான தகாப் பாலுறவு ஆகும். இந்த தகாப் பாலுறவு தீவிரமான மற்றும் நீண்டகால உளவியல் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. இதனால் பெற்றோர்களும் பாதிக்கப் படுகிறார்கள்.[8]

ஆய்வுகளின் படி, உலகளவில் ஏறத்தாழ 18–19% பெண்கள் மற்றும் 8% ஆண்கள் குழந்தைகளாக இருந்த போது, பாலியல் முறைகேட்டிற்கு ஆளானதாகக் கண்டறிந்துள்ளனர்.[9][10] பாதிக்கப் பட்டவர்களில் பாலின வகையில் சிறுமிகள் அதிகமாகவும் ஆண்கள் குறைவாகவும் உள்ளனர்.[9] பெரும்பாலான பாலியல் முறைகேடுக் குற்றவாளிகள் அனைவரும், பாதிக்கப்பட்டவர்களுடன் அறிமுகமானவர்களே ஆவர். இதில் 30% குழந்தைகள், குடும்ப உறவினர்களான தந்தை, மாமாக்கள் போன்றவர்களால் பாதிக்கப் பட்டவர்களாகும். மேலும் 60% பாலியல் குற்றவாளிகள், குடும்ப நண்பர்களாகவோ, குழந்தை காப்பகங்களில் உள்ளவர்களாகவோ, அண்டை அயலார் போன்ற பிற அறிமுகமானவர்களாகவே இருக்கின்றனர். சிறுவர் பாலியல் முறைகேடு வழக்குகளில் சுமார் 10% மட்டுமே குடும்ப உறவினர்களாகவோ அல்லது குடும்ப நண்பர்களாகவோ இல்லாத அந்நிய குற்றவாளிகளாவர். பெரும்பாலான சிறுவர் பாலியல் வன்முறைக்கு காரணமானவர்கள், ஆண்களே எனக் கண்டறியப்பட்டுள்ளது. பெண்களில் சுமார் 14% சிறுவர்களுக்கு எதிராகவும், சிறுமிகளுக்கு 6% எதிராகவும், குற்றங்களைச் செய்கிறார்கள்.[11]

சிறுவர் பாலியல் முறைகேட்டின் விளைவுகளாக, அவமானம், சுய-குற்றவுணர்வு,[12] மனச்சோர்வு, பதட்டம், அதிர்ச்சிக்குப் பிறகான மன அழுத்தப் பாதிப்பு, சுயமரியாதைப் பிரச்சினைகள், பாலியல் செயலிழப்பு, நாள்பட்ட இடுப்பு வலி, தற்கொலை எண்ணம், ஆளுமைக் கோளாறுகளின் தொடக்கம் மற்றும் இளமைப் பருவத்தில் பழிவாங்கப்படுவதற்கான நினைப்புகள் போன்றவைகள், அச்சிறுவர்களின் மனதில் தோன்றுகின்றன.

மேற்கோள்கள்[தொகு]

 1. "Sexual abuse". American Psychological Association. 2018 American Psychological Association. பார்க்கப்பட்ட நாள் 28 January 2018.
 2. "Peer commentaries on Green (2002) and Schmidt (2002)". Archives of Sexual Behavior 31 (6): 479–503. 2002. doi:10.1023/A:1020603214218. https://archive.org/details/sim_archives-of-sexual-behavior_2002-12_31_6/page/479. "Child molester is a pejorative term applied to both the pedophile and incest offender.". 
 3. Patricia, Mahoney. "The Wife Rape Fact Sheet". National Violence Against Women Prevention Research Center. National Violence Against Women Prevention Research Center. பார்க்கப்பட்ட நாள் 28 January 2018.
 4. 4.0 4.1 "Child Sexual Abuse". Medline Plus. U.S. National Library of Medicine. 2008-04-02.
 5. American Psychological Association; Board of Professional Affairs (BPA); American Psychological Association (APA); Catherine Acuff; Steven Bisbing; Michael Gottlieb; Lisa Grossman; Jody Porter et al. (August 1999). "Guidelines for Psychological Evaluations in Child Protection Matters". American Psychologist 54 (8): 586–593. doi:10.1037/0003-066X.54.8.586. பப்மெட்:10453704. http://www.apa.org/practice/childprotection.html. பார்த்த நாள்: 2008-05-07 (2008-05-07). "Abuse, sexual (child): generally defined as contacts between a child and an adult or other person significantly older or in a position of power or control over the child, where the child is being used for sexual stimulation of the adult or other person.". 
 6. Martin, J.; Anderson, J.; Romans, S.; Mullen, P; O'Shea, M (1993). "Asking about child sexual abuse: methodological implications of a two-stage survey". Child Abuse and Neglect 17 (3): 383–392. doi:10.1016/0145-2134(93)90061-9. பப்மெட்:8330225. 
 7. Child sexual abuse definition from the NSPCC
 8. Courtois, Christine A. (1988). Healing the Incest Wound: Adult Survivors in Therapy. W. W. Norton & Company. p. 208. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-393-31356-7.
 9. 9.0 9.1 Stoltenborgh, M.; van IJzendoorn, M. H.; Euser, E. M.; Bakermans-Kranenburg, M. J. (2011). "A global perspective on child sexual abuse: meta-analysis of prevalence around the world". Child Maltreatment 16 (2): 79–101. doi:10.1177/1077559511403920. பப்மெட்:21511741. 
 10. Pereda, N.; Guilera, G.; Forns, M.; Gómez-Benito, J. (2009). "The prevalence of child sexual abuse in community and student samples: A meta-analysis". Clinical Psychology Review 29 (4): 328–338. doi:10.1016/j.cpr.2009.02.007. பப்மெட்:19371992. https://archive.org/details/sim_clinical-psychology-review_2009-06_29_4/page/328. 
 11. Whealin, Julia Whealin (2007-05-22). "Child Sexual Abuse". National Center for Post Traumatic Stress Disorder, US Department of Veterans Affairs. Archived from the original on 2009-07-30.
 12. Whiffen, V. E.; MacIntosh, H. B. (2005). "Mediators of the link between childhood sexual abuse and emotional distress: a critical review". Trauma, Violence, & Abuse 6 (1): 24–39. doi:10.1177/1524838004272543. பப்மெட்:15574671. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாலியல்_முறைகேடு&oldid=3520524" இலிருந்து மீள்விக்கப்பட்டது