சீரடி சாயி பாபா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
சீரடி சாயி பாபா
இந்தியா
20ஆம் நூற்றாண்டு
Baba stone.jpg
சாயி பாபா, சீரடி
முழுப் பெயர் சீரடி சாய் பாபா
சிந்தனை
மரபு(கள்)
இந்து சமயம் (அத்வைதம்) மற்றும் இசுலாம் (சூபிசம்)

சீரடி சாய்பாபா (Shirdi Sai Baba, செப்டம்பர் 28, 1838[சான்று தேவை] – அக்டோபர் 15, 1918), (மராட்டி: शिर्डीचे श्री साईबाबा,உருது: شردی سائیں بابا), மகாராட்டிரத்தில் அகமது நகர் மாவட்டத்தில் சீரடியில் வசித்திருந்த ஓர் இந்திய குரு, யோகி மற்றும் சுஃபி துறவி. இவரை இந்துக்களும் இசுலாமியரும் புனித சாமியாராக போற்றுகின்றனர். இந்துக்கள் இவரை கடவுள் தத்தாத்திரேயரின் அவதாரமாகக் கருதுகின்றனர். இசுலாமியர் பிர் (உருது: پیر) அல்லது குதுப் ஆக நம்புகின்றனர். சீரடியில் இவர் சமாதி அடைந்த இடம் தற்போது பல்லாயிரக்கணக்கானவர் தொழும் புண்ணியத் தலமாக விளங்குகிறது.

அறிதிலும் அறிதான மானிடப் பிறவி அடைந்தவர் மட்டுமே இறைவனோடு இரண்டறக் கலக்க முடியும். மக்கள், பிறவி நோக்கத்தை மறந்து முக்தி எனும் உண்மை நெறியில் இருந்து வழி தவறிப் போகும் போது ஞானிகள் தோன்றுகிறார்கள். மக்களை முறைப்படுத்தி, முக்தி வழி செல்ல உத்வுகிறார்கள். இப்படி தோன்றிய அவதார புருஷர்களில் அற்புதமானவர்தான் ஷிர்டி சாயிபாபா.


பாபாவின் ஷிர்டி வருகையும் பெயர்காரணமும்:

மகாராஷ்டிர மாநிலத்தில் அகமத் நகர் மாவட்டத்தில் ஒரு சிறிய கிராமம் ஷிர்டி. 1854 ஆம் ஆண்டில் ஒரு நாள்... அழகும், சுறுசுறுப்பும் நிறைந்த பதினாறு வயது இளைஞன் ஒருவன், ஷீர்டியில் வேப்ப மரம் ஒன்றின் அடியில் கடினமான யோகாசன நிலையில அமர்ந்திருந்ததைக் கண்ட கிராம மக்கள் வியப்பு அடைந்தனர், அவன் யார் என்பதும் புரியாத புதிராக இருந்தது, கேட்டாலும் மெளனம் சாதித்தான்.

ஷீர்டியில் இருக்கும் சிவன் கோயிலில் "கண்டோபா" கடவுள் ஒருநாள் ஒரு பக்தனின் மீது "சாமி" யாக வெளிப்பட்டார். மக்கள் புடைசூழ, வேப்ப மரத்தடிக்கு வந்து சேர்ந்தார் அந்தச் "சாமி".

"சாமி" வந்த பக்தனிடம் மக்கள் "கண்டோபா கடவுளே" இந்த இளைஞன் யார்? எங்கிருந்து வந்தான்? இவன் பெற்றோர் யார்? என்று ஆர்வத்துடன் கேட்டனர்,

கண்டோபா சாமி வந்த பக்தர், இளைஞன் அமர்ந்திருந் இடத்துக்கு அருகில் நிலத்தில் தோண்டச் சொன்னார், மக்களும் தோண்டினர்,

சில அடிகள் தோண்டிய பிறகு, சில செங்கற்கள் காணப்பட்டன, அவற்றுக்கு அடியில் ஒரு கதவு தெரிந்தது, அதை திறந்தார்கள். படிகள் தெரிந்தன. கீழே அமைக்கப்பட்டிருந்த ஒரு நிலவறைக்கு அழைத்துச் சென்றார். அங்கே மரப் பலகைகள் ஜப மாலைகள் ஆகியவை இருந்தன.

கண்டோபா சாமி "இளைஞன் இங்கு பன்னிரண்டு ஆண்டுகள் பயிற்சி செய்தான்" என்று தெரிவித்தார். உடனே மக்கள் இளைஞனைச் சூழ்ந்து கொண்டு கேள்விகளால் அவனைத் துளைத்தெடுத்தனர்.

அந்த நிலவறையில் தான் பன்னிரண்டு ஆண்டுகள் பயிற்சி செய்தது பற்றி எதுவும் கூறாமல் அது தன் குரு இருந்த இடம் என்று கூறினான். அவர் சமாதியடைந்தது அந்த இடத்தில் தான் என்றும், அந்தப் புனிதமான இடத்தைப் பாதுகாக்க வேண்டும் என்றும் கூறினான். மறுநாள் மரத்தடியில் இளைஞனைக் காணவில்லை.

சில ஆண்டுகள் கடந்தது.. ஒளரங்காபாத் மாவட்டத்தைச் சேர்ந்த "தூப்" என்ற கிராமத்தில் சாந்த் பாடீல் என்ற செல்வந்தர் ஒருவர் இருந்தார், அவர தனது தொலைந்த குதிரையை இரண்டு மாதங்களாக தேடிக்கொண்டிருந்தார், தேடிக்காணாமல் சோர்ந்து போன சாந்த் பாடீல் ஏமாற்றத்துடன் ஒளரங்காபாதில் இருந்து திரும்பி வந்து கொண்டிருந்தார். ஓய்வெடுப்பதற்காக வழியில் இருந்த ஒரு மாமரத்தடியை நோக்கிச் சென்றார், மரத்தடியில் விசித்திரமான தோற்றம் கொண்ட ஒரு மனிதர் அமர்ந்திருந்தார்.

