உவமை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

உவமை (parable) என்பது ஒரு வாக்கியத்தில் வரும் ஒரு விடயத்தை மறைமுகமாக விளக்குதலுக்கு உதவுகிறது. ஒரு சிறப்பிக்கப்படும் பொருளை விளக்குவதற்காகவோ அழகுபடுத்துவதற்காகவோ பயன்படுத்துவர்.

எடுத்துக்காட்டாக மலர் போன்ற முகம் என்பதில் "மலர்" என்பது சிறப்புப் பொருள் - உவமானம். "முகம்" என்பது உவமானத்தால் சிறப்பிக்கப்படும் பொருள் உவமேயம்.

உவமைகள் பட்டியல்[தொகு]

 • அச்சாணியற்ற தேர் போல - உயிர் நாடியற்றது.
 • அத்தி பூத்தது போல - மிக அரிதாக
 • ஆண்டிகள் மடம் கட்டியது போல - உருவாகாத திட்டம்
 • ஆற்றில் கரைத்த புளி போல - பயனற்ற செயல்
 • கீரியும் பாம்பும் போல - பகை
 • உயிரும் உடம்பும் போல - ஒற்றுமை
 • கரடி பிறை கண்டது போல - மிக அரிது
 • உள்ளீடற்ற புதர் போல - போலி
 • அடியற்ற மரம் போல - மூலபலமற்றது.
 • கடன்பட்டார் நெஞ்சம் போல - மிகுதியான துன்பம்
 • கண்ணுக்கு இமை போல - பாதுகாப்பு
 • குரங்கின் கை பூமாலை போல - வீணடித்தல்
 • எலியும் பூனையும் போல -பகை உணர்வு
 • சிங்கத்தின் காதில் புகுந்த சிற்றெறும்பு போல - தொடர் மன உளைச்சல்
 • சூரியனைக் கண்ட பனி போல - உடனடியாக விலகுதல்
 • செத்து செத்து எழும் பீனிக்சு போல - உயிர்த்தெழுதல்
 • புற்றீசல் போல - திடீர் பெருக்கம்
 • பிணம் தின்ற பேய் போல -வேதனையிலும் வேதனை
 • வலையில் அகப்பட்ட மான் போல - வசமாகச் சிக்குதல்
 • நடுக்கடலில் விடப்பட்ட ஈழ அகதி போல - அச்ச உணர்வு
 • வேலியே பயிரை மேய்ந்தது போல -இரண்டகம் (துரோகம்)
 • பஞ்சும் தீயும் அருகில் இருந்தால் போல - விரைவாக உடன்படல்
 • நாய் பெற்ற தெங்கம் பழம் - பயனில்லாமை
 • செகுடன் காதில் சங்கு ஊதுவது போல - பயனற்றது
 • ஆற்றில் ஒரு கால் சேற்றில் ஒரு கால் - உறுதிஇல்லாத தடுமாற்றம்

வெளி இணைப்புகள்[தொகு]

நாட்டுப்புறவியல் இலக்கிய வடிவங்கள் தொகு
பழமொழி | விடுகதை | உவமை | மரபுத்தொடர் | சொலவடை
"https://ta.wikipedia.org/w/index.php?title=உவமை&oldid=3684099" இருந்து மீள்விக்கப்பட்டது