பழமொழி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பழமொழிகள் ஒரு சமுதாயத்திலே நீண்ட காலமாகப் புழக்கத்தில் இருந்து வரும் அனுபவக் குறிப்புகள் ஆகும். [1] பழமொழிகள் அச் சமுதாயத்தினரின் அனுபவ முதிர்ச்சியையும், அறிவுக் கூர்மையையும் எடுத்து விளக்குவதாக அமைகின்றன. இவை நாட்டுப்புறவியலின் ஒரு கூறாகவும் அமைகின்றன. எடுத்துக்கொண்ட பொருளைச் சுருக்கமாகவும் தெளிவுடனும் சுவையுடனும் பழமொழிகள் விளங்கவைக்கின்றன. சூழமைவுக்கு ஏற்றமாதிரி பழமொழிகளை எடுத்தாண்டால் அந்த சூழமைவை அல்லது பொருளை விளங்க அல்லது விளக்க அவை உதவும்.

பழமொழிப் பகுப்புகள்[தொகு]

பழமொழிகள் நாடுகள் வாரியாகவும், மொழிகள் வாரியாகவும் பகுக்கப்பட்டுள்ளன.

தமிழ்ப் பழமொழிகள்[தொகு]

தமிழ் மொழி பேசுபவர்களிடையே வழக்கத்தில் உள்ள பழமொழிகள் தமிழ்ப் பழமொழிகள் என வகைப்படுத்தலாம்.

  1. ஆறிலும் சாவு நூறிலும் சாவு.

விளக்கம் : ஒருவருக்கு சாவு எப்பொழுது வேண்டுமானாலும் வரலாம் அதற்காக பயந்து எந்த வினையும் செய்யாமல் இருக்கக்கூடாது துணிந்து அக்காரியத்தைச்செய்ய வேண்டும்.

வெளி இணைப்புகள்[தொகு]

நாட்டுப்புறவியல் இலக்கிய வடிவங்கள் தொகு
பழமொழி | விடுகதை | உவமை | மரபுத்தொடர் | சொலவடை
  1. முனைவர் இரா.சாவித்திரி தமிழாய்வு இணையக் கல்விக் கழகம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=பழமொழி&oldid=2757652" இருந்து மீள்விக்கப்பட்டது