அவர் கஃப்னி (நீண்ட அங்கி) உடுத்தி இருந்தார். கையில் ஸட்கா (குட்டையான பருமனான தடி) இருந்தது. புகை பிடிப்பதற்காக ஹூக்காவைத் தயார் செய்து கொண்டிருந்தார் அவர்,

சாந்த் பாடீலை அன்புடன் வரவேற்ற அவரிடம் தொலைந்து போன குதிரை பற்றி அவரிடம் கூறினார்.

அதைகேட்ட அந்த மனிதரின் முகத்தில் புன்முறுவல் தோன்றியது, சற்று தூரத்தில் தெரிந்த ஒரு சோலையைக் காட்டினார். அங்கு சென்று குதிரையை தேடிப்பார்க்க சொன்னார். அந்த சோலையில் காணாமல் போன குதிரை கிடைத்ததும், பக்கிரிபோல் தோற்றமளித்த அந்த மனிதர் பரமஞானி என்பதைப் புரிந்து கொண்டார் சாந்த் பாடீல்.

சாந்த் பாடீல் வேண்டுகோளின்படி, பக்கிரி அவருடைய வீட்டில் சில நாட்கள் தங்கியிருந்தார், விசித்திர மனிதர் வந்த வேளை வீட்டில் மங்கல மண நிகழ்ச்சிக்கான ஏற்பாடுக் நடக்கத் தொடங்கின. சாந்த் பாடீலின் மைத்துனர் மகனுக்குத் திருமணம் செய்யத் தீர்மானிக்கப்பட்டது. மணமகள் ஷீர்டியைச் சேர்ந்தவள். எனவே, சாந்த் பாடீல் உறவினர்களுடன் ஷீர்டிக்குப் புறப்பட்டார் அவருடன் அந்த விசித்திர மனிதரும் புறப்பட்டார்.

கல்யாண கும்பல் ஷீர்டியை அடைந்தது. கண்டோபா கோயிலுக்கு அருகில் இருந்த ஓர் ஆலமரத்தடியில் அவர்கள் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார்கள்.

கண்டோபா கோயில் பூசாரியான மஹல்சாபதி என்பவர் ஆலமரத்தடியில் இருந்த இளம் பக்கிரியைக் கண்டார். "யா சாயி" என்று மகிழ்ச்சியும், அன்பும் பொங்க உரக்கக் கூவினார். அந்த வார்த்தைகளுக்கு "சாயி, வருக" என்று பொருள்.

சாயி என்ற பாரசீகச் சொல்லுக்கு துறவி என்று பொருள். மக்கள் "சாயி" என்ற சொல்லுடன் 'பாபா' என்னும் சொல்லையும் இணைத்து அவரை 'சாயி பாபா' என்று அன்புடன் அழைக்கத் தொடங்கினர், 'பாபா' என்னும் இந்திச் சொல்லுக் 'தந்தை' என்று பொருள். அன்று முதல் அந்த விசித்திர மனிதருக்கு 'சாயிபாபா' என்ற திருப்பெயர் நிலைத்துவிட்டது.

ஷீர்டியில் சில ஆண்டுகளுக்கு முன் வேப்ப மரத்தடியில் யோகாசன நிலையில் காட்சி தந்து விட்டுக் காணாமல் போன இளைஞர் அவரேதான்.


ஷீர்டி சாயிபாபா அவருடைய பக்தர்களுக்காக அளித்த பதினோரு உபதேச மொழிகள்:


1. ஷீர்டி தலத்தை எவன் மிதிக்கிறானோ. அவனுடைய துன்பம் ஒரு முடிவை அடைந்து செளகரியத்தை அடைகிறான்.

2. துவாரகாமாயியை அடைந்த மாத்திரத்தில் பெரும் துன்பத்திற்கு உள்ளானவர்களும் மிகுதியான சாந்தோஷத்தை அடைவார்கள்,

3. இவ்வுலகை விட்ட பிறகும் சர்வ சக்தியுடன் வேலை செய்வேன்.

4. என்னுடைய மசூதி என் பக்தர்களுக்கு அனேக ஆசிர்வாதங்களையும் புத்திமதிகளையும் கொடுக்கும்.

5. என்னுடைய பூத உடல் என் மசூதியிலிருந்து பேசும்.

6. என்னுடைய மசூதியில் இருந்துகொண்டே நான் மிகவும் சுறுசுறுப்பாகவும் தீவிரமாகவும் இருப்பேன்.

7. என்னிடம் வருபவர்களுக்கும் என்னை தஞ்சம் அடைபவர்களுக்கும் என் உபதேசத்திற்காக என்னிடம் தீவிர நம்பிக்கை உள்ளவர்களுக்கும் நான் எப்பொழுதும் உயிருடன் இருக்கிறேன்.

8. நீ என்னை அடைந்தால் நான் உன்னை கடாக்க்ஷிக்கிறேன்.

9. நீ என்பேரில் உன் பளுவை சுமத்தினால் நான் நிச்சயமாக அதைத் தாங்குவேன்.

10. நீ என் உபதேசத்திற்காகவும் உதவிக்காகவும் என்னை அடைந்தால் அவற்றை உடனே நான் உனக்குக் கொடுப்பேன்.

11. என்னுடைய பக்தர்களுடைய வீட்டில் ஒருபோதும் தேவை என்பதே இருக்காது,


வெளியிணைப்புகள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=சீரடி_சாயி_பாபா&oldid=1638053" இருந்து மீள்விக்கப்பட்டது